It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 28 டிசம்பர், 2024

தனியார் வகுப்புகளின் ஆசிரியர்களைப் பகைத்துக் கொண்டால்....

பாடசாலை ஆசிரியர்கள் தங்களது வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு, பணம் அறவிட்டு பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதைத் தடைசெய்து,   மேல் மாகாணத்திற்கு ஏற்ப அனுப்பிவைக்கப்பட்ட சுற்றுநிருபம் கல்வியமைச்சரான, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கண்காணிப்பின்றி  அனுப்பி வைக்கப்பட்டதாகும் என அரச உயர் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதில் தனியார் வகுப்புகளை

புதன், 25 டிசம்பர், 2024

இஸ்லாமிய அறிவுத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவருக்கு ரியாதில் பாராட்டு!

இலங்கையைச் சேர்ந்தவரும் காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவருமான அஷ்ஷெய்க் முஹம்மது ரிஸ்மி முஹம்மது ஜுனைத் அவர்கள் ஸவூதி அரேபியாவிலுள்ள ரியாத் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலைமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களை மிகச் சிறப்பான முறையில் பூர்த்தி செய்ததை முன்னிட்டு ரியாதிலுள்ள இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவருக்கான பாராட்டும் கௌரவமும் ரியாத் நகரிலுள்ள அல்மாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

கபூரியா அறபுக்கல்லூரியில் அதிபராக இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் தலைவராகவும் செயலாளராகவும் இருந்த

சனி, 21 டிசம்பர், 2024

மீண்டும் இனவாதத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் ஞானசார தேரர்


சில மாதங்கள் வாய்பொத்தி மௌனித்திருந்த கலகொடஅத்தே ஞானசார தேரர், மீண்டும் வாய்திறந்து தனது எண்ணப்பாடுகளை வௌியிட்டிருக்கின்றார். சென்ற ஐந்து நாட்களுக்கு முன்னர் சிங்கள ஊடகங்களை அழைத்து, அவர் தனது இனவாதம் கக்குகின்ற, முஸ்லிம்களை குறிவைத்துப் பேசிய ஒலிக்ேகாப்பினை முழுமையாக என்னால் கேட்கமுடிந்தது. 

அதனை வெகுவிரைவில் 'பரிவர்த்தனம்' வலைப்பூவில் இற்றைப்படுத்தவுள்ளேன். தயவுசெய்து சிறுபான்மையினர் மிகவும் விழிப்படைய வேண்டியதற்கான

புதன், 18 டிசம்பர், 2024

க.பொ.த (சா.த) பரீட்சைத் திகதி அறிவிப்பு

2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு. எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர உத்தியோகபூர்வ ஊடக அறிவித்தல் விடுத்துள்ளார்.

மார்ச் மாதம் 17 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த (சா.த) பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி புதன்கிழமை வரை

ஜனாதிபதி அனுரவுக்கு தோள்கொடுக்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில்


இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோரால் முன்வைக்கப்பட்டுள்ள ஒருமைப்பாட்டு அறிக்கை இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் நிலைப்படுத்தி பலப்படுத்துவதற்கு முன்னிற்பதாகவும், அதனை வரவேற்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

செவ்வாய், 17 டிசம்பர், 2024

ஜனாதிபதி நிதியத்தில் கைவைத்தோர் பற்றி போட்டுடைத்தார் அமைச்சர் நலின்த

2005 - 2024 காலப்பகுதியினுள் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் இடம்பெற்ற கொடுப்பனவுகள் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலின்த ஜயதிஸ்ஸ அவர்கள் இன்று (17) பாராளுமன்றில் விசேட கருத்துரை நிகழ்த்தினார். 

அங்கு அவர் உரையாற்றும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். 

'இந்நாட்டுச் சிறார்களுக்கு உதவக்கூடிய முறையில் நிதியம் ஒன்று உள்ளது. 1978 ஆம் இலக்க ஜனாதிபதியின் நிதிய சட்டம்  அது.

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

60 பேரின் கொரிய தொழில்வாய்ப்புக் கனவை சுக்குநூறாக்கிய E8 வீசாக் கதை தெரியுமா?

 

E8 எனும் சர்ச்சை மேலெழுந்துள்ள காரணம் பாதிக்கப்பட்ட 60 பேருக்கும் நீதியான முறையில் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனும் சூழலிலேயாகும். E8 பகுப்பில் கொரிய வேலை வாய்ப்புக்காக தென் கொரியாவின் வந்தோ பிராந்திய மேலதிகாரிகளினால் அதற்கான விசா வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் குறித்த செயற்பாட்டினை இல்லாமற் செய்யும் வண்ணம் அவர்கள் பங்களித்துள்ளனர். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து நிற்போர் கொரியாவுக்குச் செல்வதற்குத் தேவையான தகுதிகளுடன் பணமும் செலுத்தி, தாங்கள் செல்வதற்காக காத்துநிற்கின்றனர். அதனால் அவர்களுக்கு இந்நிலையானது

புதன், 11 டிசம்பர், 2024

இசுருபாய அருகில் நடைபெற்ற எதிர்ப்பின்போது பொலிசாரைக் வெட்டியவர் பற்றி நீதிமன்றில் தெரிவிப்பு

ஆசிரிய நியமனம் கோரி, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் ஒரு பகுதியினர் 2 ஆம் திகதி, பத்தரமுல்ல இசுருபாய கல்வியமைச்சுக்குக்கு முன்பாக நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, கூரிய ஆயுதத்தினால் வெட்டியதன் மூலம் மூன்று பொலிசார்

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

AIDS பற்றி இன்னும் அச்சம் கொள்வதேன்? - வைத்தியர் வினோ தர்மகுலசிங்க

இன்று டிசம்பர் மாதம் முதலாம் திகதி. ஒவ்வொரு ஆண்டினதும் கடைசி மாதத்தின் முதல்நாள். அந்த நாள் பற்றிப் பெரும்பாலானோர் ஆழ்மனதில் கொள்வதற்குக் முக்கிய காரணமாக அமைவது உலக எயிட்ஸ் தினம் World Aids Day நினைவுகூரப்படுவதனாலாகும்.

உலக எயிட்ஸ் தினம் World Aids Day தொடர்பில் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதந்தான் இந்த எயிட்ஸ் தொடர்பிலான கருத்து வௌியானது.

வெள்ளி, 22 நவம்பர், 2024

சிறுபான்மைச் சமூகத்திலிருந்து அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமை வலிதான விமர்சனத்திற்குரியதே!

அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரோ வடக்கு கிழக்குத் தமிழர் ஒருவரோ நியமிக்கப்படவில்லை என்ற விமர்சனம் மிக வலிதானது. அது நிச்சயம் கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

இதை இனமைய அரசியல் (Etno-centric Politics) என்ற தளத்தையும் தாண்டி, விரிந்த பொருளில் நோக்க வேண்டும்.
நேற்று மாலை வரை இதற்கு அவகாசம் இருந்தது. பிரதி அமைச்சர்களது நியமனத்தோடு, இதுவும் நடைபெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர்களது நியமனம் இன்னும் முழுமை பெறவில்லை என்ற தொனிப்பட கருத்துக் கூறியிருந்தமை, இந்த எதிர்பார்ப்பை