It
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 மார்ச், 2025

பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, கருக்கலைப்பு மாத்திரை எடுக்கச் சொன்னான்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் சிறப்பு மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது சந்தேக நபரை விசாரணைக்காக 48 மணி நேரம் தடுத்து வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


சந்தேக நபர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வியாழன், 27 பிப்ரவரி, 2025

மீண்டும் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் ஞானசார

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தான் சிறைத்தண்டனை அனுபவித்தபோது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறினார்.


இஸ்லாத்தை அவதூறு செய்த வழக்கில், 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர், இந்த வாரம் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தினமும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மருத்துவர்கள் பரிந்துரைத்த போதிலும்,

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

அமைச்சர் சரோஜாவின் ஓரக்கண் பார்வையும் கானல் நீராகும் மக்களின் எதிர்பார்ப்பும்

'அமைச்சர் சரோஜாவின் ஓரக்கண் பார்வையும் கானல் நீராகும் மக்களின் எதிர்பார்ப்பும்' எனும் தலைப்பில் மௌலவி நாப்பாவல ரிஷாத் அவர்கள் எழுதிய கட்டுரையும், அந்தக் கட்டுரை பற்றிய வாசகர்களின் கருத்துக்களும் இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றது. 

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் குறித்து பாராளுமன்ற மகளிர்குழு பரிந்துரை

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக் குழு இன்று தனது ஒன்பதாவது அறிக்கை தொடர்பான பரிசீலனையை இன்று நிறைவு செய்துள்ளது.

குறித்த அமைப்பின் பிரதிநிகளும் இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்

புதன், 12 பிப்ரவரி, 2025

பதவியை இராஜினாமாச் செய்வாரா பிரதமர் ஹரிணி?

பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும் அந்நியப்படுத்துவதற்கும் USAID-ல் இருந்து பணம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். 

திங்கள், 10 பிப்ரவரி, 2025

மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்

வெலிகம, மதுராப்புர அஸ்ஸபா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (10) காலை 9.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். ஹிப்ளர் அவர்களை, முன்னறிவித்தலின்றி அதிபர் பதவியிலிருந்து விலக்கியமை தொடர்பில், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாகவே பாடசாலையின்

வெள்ளி, 31 ஜனவரி, 2025

தென் மாகாணத்தில் துறைசார் ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா (Sri Lanka Muslim Media Forum) போரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள்ள, தென் மாகாணத்தில் துறைசார் ஊடகவியலாளர்களை உருவாக்குதல் தொடர்பான நல்லெண்ண கலந்துரையாடல் நிகழ்வு நாளை மறுதினம் (02) வெலிகாமம், அறபா தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு காலை 9.00 முதல் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், சிவில், சமூக சேவைகள் அமைப்புக்களின்

திங்கள், 27 ஜனவரி, 2025

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கு நன்கொடை.!

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 


மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் துணைவியார் பேரியல் அஷ்ரப் மற்றும் புதல்வர் அமான் அஷ்ரப் ஆகியோர் இணைந்து குறித்து நன்கொடையினை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் யூ.எல். அப்துல் மஜீட் அவர்களிடம் கையளித்தனர்.

புதன், 22 ஜனவரி, 2025

லசந்த விக்ரமிங்க - வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் விசாரிப்பதில் சிக்கல் - ஜனாதிபதி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு நீண்ட காலம் கடந்துள்ள நிலையில், கொலையுடன் தொடர்புடையவர்களை விசாரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையை விசாரிக்கும் போது புலனாய்வாளர்கள் சிரமங்களை

அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான திருமண வயது

அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான திருமண வயது -

 பாராளுமன்றில் கலந்துரையாடல்

அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இலங்கைப் பெண் பாராளுமன்ற  உறுப்பினர்கள் குழு,  நேற்றைய தினம் (ஜனவரி 21)  ஒன்று கூடியது, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான சட்டப்பூர்வ குறைந்தபட்ச திருமண வயதை நிறுவும் திட்டம் உட்பட பாராளுமன்ற சீர்திருத்தங்களைப் பற்றிக் கலந்துரையாடியது. 

செவ்வாய், 21 ஜனவரி, 2025

வெலிகம அல்ஹாபிழ் எம்.ஐ.எம். இஃபாஸ் தேசிய ரீதியில் முதலிடம்

வெலிகம - கோட்டகொடையில் அமைந்துள்ள மர்கஸ் அல் ஷபீஃ மத்ரஸாவின் மாணவன் அல்ஹாபிழ் எம்.ஐ.எம். இஃபாஸ் அவர்கள், ஸஊதி தூதரகம் மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில், அகில இலங்கை ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட திறமையுள்ள 50 பேருடன் போட்டியிட்டு தேசிய ரீதியிலான இறுதிப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

திங்கள், 13 ஜனவரி, 2025

அன்று கொடுத்த வாக்குறுதிகள் இன்று காற்றாய்ப் பறக்கின்றனவே!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முதல் சில நாட்களில் காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அக்கட்சியின் உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். 

புதிய வாகனங்களும் வரி மற்றும் விலைகள்.. | இறக்குமதி பற்றிய விபரம்

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், தற்போது சுமார் 300% ஆக உள்ள வாகனங்களுக்கான இறக்குமதி வரிகள் மேலும் உயரக்கூடும் என்றும், சில சொகுசு வாகனங்கள் 600% வரை வரி விகிதங்களைக் காணக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ்,

சனி, 28 டிசம்பர், 2024

தனியார் வகுப்புகளின் ஆசிரியர்களைப் பகைத்துக் கொண்டால்....

பாடசாலை ஆசிரியர்கள் தங்களது வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு, பணம் அறவிட்டு பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதைத் தடைசெய்து,   மேல் மாகாணத்திற்கு ஏற்ப அனுப்பிவைக்கப்பட்ட சுற்றுநிருபம் கல்வியமைச்சரான, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கண்காணிப்பின்றி  அனுப்பி வைக்கப்பட்டதாகும் என அரச உயர் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதில் தனியார் வகுப்புகளை

புதன், 25 டிசம்பர், 2024

இஸ்லாமிய அறிவுத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவருக்கு ரியாதில் பாராட்டு!

இலங்கையைச் சேர்ந்தவரும் காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவருமான அஷ்ஷெய்க் முஹம்மது ரிஸ்மி முஹம்மது ஜுனைத் அவர்கள் ஸவூதி அரேபியாவிலுள்ள ரியாத் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலைமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களை மிகச் சிறப்பான முறையில் பூர்த்தி செய்ததை முன்னிட்டு ரியாதிலுள்ள இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவருக்கான பாராட்டும் கௌரவமும் ரியாத் நகரிலுள்ள அல்மாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

கபூரியா அறபுக்கல்லூரியில் அதிபராக இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் தலைவராகவும் செயலாளராகவும் இருந்த

புதன், 18 டிசம்பர், 2024

க.பொ.த (சா.த) பரீட்சைத் திகதி அறிவிப்பு

2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு. எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர உத்தியோகபூர்வ ஊடக அறிவித்தல் விடுத்துள்ளார்.

மார்ச் மாதம் 17 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த (சா.த) பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி புதன்கிழமை வரை

ஜனாதிபதி அனுரவுக்கு தோள்கொடுக்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில்


இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோரால் முன்வைக்கப்பட்டுள்ள ஒருமைப்பாட்டு அறிக்கை இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் நிலைப்படுத்தி பலப்படுத்துவதற்கு முன்னிற்பதாகவும், அதனை வரவேற்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

செவ்வாய், 19 டிசம்பர், 2017

வைபர் தொழிநுட்பத்தின் மூலம் கணிதப் பாடப் பரீட்சை எழுதிய மாணவனுக்கு விசாரணை!

அநுராதபுர பாடசாலையொன்றில் க.பொ.த (சா.த) மாணவர் ஒருவர் இன்று (18) நடைபெற்ற கணித பாடப் பரீட்சையில், கையடக்கத் தொலைபேசியின் வைபர் மற்றும் இமோ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விடை எழுதியதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை நடாத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

புதன், 5 ஆகஸ்ட், 2015

புனித குர்ஆன் மீது அபாண்டமான குற்றம் சாட்டு!

தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களை நசுக்கின்றனர் என சிங்களவர்களை மூளைச்சலவை செய்வதில் தீவிரம் காட்டும் சுசந்த ரணதுங்க!

சிங்கள மக்கள் தமிழ் - முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதற்காக அநுராதபுரத்திலிருந்து பொதுபல சேனாவின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுணவிலிருந்து போட்டியிடுகின்ற சுசந்த ரணதுங்க சிங்களவர்களை மூளைச் சலவை செய்துவருகின்றார். அவரது பேட்டி சிங்களவர்களுக்கு மத்தியில் வெகுவேகமாக சமூக வலைத்தளங்களின் மூலம் சென்றுகொண்டிருக்கின்றது.

“பரிவர்த்தனம்” வாசகர்கள் அவரது நச்சுக்கருத்துக்கள் அடங்கிய சிங்கள பேச்சின் தமிழ்பெயர்ப்பை இங்கே முழுமையாகப் படிக்கலாம். தமிழ் - முஸ்லிம்கள் அதிகமதிகம் இந்தச் செய்தியின் மூலம் விளிப்படையச் செய்ய தங்களால் ஆன பங்களிப்பைச் செய்யவும்... பகிரவும்.. அவதானமாக இருக்கவும்.

அவரது நச்சுக்கருத்துக்களின் பெயர்ப்பு -

அன்புக்குரிய சிங்களவர்களே!

இது நாம் விளித்துக் கொள்ள வேண்டிய காலம்! எந்நேரமும் சிந்திக்க வேண்டிய காலம்!

சிங்களவர்களின் சிங்கள தேசம் 1500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இந்த சிங்கள நாட்டில் இன்று சிங்களவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது? வில்பத்தில் 600 ஏக்கர்களை ரிஷாத் பதியுத்தீன் கைப்பற்றியிருக்கின்றார். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குத் தனியானதொரு மாகாணம் கேட்கும்போது வடக்கில் விஜயகலா மகேஷ்வரன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அங்கிருக்கின்ற பொலிஸாரை முழுமையாக அனுப்பிவிடுவதாக உரத்துச் சத்தமிடுகின்றார். பிரபாகரனின் மைத்துனன் சிவாஜிலிங்கம் குருணாகலையில் போட்டியிடவுள்ளார். அநுராதபுர சிங்களவர்கள் மரக்கலயர்களுக்கும் (முஸ்லிம்களுக்கும்) தமிழர்களுக்கும் அகப்பட்ட சிறைக்கைதிகளாக இருக்க வேண்டிய நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது. 2500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சிங்கள இனத்திற்கு இன்று இந்நிலையே ஏற்பட்டிருக்கின்றது.

அன்புக்குரிய சிங்கள மக்களே!

சிந்திக்க வேண்டியதொரு காலம் உள்ளது. மிகக் குறுகிய காலம். முஸ்லிம்களின் குர்ஆனில் இருக்கும் விடயம் உங்களுக்குத் தெரியுமா? அந்த குர்ஆனில், ஏதேனும் ஒரு நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை நூற்றுக்கு ஐம்பதைத் தாண்டினால் ஏனைய அனைத்து மக்களும் முஸ்லிம்களாக மாற வேண்டும். முஸ்லிம்களாக மாறாதவர்களை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அல்லாஹ்வின் ஆணை.

இலங்கையில் கடைசியாக கணிக்கப்பட்ட சனத்தொகைக் கணிப்பீட்டின்படி பௌத்தர்கள் 69.5 வீதம் காணப்பட்டனர். தற்போது மிக மிகக் குறுகிய பதினொரு ஆண்டுகளுள் இந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 62 வீதத்திற்கும் குறைவாக உள்ளது. மீதியுள்ள நூற்று 7 அல்லது 8 வீதம் முஸ்லிம்களாக மாறுவதற்கு இன்னும் 10 அல்லது 15 எனும் குறுகிய காலம் மட்டுமே.

என் அன்புக்குப் பாத்திரமான பெற்றோர்களே…

ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.. உங்கள் அன்புக்குரிய மகள் அல்லது சகோதரி “புர்கா” எனும் கறுப்பு ஆடைக்குள் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் புகுந்து கொண்டு முழு உடம்பையும் மறைத்துக் கொண்டு ஒரு மரக்கலயனின் பின் செல்லும் நான்கு பெண்களுள் ஒரு பெண்ணாக இருப்பதற்கு. நீங்கள் இதனை விரும்புகின்றீர்களா? அவ்வாறு விரும்புவதாயின் சிங்களவர்களைக் காட்டிக் கொடுங்கள். 

சிங்களவர்களல்லாத எவனுக்கேனும் உங்கள் வாக்குகளை அளியுங்கள்.
இம்முறை அநுராதபுரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சி, நிறக் கண்ணாடி எதுவாயினும் எக்கொள்கைகளுடன் இருந்தாலும் சிங்களவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டிய காலமே மலர்ந்துள்ளது. எனவே ஒன்றாக – ஒரே சிந்தையுடன் நினைத்துப் பாருங்கள்… 

சிங்களவர்களைத்தான் வெற்றிபெறச் செய்ய வேண்டும். யார் எந்தக் கட்சியிலிருந்து போட்டியிட்டாலும் பரவாயில்லை. சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கவும். நீங்கள் அவ்வாறு வாக்களிக்க வேண்டிய ஒரே ஒரு சிங்களக் கட்சி எதுவென்றால் அதுதான் பொதுபலசேனாவின் “பொதுஜன பெரமுண” அதுதான் சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கவுள்ள ஒரே கட்சி. எனவே பொதுஜன பெரமுணவுக்கு உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள். உங்களுக்காக செத்து மடியவும் நான் தயார். எனவே, அநுராதபுரத்திலிருந்து பொதுஜன பெரமுணவிலிருந்து போட்டியிடும் சுசந்த ரணதுங்க 4 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழில் - கலைமகன் பைரூஸ்



திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கிண்ணஸ் சாதனை… உலகில் வெகுவேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பம் மகிந்தவின் குடும்பமே….?

August 3, 2015 at 12:01 am | Pariwarthanam

உலகில் மிகவும் வேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பமாக இருப்பது மகிந்த ராஜபக்ஷவின் குடும்பமே என பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்.

அது தொடர்பில் கிண்ணஸ் சாதனைப் புத்தகம் குறிப்பிடுவதாக கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் விஷேடமாகத் தெளிவுறுத்தினார்.

எதுஎவ்வாறாயினும் கிண்ணஸ் சாதனைகள் அடங்கிய இணையத்தளத்தில் முழுமையாகத் இவ்வாறான ஒரு குடும்பத்தை தான் உள்ளிட்ட பத்துப் பேர் பலவாறாகத் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை என அவர் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

“பரிவர்த்தனம்” வாசகர்களாகிய உங்களினாலேனும் கண்டுபிடிக்க முடியுமா? எனத் தேடுங்கள்….

இணையத்தள முகவரி
http://www.guinnessworldrecords.com/

(கேஎப்)