ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா (Sri Lanka Muslim Media Forum) போரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள்ள, தென் மாகாணத்தில் துறைசார் ஊடகவியலாளர்களை உருவாக்குதல் தொடர்பான நல்லெண்ண கலந்துரையாடல் நிகழ்வு நாளை மறுதினம் (02) வெலிகாமம், அறபா தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு காலை 9.00 முதல் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், சிவில், சமூக சேவைகள் அமைப்புக்களின்
பிரதிநிதிகள், பிரதேச ஊடகவியலாளர்கள், ஊடக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை ஊடக கழக மாணவர்கள் அதன் பொறுப்பாசிரியர்கள் ஆகியோருக்கு முஸ்லிம் மீடியா போரம் அழைப்பு விடுத்துள்ளது.அழைப்புக் கடிதத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்களை இங்கு தருகின்றோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 1995ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுமார் 34 உறுப்பினர்களுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கான ஒரு நலன்புரி அமைப்பாகும். இந்த நாட்டில் உள்ள அரச, தனியார், அச்சு, இலத்திரன்கள் மற்றும் இணைய ஊடகங்களில் சேவையாற்றும் சுமார் 980ற்கும் அதிகமான துறைசார் ஊடகவியலாளர்களை தற்போது அங்கதவர்களாக கொண்ட ஒரு பாரிய பலம் வாய்ந்த முன்னணி அமைப்பாக சேவையாற்றி வருகின்றமை விஷேட அம்சமாகும். அல்ஹம்து லில்லாஹ்
சுமார் 29 ஆண்டுகளுக்கு மேலாக இன, மத பேதங்களுக்கு அப்பால் ஏனைய பிரதான ஊடக அமைப்புக்களுடன் புரிந்துணர்வுடன் ஊடக சுதந்திரம், நாட்டின் இறைமை மற்றும் தேசிய ஒருமைபாட்டிற்காக ஒன்றுபட்டு பணியாற்றிவரும் நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் எமது சமூகத்தின் குரலாகவும், எமது ஊடகவியலாளர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் துறைசார் பயிற்சிகள், நலன்புரி நடவடிக்கைகள், வாடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அடிப்படை பயிற்சிகளையும், பாடசாலை மாணவர்களுக்கும் அதன் ஊடக கழகங்களுக்குமான மாவட்ட மட்டத்திலான ஒருநாள் செயலமர்வுகளையும் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக நடந்தி வரும் பிரதான அமைப்பு என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது நீண்ட கால பயணத்தின் ஓர் அங்கமாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2025.02.02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேசிய சுதந்திரன தினத்தை ஒட்டியதாக தென் மாகாணத்திற்கு தமது நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என்பதை அறியத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
தென் மாகாணத்தை பொருத்தமட்டில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் இதுவரை காலம் இருந்து வந்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைவடைந்து தற்பொழுது விரல்விட்டு எண்ணும் அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது என்பது எம்மால் அவதானிக்க முடிந்துள்ளது.
இவற்றை கருத்திற் கொண்டு ஊடசுத்துறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல நோக்கில் தங்களது பிரதேசத்திற்க கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இங்குள்ள ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், சிவில், சமூக சேவைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச ஊடகவியலாளர்கள், ஊடக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை ஊடக கழக மாணவர்கள் அதன் பொறுப்பாசிரியர்கள் என்ற அடிப்படையில் பலதரப்பட்டவர்களுடனான இரு அமர்வுகளாக ஒரு திறந்த கலந்துறையாடல் ஒன்றை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம்.
எனவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷனாம் அல்ஹாஜ் என். எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ள வழிகாட்டல் கருத்தரங்கிற்கு தங்களது பாடசாலை ஊடக கழக, உயர்தர வகுப்பு மாணவர்கள் 05 மற்றும் அதன் பொறுப்பாசிரியர்களை அனுப்பி வைக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக