தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முதல் சில நாட்களில் காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அக்கட்சியின் உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த வாகனங்கள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும், ஆனால் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
முன்பு பாராளுமன்ற உணவகத்தில் சாப்பிடுவதில்லை என்று சொன்னவர்கள் இப்போது அதை மறந்துவிட்டு மூன்று வேளையும் பாராளுமன்றில் சாப்பிடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், தனியான இருப்பிடங்கள் அனைத்தையும் மறுத்த எம்.பி.க்கள் இன்று அனைத்தையுமே பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இன்றைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிட்டு மக்களுக்கு செவிசாய்க்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (பரிவர்த்தனம்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக