வெலிகம - கோட்டகொடையில் அமைந்துள்ள மர்கஸ் அல் ஷபீஃ மத்ரஸாவின் மாணவன் அல்ஹாபிழ் எம்.ஐ.எம். இஃபாஸ் அவர்கள், ஸஊதி தூதரகம் மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில், அகில இலங்கை ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட திறமையுள்ள 50 பேருடன் போட்டியிட்டு தேசிய ரீதியிலான இறுதிப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
முதலிடம் பெற்றமைக்காக மாணவனுக்கு பரிசிலாக இலங்கை நாணயப்படி ரூபா 600,000.00 வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஹாபிஸ் மாணவன், தான் காரியாகவும், ஆலிமாகவும் வருவதற்காக சிறந்த முறையில் கற்று வருகின்றார் என, குறித்த மத்ரஸாவின் அதிபர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ், மௌலவி அப்துல்லாஹ் (அல்ஜாமிஈ) குறிப்பிட்டார்.
'பரிவர்த்தனம்' குறித்த மாணவனின் எதிர்காலம் சிறக்க மனமார வாழ்த்துகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக