ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு நீண்ட காலம் கடந்துள்ள நிலையில், கொலையுடன் தொடர்புடையவர்களை விசாரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையை விசாரிக்கும் போது புலனாய்வாளர்கள் சிரமங்களை
எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சாட்சி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், தாஜுதீனின் கொலையை விசாரித்த சட்ட வைத்திய அதிகாரியும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சூழ்நிலைகளால், இந்த விசாரணையில் சிரமங்கள் எழுந்துள்ளன எனவும், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிரச தொலைக்காட்சியின் 'சடன' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(பரிவர்த்தனம்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக