கொழும்பின் வீதிகளில் அண்மையில் அரங்கேறிய ஒரு சம்பவம், இலங்கையின் சமகால சமூக, அரசியல் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பாரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகியதாகக் கூறப்பட்டு, பௌத்த பிக்கு ஒருவர் கைகளைக் கூப்பியவாறு அம்புலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியானது, நாட்டின் பிரதான ஊடகங்களையும் தாண்டி சமூக வலைத்தளங்களை உலுக்கியுள்ளது. ஒருபுறம்













