It

ஞாயிறு, 1 மார்ச், 2026

ஈரானின் உச்சத் தலைவர் அலி கொமைனி பற்றி அறிய வேண்டியவை

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஈரானை வழிநடத்திய உச்சத் தலைவரான Ayatollah Ali Khamenei, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன் உண்மைத் தன்மை தற்போது வௌியாகியுள்ளன. அந்தத் தாக்குதலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.


ஆரம்ப வாழ்க்கை மற்றும் புரட்சிப் பின்னணி

1939 ஏப்ரல் 19 அன்று ஈரானின் வடகிழக்கு பகுதியிலுள்ள Mashhad நகரில் பிறந்த கொமைனி , இளம் வயதிலேயே ஷியா மதப் பயிற்சியில் ஈடுபட்டார்.

1979 ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற மன்னர் Mohammad Reza Pahlavi ஆட்சியை கலைத்த Iranian Revolution புரட்சியில் முக்கிய பங்காற்றிய இஸ்லாமிய இயக்கத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

அந்தப் புரட்சியின் ஆன்மீகத் தலைவரான Ruhollah Khomeini அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்த கொமைனி, புரட்சிக்குப் பின்னர் அரசியல் அதிகாரத்தில் உயர்ந்து வந்தார்.

ஜனாதிபதியிலிருந்து உச்சத் தலைவராக...

1981 முதல் 1989 வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய கொமைனி, 1989 ஆம் ஆண்டு Ruhollah Khomeini மரணித்தபின், “நிபுணர்கள் சபை” (Assembly of Experts) அவரை புதிய உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

அப்போது ஷியா மதகுருமார்களின் மரபு மற்றும் அந்தஸ்து என்பன அவருக்குக் குறைவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் அரசியலமைப்பில் திருத்தம் செய்து, அவரை உச்சத் தலைவராக பதவியேற்க அனுமதிக்கப்பட்டது.

அதிகாரக் கட்டுப்பாடு மற்றும் ஆட்சி முறை

1989 முதல் ஈரானின் உச்ச அதிகாரியாக இருந்த கமேனி, நாட்டின் அரசியல், பாதுகாப்பு மற்றும் நீதித்துறை அமைப்புகளின் மீது வலுவான கட்டுப்பாட்டை நிலைநிறுத்தினார்.

அவரது ஆட்சிக்காலத்தில்:

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான எதிர்ப்பு நிலைப்பாடு, உள்ளக எதிர்ப்புகளை அடக்கும் கடுமையான நடவடிக்கைகள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது கட்டுப்பாடுகள்
போன்றவை முக்கிய அம்சங்களாக இருந்தன.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் United Nations அறிக்கைகளின் படி, அவரது ஆட்சிக் காலத்தில் மரண தண்டனைகள் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் குறைந்தது 975 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகவும், 2025 ஆம் ஆண்டில் 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிராந்திய அரசியல் மற்றும் ஆயுத ஆதரவு

கொமைனியின் கீழ், ஈரான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தியது.

அதன்படி Hamas (காஸா), Hezbollah (லெபனான்), Houthis (யெமன்) போன்ற அமைப்புகளுக்கு நிதி மற்றும் இராணுவ ஆதரவு வழங்கப்பட்டதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன.

இது ஈரானின் “எல்லைக்கு அப்பாலான பாதுகாப்பு உத்தி” எனக் கருதப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

கமேனிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். அவரது ஆட்சிக் காலத்தில் ஏழு ஜனாதிபதிகள் பணியாற்றியுள்ளனர்.


அவர் ஒரு கடும்போக்கு மதகுருவாகவும், பாரம்பரிய இஸ்லாமிய மதவாத சிந்தனையின் ஆதரவாளராகவும் கருதப்பட்டார்.


அலி கொமைனியின் ஆட்சி, ஈரானின் அரசியல் மற்றும் மத அமைப்பை ஆழமாக மாற்றியதுடன், மத்திய கிழக்கு அரசியல் சமநிலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவரது மரணம் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு, அவருக்குப் பின்னர் அவரது மகன்மார்களில் ஒருவரான முஜ்தபா கொமைனியை அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரியவருகின்றது.

அது ஈரானின் அரசியல் எதிர்காலத்திலும், உலக அரசியல் சூழலிலும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக