It
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஜனவரி, 2015

மழை! | மஹகம சேக்கர கவிதை


கடும் காற்றுதாவரங்களை வீழ்த்தி
மின்னல் இடிமுழங்கி
மழை மேகமொன்று
திடீரென்று கீழே மழை பொழிந்தது..!

காலத்திற்குக் காலம்
வாழையடி வாழையாய்
உலகத் தொடக்கம் முதல்
இதுவரை இலட்சக் கணக்கிலான
காதலர்களின்
சூடான கண்ணீர் கட்டிகளால்
மழைத்துளி வெளியேறியதாய்
நான் நினைத்தேன்...

-மஹகம சேக்கர
தமிழில் - கலைமகன் பைரூஸ்

16.01.2015




கவிஞன்!

அவன் யார்?
நான் கேட்கிறேன்.
அவன் ஒரு பைத்தியம்.
அவர்கள் சொன்னார்கள்.
அவன் ஒரு பைத்தியம்?
நான் கேட்கிறேன்.
ஆம், அவன் பாதிப்பில்லாத
ஓர் ஏழைப் பைத்தியம்.
அவர்கள் சொன்னார்கள்.
அவன் ஒரு விநோதமானவன்,
உங்களுக்குத் தெரியுமா?
அவன் சதாவும்
தன்னுடன் தானே
பிதற்றிக் கொள்வான்.
அவர்கள் சொன்னார்கள்.
அவன் காற்றையும்
மேகங்களையும் பற்றிப்
பேசுவான்.
அவன் மலைகளையும்
பூக்களையும் பேசுவான்.
அவன் மிகவும்
விநோதமானவன்.
அவனைச் சுற்றி
என்னதான் நடக்கின்றது
என்று அவன் அறியான்!
ஆனால் அவன்
நட்சத்திரங்களையும்
சந்திரனை சூரியனைப்
பேசுவான்.
அவன் உன்னைப் பற்றி
பேசினானா என
நான் கேட்டேன்.
ஆம்...
அவன் எங்களைப் பற்றி
பேசவில்லை.
உன்னைப் பற்றியும்
ஏனையவர்கள் பற்றியும்
ஒருபோதும்...
அவன் பேசாத
ஏதும் உள்ளதா?
நான் கடைசியாகக் கேட்டேன்.
அவர்கள் சொன்னார்கள்.
ஆம்,
சில விடயங்களை
பற்றிப் பேசுவான்.
அந்த ஏழைப் பையன்.
மீண்டும் அவன்
அவனைப் பற்றியே
ஏதோ பிதற்றுகிறான்.

-பிரகாஷ் சுபேதி (நேபாளக் கவிஞர், எழுத்தாளர்)
ஆங்கில வழி தமிழில் - கலைமகன் பைரூஸ்
16.01.2015
<<<<Prakash Subedi’s first collection of poems, Stars and Fireflies, was published recently. Subedi, who is affiliated with the Aarohan Gurukul Theatre and the Society of Nepali Writers in English (NWEN), currently teaches at the Dillibazaar Kanya Campus. V.E.N.T! Magazine met up with this budding poet to hear his perspective on literature, life and poetry.>>>>

புதன், 24 டிசம்பர், 2014

எனக்குப் பயனேது? (கவிதை)



வைத்தியர் கொடுத்த துண்டு என் கையிலே
மருந்து வாங்க ஐந்து சதம் இல்லை கையிலே
மரண பயம் இப்போது என் மனதிலே 
கொடுத்த துண்டினால் பயனேது என்னிலே!

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

திலீபன்!



இலங்கையில் சிங்கள மொழியில் எழுதும் கவிஞராகவும், எழுத்தாளராகவும்,ஊடகவியலாளராகவும் அறியப்பட்டிருக்கும் கசுன் மஹேந்திர ஹீனடிகல திலீபன் பற்றி எழுதியுள்ள கவிதை .....

புன்னகைக்கும் இதயம்
கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும்
அழத் தோன்றும் முகத் தோற்றம்
நேசத்தை யாசிக்கும்
யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து
இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் !
திலீபன் ! காற்றில் உதித்தவன் !
நெஞ்சங்களில்
அநேகமானவற்றை விட்டுச் சென்ற
முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில்
ஒரு ‘கமா’வாக மறைந்த
விலைமதிப்பற்ற யௌவனத்தை
கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த
நேர்மையான புன்னகையும்
தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன்
அன்றிலிருந்து இன்று வரை
கண்ணீர் ருசிக்கும் அன்னையர்
கைகளிலில்லா ஐவிரல்களையும்
தேடியலையும் தந்தையர்
ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும்
புதல்வர்களின் சடலங்களின் மீது
ஓலமிட்டழுபவர்கள்
எல்லா இடங்களிலிலும்
இருக்கிறார்கள் திலீபன்
எரியும் விளக்கின் சுடரின்
கதைகளைக் கேட்கும் இருளும்
‘பொறுமையை மாத்திரமே கைக்கொள்வோம்’
என்றே முனகும்
உருவாக்கப்பட்ட நாடகக் கோமாளிகள்
விலகிச் செல்லும் கூடமும்
‘உண்ணாவிரதம் இருப்பது
எப்படியெனக் காட்டுகிறேன்’ எனக் கூறி
மீண்டும் திலீபனுடன் அமைதியாகும்
நல்லூர் வானம் எனப்படுவது
வெடிப்புற்ற பூமியென அறிந்து
சூரிய, சந்திரர்களை விடவும்
கருமுகில்கள் அணி திரளும்
வாழ்க்கையில் சிறந்தவற்றை
கோணலாகிய தினங்களிடையே ஒளித்து
சுவாசத்தை உடைத்துடைத்துப் பகிர்ந்து
இதயத் துடிப்பு உறைந்ததோ திலீபன் அண்ணா…

- கசுன் மஹேந்திர ஹீனடிகல
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

வெள்ளி, 21 ஜூன், 2013

மண்ணறையில் மலர்ந்த மலர்! - மஹகம சேக்கர


நேற்றிரவு தூக்கத்தில் இறந்துபோன நான்
கிழிந்த புடைவையினால் மூடிக்கொண்டு
மரணத்தை கையிலேந்திக் கொண்டுபோய்
எனது கைகளினால் மண்ணறையில்  புதைத்தேன்.

அதன்பின் புதைகுழியின் பக்கம் முழந்தாழிட்டு
எனது கண்ணீரிலிருந்து உரத்தைப் பெற்று
மண்ணறையிலிருந்து மலர்ச்செடியொன்று மேலெழுந்தது..

ஆண்டு நூறு கழிந்ததன்பின் மீண்டும் நான்
எனது மரணம் புதைக்கப்பட்ட சவக்காட்டுக்கு செல்கையில்
அந்த மலர்ச் செடியிலிருந்து வெண்ணிற ©ங்கொத்து
மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்தது....

ஆயினும் பூவிலிருந்து வந்த நறுமணத்தை நுகர
எனக்குப் புண்ணியமில்லை - துக்கத்தோடு மடிந்த எனக்கு

நிரந்தரத் தூக்கத்தினால் நான்
புலன்கள் ஒடுக்கப்பட்டு நித்திரை செய்யப்பட்டுள்ளேன்.


சிங்களம் மூலம்: கவிஞர் மஹகம சேக்கர
தமிழில்: 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்