கடும் காற்று, தாவரங்களை வீழ்த்தி
மின்னல் இடிமுழங்கி
மழை மேகமொன்று
திடீரென்று கீழே மழை பொழிந்தது..!
காலத்திற்குக் காலம்
வாழையடி வாழையாய்
உலகத் தொடக்கம் முதல்
இதுவரை இலட்சக் கணக்கிலான
காதலர்களின்
சூடான கண்ணீர் கட்டிகளால்
மழைத்துளி வெளியேறியதாய்
நான் நினைத்தேன்...
-மஹகம சேக்கர
தமிழில் - கலைமகன் பைரூஸ்
16.01.2015







.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக