நுவரெலியா நீதவான் நீதிமன்றின், வழக்குப் பொருட்கள் வைத்திருக்கும் அறையிலிருந்து பெறுமதிமிக்க காணாமற் போனமை தொடர்பில், பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, தேடுதலில் ஈடுபட்டபோது, குறித்த பெறுமதிமிக்க தொலைபேசியைத்த திருடியிருப்பவர் அந்த நீதிமன்றில் பணிபுரிகின்ற பெண் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு, நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண்மணியை இம்மாதம் 09 ஆம் திகதி வரை சிறையில் வைப்பதற்கு நீதவான் செல்வி பிரபுத்திகா லங்காகனி கட்டளையிட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த பெண் உத்தியோகத்தர், ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது, நீதிமன்றிற்குச் சொந்தமான பொருட்களை வைக்கும் அறையிலிருந்து குறித்த பெறுமதிமிக்க தொலைபேசியைத் திருடி, தனது காதலனுக்கு கையளித்தமை பற்றித் தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக