It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 14 ஜனவரி, 2025

PhD பட்டம் ஒன்றின் உண்மையை கண்டறிவது எப்படி? - கலாநிதி M C ரஸ்மின்

சபா நாயகர் பதவி விலகிய பின்னரும், போலியாக பெற்றுக்கொள்ளப்பட்ட PhD பட்டம் ஒரு முக்கியமான பிரச்சினையாகப் பேசப்படுகின்து. PhD பட்டம் ஒன்றின் உண்மையை கண்டறிவது பற்றி நண்பர்கள் சிலரது வேண்டுகோளுக்கு இணங்க, இப்பதிவு எழுதப்படுகிறது.
தெளிவாக – சந்தையில் போலியான PhDகள் பல உள்ளன.
சிலர் தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு பணம் செலுத்தி தங்கள் சார்பாக PhDக்கான ஆராய்ச்சியை எழுதிக் PhD பெறுகின்றனர்.
சிலர் தரமற்ற ஆராய்ச்சியை ஊர் பெயர் அறியாத பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பித்து, பணத்தையும் செலுத்தி, PhD பட்டத்தினைப் பெற்றுக் கொள்கின்றனர்.
இன்னும் சிலர் – தாம் தமிழில்/சிங்களத்தில் எழுதிய புத்தகங்களை (இவை முறையான ஆய்வுகள் அல்ல) பணம் செலுத்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து, அவற்றை வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பித்து, ஒரு தொகை பணத்தையும் கொடுத்து, பட்டத்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இன்னும் பல வகைகளில் போலியான பட்டங்களை சிலர் பெற்றுக் கொள்ள முடியும்.
​கௌரவக் கலாநிதிப் பட்டம் - அது வேறு ஒரு வகை. இப்பதிவு அது பற்றியதல்ல.
துரதிஷ்டவசமாக, ஆய்வுகளுக்காக பெற்றுக்கொள்ளப்படுகின்ற பட்டங்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையில் எந்த நிறுவனங்களும் இல்லை.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கலாநிதி பட்ட ஆய்வுகளின் உண்மை தன்மை/தரம் பற்றிய பரிந்துரைகளை வழங்குவதும் இல்லை.
இருப்பினும், PhDயின் சட்டபூர்வமான தன்மையை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானதல்ல.
முதலில், உண்மையான PhD என்பது முறையான பதிவு செயல்முறையை உள்ளடக்கியது.
ஒரு முறையான PhD, 3 முதல் 5 வருட முயற்சியாகும். கலாநிதி பட்ட ஆய்வொன்றை மேற்கொள்ள விரும்புகின்ற ஒருவர், முதலில் அதற்காக குறித்த பல்கலைக்கழகம் ஒன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் போது ஆரம்பகட்ட பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் ஆய்வு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். அது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், கற்கையை தொடர்வதற்காக பெரும்பாலும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும். அப்போது, பல்கலைக்கழகங்களில் உயர் பட்டப்படிப்பு பிரிவு, குறித்த ஒருவரின் கலாநிதி பட்ட ஆய்வுக்கான தலைப்பை அங்கீகரித்து உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை வழங்கும். அனேகமாக, அதே கடிதத்தில் குறித்த கலாநிதி பட்ட ஆய்வுக்கான மேற்பார்வையாளர்கள் பற்றிய விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஒரு ஆய்வு மாணவருக்குப் பெரும்பாலும் இரண்டு ஆய்வு மேட்பார்வையாளர்கள் வழங்கப்படுவதுண்டு. அவர்கள் ஆய்வுப் பணியை மேற்பார்வை செய்வார்கள். அவர்கள் குறித்த துறையில் ஏற்கனவே PhD முடித்தவராக இருப்பார்கள்; அல்லது, பேராசிரியர்களாக இருப்பார்கள்.
PhD மாணவர் மற்றும் அவரின் மேற்பார்வையாளர்களுக்கு இடையே இடம்பெறும் சந்திப்புகள் ஆவணப்படுத்தப்படுவதும் உண்டு.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், ஒரு ஆய்வு மாணவர், தனது பல்கலைக்கழகத்திற்கு வருடாந்த கட்டணத்தையும் செலுத்துவார்.
சில சந்தர்ப்பங்களில், PhD கற்கையின் ஒரு பகுதியாக குறைந்தது ஆறு மாதங்களுக்கு சில அடிப்படை வகுப்புகள் (Coursework) இடம் பெறும். இதில், ஆய்வு முறையியல், அடிப்படை புள்ளி விபரவியல் மற்றும் ஆய்வு தலைப்போடு தொடர்பான சில கற்கைகள் இடம்பெறும்.
ஆய்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில், சில பல்கலைக்கழகங்கள், தாம் வழங்குகின்ற கலாநிதி பட்டத்தின் தரத்தை பேணிக் கொள்கின்ற வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு. அதற்காக, ஆய்வு மாணவர்கள் தமது ஆய்வறிக்கையின் சில பாகங்களை, சுட்டெண் குறிப்பிடப்பட்ட ஆய்வறிக்கைகளில் (Indexed journal) பிரசுரிப்பதை கட்டாயமாக்கியுள்ளனர். சில பல்கலைக்கழகங்கள் இவ்வாறு செய்வதில்லை.
ஒருவர் கலாநிதி பட்ட ஆய்வினை மேற்கொள்கின்ற காலப்பகுதியில் சுட்டடெண் குறிப்பிடப்பட்ட ஆய்வேடுகளில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளில், ஆய்வு மேற்பார்வையாளர்களின் பெயர்கள் இணை ஆசிரியர்களாக குறிப்பிடுவது கட்டாயமாகும். எனினும், இவ்வாறு செய்யாமலும் ஒருவர் கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
கலாநிதி பட்டத்துக்கான ஆய்வினை நிறைவு செய்து கொண்ட ஒருவர், தனது ஆய்வறிக்கையை முன் அளிக்கை (Pre-submission) செய்ய வேண்டும். இதன்போது குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு குழு ஆரம்ப கட்ட திருத்தங்களையும் பரிந்துரைகளையும் வழங்கும்.
இந்த செயல்முறையின் பின், பல்கலைக்கழகம் ஆய்வுத் திருட்டு சோதனையை நடத்தும். பேலியன ஆய்வுகளுக்கு இது தேவையில்லை.
அதன் பின்னரே இறுதி ஆய்வு சமர்ப்பிக்கப்படும்.
இதன்போது, குறித்த பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு, மற்றும் வெளிவாரி ஆய்வு மேட்பார்வையாளர்கள் போன்றோர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் முன்னிலையில்தான் இறுதி ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். அப்போது குறித்த ஆய்வு திருத்தங்களுடன் அல்லது திருத்தங்கள் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படும். சில போது நிராகரிக்கப்படுவதும் உண்டு. இவை யாவும் நேர்த்தியாக ஆவணப்படுத்தப்படும். இவற்றை குறித்த பல்கலைக்கழகம் பாதுகாப்பாக வைத்திருக்கும். இறுதியாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சில நாட்களில் அல்லது சில மாதங்களில் உத்தியோகபூர்வமான கடிதம் ஒன்றின் மூலம் ஒருவர் கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்டதற்கான அறிவித்தல் வழங்கப்படும்.
சில பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட கலாநிதி பட்ட ஆய்வுகளை தமது இணையதளங்களில், அல்லது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் பகிரங்கமாக பிரசுரிப்பதுண்டு. இது ஒருவரது ஆய்வின் உண்மை தன்மையை மேலும் அதிகரிக்கும்.
முறையாக கலாநிதி பட்டத்தினை பெற்றுக் கொண்ட ஒருவரிடம், தனது சான்று பத்திரத்துக்கு மேலதிகமாக, மேலே குறிப்பிட்ட ஆவணங்களில் சிலதாவது இருக்க வேண்டும். போலி கலாநிதிகளை கண்டறிய, பின்வரும் கேள்விகளை கேட்டால் சரி;
1. When did you register for your PhD?
2. How much did you pay for your PhD program?
3. When did you submit your research proposal?
4. Who were your research supervisors?
5. How did you work with your supervisors during your PhD?
6. How much did you pay in course fees during your PhD?
7. How many times did you pay the course fees?
8. How did you make your fee payments (e.g., bank transfer, online payment, etc.)?
9. Did you pay directly to the university or did you pay through local agents?
10. Did you publish any journal articles during your PhD?
11. Did you participate in a pre-submission seminar or presentation?
12. When did you attend your viva voce (oral defense)? Who were the examiners or committee members present during your viva voce?
13. What is the name of your research supervisor(s)?
14. Can you provide a copy of your thesis or research project?
15. Where was your thesis published (if applicable)?
16. How many years did it take you to complete your PhD?
17. Were there any external examiners involved in your thesis review?
18. Did you receive any formal feedback or revisions after your submission?
19. What is the title of your dissertation or thesis?
20. Can you provide official confirmation from your university about your PhD status?
21. Did you attend any academic conferences or seminars related to your research?
22. How did you receive your PhD certificate? (e.g., by post, in person, etc.)
23. Did the university provide any documentation to verify the authenticity of your degree?

- கலாநிதி எம்.சீ. ரஸ்மின்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக