பாடசாலை ஆசிரியர்கள் தங்களது வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு, பணம் அறவிட்டு பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதைத் தடைசெய்து, மேல் மாகாணத்திற்கு ஏற்ப அனுப்பிவைக்கப்பட்ட சுற்றுநிருபம் கல்வியமைச்சரான, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கண்காணிப்பின்றி அனுப்பி வைக்கப்பட்டதாகும் என அரச உயர் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதில் தனியார் வகுப்புகளை
நடாத்திய ஆசிரியர்களின் பங்களிப்பும் இருப்பதால், தனியார் வகுப்புகளை நடாத்துவதை தற்போதைய அரசாங்கம் தடைசெய்யுமாயின், எதிர்வரும் தேர்தலில் அது பாரிய தாக்கம் செலுத்தும் எனவும், இவ்விடயம் தொடர்பில் அரச தரப்பினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்களிடம் கேட்டபோது, அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
'இந்த சுற்றுநிருபமானது புதியதொன்று அல்ல. தற்போதைக்கு மத்திய, வட மத்திய, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் செயற்பாட்டில் உள்ளது. தமது பாடசாலைகளில் கற்பிக்கும் பிள்ளைகள் தங்களது பிரத்தியேக வகுப்புகளுக்கு வராமை தொடர்பில் ஆசிரியர்கள் பிள்ளைகளை பல்வேறு விதத்திலும் துன்புறுத்துவது தொடர்பில் அவர்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
'ரியுஷன் மாபியா' எங்கள் நாட்டின் கல்விக்கு ஓர் அச்சுறுத்தலாகும். உயர்தரப் பரீட்சை பிற்போவதற்குக் காரணமாக இருந்ததும் இந்து ரியுஷன் மாபியாவே. பிரத்தியேக வகுப்புகளின்றி பரீட்சையில் சித்தியடைய முடியாது என்ற எண்ணப்பாட்டை பெற்றோரின் உள்ளங்களில் திணித்திருக்கிறார்கள். எனவே அரசாங்கம் இதற்கு ஆணித்தரமான முடிவு கட்ட வேண்டும்'
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் அசோக்க சந்திரசேகர் இதுதொடர்பில் கருத்துரைக்கும்போது, அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்து பிரத்தியேக வகுப்புகளையும் அவதானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எந்தவொரு சிறந்த ஆசிரியரும் தன்னிடம் கற்கின்ற மாணவனை, தனது பிரத்தியேக வகுப்பில் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளமாட்டார் எனவும் எஅவர் மேலும் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக