It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 18 டிசம்பர், 2024

ஜனாதிபதி அனுரவுக்கு தோள்கொடுக்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில்


இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோரால் முன்வைக்கப்பட்டுள்ள ஒருமைப்பாட்டு அறிக்கை இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் நிலைப்படுத்தி பலப்படுத்துவதற்கு முன்னிற்பதாகவும், அதனை வரவேற்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

விசேட அறிவித்தலொன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிவித்தல் பின்வருமாறு உள்ளது.

VIII ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அறிவித்தல்

பிரதமர் நரேந்திரமோஇ மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோரினால் சென்ற 2024 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி புதுடில்லியில் அறிவிக்கப்பட்ட ஒருமைப்பாட்டு அறிக்கை இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் நிலைப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் ஆவன செய்யும் என்பதால் அது பெருமனதோடு வரவேற்கத்தக்கதாகும். 

மேலும் பிராந்திய வலுசக்தி மற்றும் கைத்தொழில் கேந்திரநிலையமாக திருகோணமலையை அபிவிருத்தி செய்து, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை (இட்கா) (Economic and Technical Cooperation Agreement) முன்னேற்றவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக