E8 எனும் சர்ச்சை மேலெழுந்துள்ள காரணம் பாதிக்கப்பட்ட 60 பேருக்கும் நீதியான முறையில் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனும் சூழலிலேயாகும். E8 பகுப்பில் கொரிய வேலை வாய்ப்புக்காக தென் கொரியாவின் வந்தோ பிராந்திய மேலதிகாரிகளினால் அதற்கான விசா வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் குறித்த செயற்பாட்டினை இல்லாமற் செய்யும் வண்ணம் அவர்கள் பங்களித்துள்ளனர். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து நிற்போர் கொரியாவுக்குச் செல்வதற்குத் தேவையான தகுதிகளுடன் பணமும் செலுத்தி, தாங்கள் செல்வதற்காக காத்துநிற்கின்றனர். அதனால் அவர்களுக்கு இந்நிலையானது உண்மையிலேயே பாரிய துன்பியல் நிகழ்வாகவே இருக்கின்றது. 'கொரியாவின் E8 வீசாக்களுக்கு அவசரமாக பியுரோ அனுமதியை உடன் பெற்றுத் தாருங்கள்' என்று சென்ற நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும், தொடர் சத்தியாக்கிரகப் போராட்டமும் இதனால்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரேயே இதுதொடர்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போதும், வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் வீசா அனுமதி வழங்கப்படவில்லை E8 வீசா வழங்கப்பட்டும் பியுரோவினால் அதிருப்திக்குள்ளாகியுள்ள இந்த அப்பாவிகளுக்காக குரல் கொடுப்பதற்காக முன்வந்தவர் சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன அவர்களே. குறித்த தொழில் ஒப்பந்தத்திற்கு ஏற்ப, இவர்கள் வீசாக்கால முடிவுத் திகதி பற்றிக் குறிப்பிட்டு நடாத்திய ஆர்ப்பாட்டத்தின்போது குறித்த சட்டத்தரணியின் உதவி அவர்களுக்குக் கிடைத்து என்பது குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக