It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 25 டிசம்பர், 2024

இஸ்லாமிய அறிவுத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவருக்கு ரியாதில் பாராட்டு!

இலங்கையைச் சேர்ந்தவரும் காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவருமான அஷ்ஷெய்க் முஹம்மது ரிஸ்மி முஹம்மது ஜுனைத் அவர்கள் ஸவூதி அரேபியாவிலுள்ள ரியாத் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலைமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களை மிகச் சிறப்பான முறையில் பூர்த்தி செய்ததை முன்னிட்டு ரியாதிலுள்ள இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவருக்கான பாராட்டும் கௌரவமும் ரியாத் நகரிலுள்ள அல்மாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

கபூரியா அறபுக்கல்லூரியில் அதிபராக இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் தலைவராகவும் செயலாளராகவும் இருந்த

மறைந்த அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் அவர்களின் மருமகனான ரிஸ்மி அவர்களுக்கான இப்பாராட்டு விழாவில் காலி இப்னு அப்பாஸ் அறபுக்கல்லூரியின் பணிப்பாளரும் அல் இஸ்ஹான் நலன்புரி அமைப்பின் தலைவருமான அஷ்ஷெய்க் பத்ஹுர்ரஹ்மான் (பஹ்ஜி) அவர்கள் உட்பட இலங்கையிலுள்ள பல்வேறு சமூக நல அமைப்பின் பிரமுகர்கள் உலமாக்களும் கலந்துகொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தனர்.

காலியிலுள்ள இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரி அறபு மற்றும் ஷரிஆ மாணவர்களை உருவாக்குவதோடு குர்ஆன் மனனம் செய்த ஹாபிழ்களையும் உருவாக்கி வருகிறது.

இக்கல்லூரியின் மாணவர்கள் இஸ்லாமிய உயர்கல்விதுறையில் பல அறபு நாடுகளில் உயர் பல்கைலக்கழகங்களில் கற்று முஸ்லிம் சமூகத்திற்கு பயனுள்ள கல்விமான்களை உருவாக்குவதில் பங்களிப்புகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களும்    இலங்கை அல்ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் செய்ஹுத்தீன் (மதனி),  இலங்கை தகாதுப் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் இஸ்ஹாக் (அப்பாஸி), ரியாத் மாநகரில் தஃவா மற்றும் அழைப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அஷ்ஷெய்க் மப்ஹூம் (பஹ்ஜி), அஷ்ஷெய்க்  ளபருள்ளாஹ் (பஹ்ஜி), அஷ்ஷெய்க் ரிப்லான் (பஹ்ஜி) உட்பட இன்னும் பலர் அந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக