இன்று டிசம்பர் மாதம் முதலாம் திகதி. ஒவ்வொரு ஆண்டினதும் கடைசி மாதத்தின் முதல்நாள். அந்த நாள் பற்றிப் பெரும்பாலானோர் ஆழ்மனதில் கொள்வதற்குக் முக்கிய காரணமாக அமைவது உலக எயிட்ஸ் தினம் World Aids Day நினைவுகூரப்படுவதனாலாகும்.
உலக எயிட்ஸ் தினம் World Aids Day தொடர்பில் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதந்தான் இந்த எயிட்ஸ் தொடர்பிலான கருத்து வௌியானது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எயிட்ஸ் தொடர்பிலான உலக சுகாதார அமைப்பின் எயிட்ஸ் Aids தொடர்பிலான பூகோளமய நிகழ்ச்சித் திட்டத்தில் மக்கள் மய தகவல் அதிகாரிகளில் இருவரான ஜேம்ஸ் பன் மற்றும் தோமஸ் நெட்டர் ஆகியோரினாலேயே இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.அதற்கேற்ப, 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதலாவது உலக எயிட்ஸ் தினம் நினைவுகூரப்பட்டது. இந்த வருடம் 36 ஆவது உலக எயிட்ஸ் தினம் World Aids Day நினைவுகூரப்பட்டது. இவ்வாண்டின் எயிட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் 'உரிமைகளைப் பாதுகாப்போம். எயிட்ஸினை இல்லாமற் செய்வோம்' என்பதாகும்.
இலங்கையின் முதலாவது நோயாளி முதல்...
இலங்கையின் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1988 களில்தான் கண்டறியப்பட்டார். ஶ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையிலிருந்துதான் அந்த முதலாவது எயிட்ஸ் நோயாளி கண்டறியப்பட்டார். அதாவது தற்போதைக்கு 36 வருடங்களுக்கு முன்னர்தான் அவர் கண்டறியப்பட்டார். அன்று முதல் இன்றுவரை ஆண்டுதோறும் பல்வேறு கருப்பொருள்களில் எயிட்ஸ் Aids விழிப்புணர்வு செயற்றிட்டங்களை மேற்கொண்டபோதும், அதன் பலன் சொற்ப அளவில்தான் இருக்கின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். உண்மையில் சொல்லப்போனால் எயிட்ஸ் பற்றிய பேச்சுக்கள் ஒரு நாளைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையையே காணக்கிடக்கிறது.
நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம்
புதிய நோயாளர்களைக் கண்டறியும் திட்டம் எங்கள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் குறித்த HIV (எச்.ஐ.வீ.) நோயாளிகள் அதிகமாக நகர்ப்புறங்களில் உள்ளதாகவே அறியமுடிகிறது. என்றாலும் குறிப்பிட்டு இந்தப் பகுதியில்தான் அதிக எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர் எனக் கூறவியலாது என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு செயற்றிட்டத்தின் பாலியல் நோய் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவிக்கின்றார். அவர் குறிப்பிட்டது போன்று நாட்டின் எந்த மாவட்டத்தில் அதிகமான பாலியல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்று திட்டவட்டமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
அநுராதபுரம், குருணாகல் போன்ற நகர்ப்புறங்களில் எச்.ஐ.வீ. HIV நோயாளிகள் அதிகம் பேர் காணப்படுவதாக பெரும்புயல் போலும் செய்திகள் அண்மையில் வௌியான செய்தியாகும். இந்த நோய் அங்கு அதிகமாகப் பரவுதற்கான காரணமாக மக்கள் குறிப்பிட்ட கருத்தும் கருத்திற் கொள்ளத்தக்கதாகும். அதாவது, பிரத்தியேக வகுப்புகளுக்கு வருகை தரும் மாணவர்கள் அதிகம் அப்பிரதேசங்களிற்கு வருகை தருவதனாலாகும். ஆயினும், சரியானதொரு தொகைமதிப்பீடு இல்லாமையினால் அநுமானிக்க முடியாது என்பதுடன், இந்தச் செய்தினால் எயிட்ஸ் மேலும் பரவுமே தவிர, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவியலாது.
இளைஞர்கள் பலிக்கடாவாகிறார்கள்...
எது எவ்வாறாயினும் 2018 ஆம் ஆண்டிலிருந்து 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வீ. HIV நோய் வௌிப்படையாகக் காணப்படுவதுடன், அதிகரித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது. அதற்கேற்ப 2023 ஆம் ஆண்டில் மட்டும் புதிதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகளில் 105 நோயாளிகள் இந்த வயதிற்குட்பட்டோரில் உள்ளமை மிகவும் கவலைக்கிடமான செய்தியாகும். இந்தத் தொகையினர் எச்.ஐ.வீ. வைரஸ் HIV Virus தொற்றுக்குள்ளானோரில் நூற்றுக்கு 15 வீதமாகும். அதில்கூட நூற்றுக்கு 87 வீதமானோர் இளைஞர்களாக உள்ளனர்.
நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய இளைஞர் சமுதாயம் இவ்வாறு பாலியல் தொற்றுக்குள்ளாவதன் காரணம் யாதென்பதை அவசரமாகக் கண்டறியப்பட வேண்டும். விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க குறிப்பிடுவதுபோல் இதற்கு மூல காரணமாகவிருப்பது, தற்போதைய இளைஞர் சமுதாயம் தொழில்நுட்பத்திற்கு (தொலைபேசி போன்ற) தேவைக்கும் அதிகமாக ஆட்கொள்ளப்பட்டிருப்பதாகும்.
இன்று கையடக்கத் தொலைபேசி மூலம் எந்தவொரு இடத்திற்கும் எந்தவொரு ஆணையும், எந்தவொரு பெண்ணையும் அழைத்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக தொழில்நுட்பச் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தின் வாயிலாக, சமூக ஊடகங்களின் வாயிலாக பணம் செலுத்தி தங்களுக்குத் தேவையான முறைகளில் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் அதிகம் பயன்பெறுபவர்கள் இளைஞர் - யுவதிகளே. இதனைத் தடுப்பதற்கான வழிவகை இன்னும் சரிவர நடைபெறததனால், இணையத்தின் பல்வேறு பிரிவுகளினூடாக - குழுமங்களினூடாக இவ்வாறான பாலியல் தொழில்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவ்விடயங்கள் இளைஞர் சமுதாயத்தினரிடையே அதிகம் பரவி வருகின்றன.
பாலியல் கல்வி
பாலியல் கல்வி தொடர்பாக எங்கள் நாட்டுப் பாடசாலை மாணவர்களிடையே ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றது. எங்கள் நாட்டுக் கல்வித் திட்டத்தில் சில வருடங்களுக்கு முன்னர் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தவும், மாணவர்களை வழிநடாத்தவும் ஆவன செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதும், சிலரினது கருத்துக்களினால் ஆரம்ப கட்டத்திலேயே அது காணாமற் போய்விட்டது. குறித்த பாலியல் கல்வி முறையைப் பாடசாலைகளில் ஆரம்பித்து, அந்தக் கற்கையை மாணவர்களுக்கு தொடரச் செய்திருந்தால், அண்மையில் பாவப்பட்டு எச்.ஐ.வீ HIVயினால் கவலைக்கிடமாகியுள்ளவர்களில் அரைவாசிப் பகுதியினர் இல்லாமலாகியிருக்கக் கூடும். இந்த நோய் சமூகத்தில் அதீத வளர்ச்சி காண்பதற்குக் காரணமாக அமைவது பொதுமக்களின் அறியாமையேயாகும்.
மருந்தகமொன்றிற்குச் சென்று பாலியல் பாதுகாப்பு உரை (கொண்டம்) ஒன்றினைப் பணம் கொடுத்து வாங்குவதற்குக் கூச்சப்படும் பெரியோர்கள் வாழ்கின்ற எமது நாட்டில், அவர்களது பிள்ளைகள் பாலியல் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் கரிசனை காட்டாமை ஏனோ என்பது தெரியவில்லை. இவ்விடயம் தொடர்பில் சரியான வழிகாட்டல் - தொழில்நுட்பத்தினூடாகவே வழங்கப்பட வேண்டியது காலத்தின் தேவைப்பாடாகும்.
தற்போது எச்.ஐ.வீ. பரவுவதற்காக அடிப்படைக் காரணியாகக் கண்டறியப்பட்டிருப்பது ஓரினச் சேர்க்கையாகும். சிறந்த கலாசாரப் பண்பாடுகள் நிறைந்த எங்கள் நாட்டில் இவ்வாறான செயற்பாடு மிகவும் மோசமானதாகும். சட்டத்தில் கூட இது தடுக்கப்பட்டதாகும். என்றாலும், தற்போது ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் மூலம் அதிகமாக எச்.ஐ.வீ HIVயைப் பரப்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சட்ட ரீதியற்ற முறையில் இது நிகழ்ந்து வருகின்றது.
நகர்ப்புற கழிவறைகள், பாழடைந்த பூங்காக்கள். மறைவிடங்கள் மூலமாக கள்ளத்தனமாக பாதுகாப்பற்ற இந்த சமூக விரோதச் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனால் சமுதாயத்தில் கொடிய அந்த எச்.ஐ.வீ. HIV பரவி வருகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் நகர்ப்புற கழிவறைகளுக்கு அருகாமையிலும், பூங்காங்களுக்கு அருகாமையிலும் கொண்டம் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், காலப்போக்கில் அந்நடவடிக்கையும் காணாமற் போனது ஏனோ என்பது கேள்விக்குறியாகும்.
எயிட்ஸ் பரவிவருவது குறைந்துள்ளமை மகிழ்ச்சியடையக் காரணமாகுமா?
இலங்கையில் தற்போதைக்கு எச்.ஐ.வீயினால் பாதிக்கப்பட்டோரின் 4700 பேர் உயிர் வாழ்கிறார்கள். இந்த வைரசானது இலங்கையில் நூற்றுக்கு 0.1 அளவில் இருந்தபோதும் இது மகிழ்ச்சியடையக்கூடிய விடயமன்று. கண்டும் காணாமல் போகக் கூடிய விடயமன்று.
எச்.ஐ.வீ. வைரசினைக் (HIV Virus) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக எமது நாட்டில் பாரிய முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. எச்.ஐ.வீ தொற்றுக்குள்ளானோரை வெகுவிரைவில் இனங்கண்டால் உடனடியாக அநத வைரசை இல்லாமற் செய்வதற்கான ஏற்பாடுகள் நாட்டில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. எயிட்ஸைச் சரிவரக் கண்டுபிடித்து தங்களின் உடலில் மிகக் குறைந்தளவு வைரஸ் இருந்தால் வெகுவிரைவில் எயிட்ஸ் தொற்றைக் குணப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவியலும்.
விசேட வைத்திய நிபுணர் குறிப்பிடும்போது, அவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளவரை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதன் மூலம், அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் முற்படுகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் - தப்பான வழியில் பாலியல் தொடர்பில் ஈடுபட்டால், தங்களுக்குள் பயமேற்படத் தேவையில்லை. 72 மணித்தியாலங்களுக்குள் பாலியல் தொடர்பான நோய் நிவாரண மருந்தகத்திற்குச் சென்று சரியான முறையில் சிகிச்சை பெறுவதன் மூலம் உடலிலிருந்து குறித்த வைரஸை இல்லாதொழிக்கலாம் ' எனக் குறிப்பிட்டுள்ளார்.
எயிட்ஸ் என்பது மாபெரும் பூதமன்று... சரியான அறிவுறுத்தல்களின் மூலம் அதனை இல்லாதொழிக்கலாம்.
நன்றி - லங்காதீப
தமிழில் - மதுராப்புர, கலைமகன் பைரூஸ்
------------------------------------------------------------------------------------------------------
HIV (Human Immunodeficiency virus) | AIDS (Acquired Immunodeficiency syndrome) என்பது HIV | Oppertunistic infection | Chemsex or highfun | www.know4sure.lk | HIV self test kit | PARIWARTHANAM BLOGSPOT | Kalaimahan Fairooz (Translator) | வினோ தர்மகுலசிங்க | විනෝ ධර්මකුලසිංහ
------------------------------------------------------------------------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக