It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 11 டிசம்பர், 2024

இசுருபாய அருகில் நடைபெற்ற எதிர்ப்பின்போது பொலிசாரைக் வெட்டியவர் பற்றி நீதிமன்றில் தெரிவிப்பு

ஆசிரிய நியமனம் கோரி, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் ஒரு பகுதியினர் 2 ஆம் திகதி, பத்தரமுல்ல இசுருபாய கல்வியமைச்சுக்குக்கு முன்பாக நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, கூரிய ஆயுதத்தினால் வெட்டியதன் மூலம் மூன்று பொலிசார் காயங்களுக்குள்ளாவதற்குக் காரணமாக அமைந்தவர் இராணுவப்படையைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் என விசாரணைகளினால் தெரியவந்துள்ளதாக தலங்கம பொலிஸார் - கடுவல நீதவான் நீதிமன்றில் நேற்று (11) தௌிவுபடுத்தியுள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் துரித விசாரணையினை நடாத்தி, அறிக்கைகளை, தங்களது நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்குக் கட்டளையிட்ட கடுவல நீதவான் சாகிமா விஜேபண்டார அவர்கள், பொலிஸாரின் கடமைக்குப் பங்கம் விளைவித்தமை உட்பட்ட குற்றங்களின் பேரில்  சிறையில் அடைக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நான்கு பேரும் தலா ஓரிலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கட்டளையிட்டார். 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக முயற்சித்த பொலிஸார்களில் மூவருக்கு கூரிய ஆயுதத் தாக்குதல் நடாத்திய நபரை இனங்கண்டுகொண்டதும் ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து வாக்குமூலம் எடுப்பதற்கு பொலிசார் முயன்றதாகவும் பொலிசார் நீதிமன்றில் குறிப்பிட்டனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக