2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு. எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர உத்தியோகபூர்வ ஊடக அறிவித்தல் விடுத்துள்ளார்.
மார்ச் மாதம் 17 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த (சா.த) பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி புதன்கிழமை வரை
நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் அவ் ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக