'அமைச்சர் சரோஜாவின் ஓரக்கண் பார்வையும் கானல் நீராகும் மக்களின் எதிர்பார்ப்பும்' எனும் தலைப்பில் மௌலவி நாப்பாவல ரிஷாத் அவர்கள் எழுதிய கட்டுரையும், அந்தக் கட்டுரை பற்றிய வாசகர்களின் கருத்துக்களும் இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றது.
ஏகப்பட்ட பிரச்சினை நாட்டில் இருக்கும் போது இந்த அரசு குறிப்பாக இந்த அரசின் அமைச்சர் சரோஜா போல்ராஜ் முஸ்லிம் சமூகத்தின் மீது ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் இனவாதத்தையும் வெறுப்பையும் தூண்டும் விதத்தில் முஸ்லிம்தனியார் சட்ட திருத்தம் விடயத்தை தூக்கி பிடிப்பது ஏனென்று புரியவில்லை?
நாட்டில் வாழ்வாதாரத்துக்கே வழியில்லாமல் நிறைய மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு அவதிப்பட்டுக் கொண்டு இருக்கையில் இந்த அரசு அவற்றை
கண்டு தீர்வு காண்பதற்குப் பதிலாக வேறு பக்கமாக மக்களின் சிந்தனையை திசை திருப்ப முயற்சிப்பது ஏனென்றும் தெரியவில்லை?நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்குகளை வழங்கி இந்த அரசை 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
ஆனால் இந்த அரசின் செயற்பாடுகளையும் கருத்துக்களையும் (தேங்காய், மின்சாரம், குரங்கு) பார்க்கும்போது இலங்கை வாழ் மக்கள் அவ்வளவு அறிவு இல்லாதவர்களா? சிந்திக்காதவர்களா? என்றெல்லாம் சிந்திக்க தோன்றுகிறது.
அமைச்சர் போல்ராஜ் தேர்தலுக்கு முன் முஸ்லிம் தனியார் சட்டத்தை மிகவும் கீழ்த்தரமாக பேசியதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போதும் அவரின் முன்னெடுப்புக்கள் நிற்கவில்லை. இந்த அரசு அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடம் வழங்காமைக்குறிய பின்புல காரணமாக இருப்பது முஸ்லிம் தனியார் சட்ட திருத்த முன்னெடுப்பா? என்று சிந்திக்க தூண்டுகிறது.
இலங்கையின் இன்றைய அரசு முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் ஜம்இய்யதுல் உலமாவினதும் முஸ்லிம் சமூகத்தினதும் கருத்துக்களை பெறாமல் திருத்தம் கொண்டு வர மாட்டோம் என்று முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் அமைச்சராக இருக்கும் இந்தப் போல்ராஜ் என்ற முஸ்லிம் அல்லாத அமைச்சர் முஸ்லிம்
தனியார் சட்டம் பற்றி கருத்துக் கூறும்போது ஏன் இந்த அரசு முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் அவரின் வாயை மூட நடவடிக்கை எடுப்பதில்லை. இது முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய விடயம் இல்லையா?முஸ்லிம் சமூகத்தை பற்றி இந்த அமைச்சர் போல்ராஜ் அறிக்கை விடுவதை முஸ்லிமாக இருக்கும் எம்மால் அனுமதிக்க முடியாது. தேர்தலுக்கு முன் அமைச்சர் போல்ராஜ் அவர்களை சரிகண்ட அவருக்காக வக்காலத்து வாங்கிய முஸ்லிம் சமூக புத்திஜீவிகள் மற்றும் இந்த அரசுக்கு சார்பாக முஸ்லிம் சமூகத்தில் தேர்தல் காலங்களில் வேளைசெய்த அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் தலையிட்டு முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் அமைச்சர் போல்ராஜ் தலையிடுவதை நிறுத்த முயற்சிக்க வேண்டியது அவர்களுடைய தார்மீக கடமையாகும்.
முஸ்லிம் சமூகத்தில் சிறு வயது திருமணம் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடைபெற வாய்ப்புள்ளது. அது சட்ட ரீதியாக நடைபெறும் திருமணமாகும். ஏனைய சமூகங்களில் தான் இன்று சிறு வயது திருமணங்கள் நடைபெறுவது அதிகம். இதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இது விடயமாக ஏனைய சமூகத்தில் தட்டிக் கேட்க வக்கில்லாத அமைச்சர் போல்ராஜ் முஸ்லிம் சமூகத்தின் மீது விரல் நீட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் இலங்கையில் அதிகமான சிறு வயது திருமணம் நடைபெறுவதும் சிறுவயதுப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் படுவதும் முஸ்லிம் சமூகத்தில் அல்ல. அவ்வாறு இருக்கும்போது அமைச்சர் போல்ராஜ் முஸ்லிம்களை குறிப்பிட்டு இப்படியான கருத்துகளை தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. காரணம் ஏனைய சமூகங்களில் நடைபெறும் தவறான விடயங்களை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க எடுக்கும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டி உள்ளது.
இறுதியாக அமைச்சர் போல்ராஜ் அவர்களே! கடந்த வருடம் (2024) முஸ்லிம் அல்லாத 15 வயதுக்கு உட்பட்ட பாடசாலை சிறுமிகள் 253 போர் கர்ப்பம்தரித்ததாக
சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது தானே. இது போன்ற தரவுகள் ஓரக்கண் பார்வையுள்ள உங்கள் கண்களுக்கு தென்படுவதில்லையா? இதற்குக் காரணமும் முஸ்லிம் தனியார் சட்டமா? நீங்கள் மேற்கொள்ளும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளால் முஸ்லிம் மக்கள் இந்த அரசுக்கு தவறி வாக்களித்து விட்டோமோ என்று சிந்திக்க வைத்துவிட வேண்டாம். நீங்கள் உட்பட இலங்கை வாழ் அரசியல்வாதிகளுக்கு நாட்டுப்பற்று என்பது வெறும் நாவோடு மாத்திரமே என்பது உங்களுடைய முன்னெடுப்புக்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
இலங்கை முஸ்லிம் சமூகம் கடந்த பல தசாப்தங்களாக நம்பி சிந்திக்காமல் வாக்களித்து சிதறடிக்கப் பட்ட குறையை நீக்க சிந்தித்து வாக்களிக்களித்தது இதற்காகவா?
மாற்றத்தினூடாக சிறந்த ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்கள் படிப்படியாக அவர்களுடைய நம்பிக்கை கானல் நீராக மாறி வருவதை அவதானிக்க முடியுமாக உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்கள் இதை உணர்வதற்கு காரணம் பாராளுமன்ற ஆழும் தரப்பு ஆசனங்களை அலங்கரிக்கும் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான போல்ராஜ் போன்றவர்களின் கருத்துக்களுக்கு மெளனம் சாதிப்பதே ஆகும்.
ரிஷாத்_இஸ்லாஹி_நாபாவல
வாசகர்களின் கருத்துகள்
--------------------------------------
இளவயதில் திருமணம் இஸ்லாம் ஊக்குவிக்கும் ஒன்றாகுமா.
வெறும் ஏழு விகிதத்தினையும் தாண்டாத ஒன்றில் அந்த சரோஜாவுக்கு எங்கணம் இந்த கங்கணமும் கண்டனமும்!?
டாக்டர் அம்பேத்கர், மகாத்மா காந்தி, சுப்ரமணியம் பாரதியார், தந்தை பெரியார் போன்ற எண்ணற்ற நவீன பெறும் போராளிகள் மேதாவிகள் நமது அண்டைய நாட்டில் கூட ஒன்பது, பத்து , பன்னிரெண்டு, பதின் நான்கு போன்ற வயது பெண்களை அவர்கள் திருமணம் செய்தமை எந்த கண்களுக்கும் புலப்படுவதில்லை என்பது அறிவீனம் எனும் அநியாயம் இல்லையா!
பருவ வயதை எட்டாத இளம் வயதில் ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ளல் என்பது இஸ்லாம் ஊக்குவிக்கும் நிலைப்பாடு கிடையவே கிடையாது.
அதனைப்போலதான் திருமண வயதை இஸ்லாமிய சட்ட முகாந்திரம்கள் வரையறுக்கவுமில்லை.
நபிகளார் இருபது சொச்ச வயதில் நாற்பது எட்டிய கதீஜா ரழியல்லாஹு அன்ஹாவை திருமணம் செய்தமை நபித்துவத்திற்கு முதல் நடந்தமை என்றால் கூட அது நபிகளார் செய்ததுதான், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா தவிர்ந்த நபிகளாரின் ஏனைய மனைவிகளும் கிட்டத்தட்ட அவ்வாறுதான்.
அல்லாஹ்வின் ஆணை, கஸ்தூரியை விடவும் உடலாலும் வியர்வையாலும் வாசனையை கொண்ட ஐம்பது வயதை தாண்டிய எம் உயிரிலும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளமும் தேகமும் பதின்மூன்று வயதினை எட்டாத ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாவினை கல்யாணம் செய்தமை நபிகளாரின் எந்தவொரு எதிரிகளும் விமர்சிக்கவில்லை என்பது ஆதாரங்களும் வரலாறும் சொல்லும் பதினான்கு நூற்றாண்டு தாண்டிய உண்மையல்லவா?!
அதனால்தானோ என்னவோ, அறிவுச்சுடர் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அதிக நபிமொழிகள், பெண்கள் அந்தரங்க சட்ட விழுமியங்கள் போன்றவற்றில் அக்குவேறு ஆணிவேறாக கற்றுதரும் பாடங்கள் அத்துணையும் அறிவுத்தாகத்திற்கான பானங்கள்தான்.
இலங்கையில் இள வயது திருமணம் அதிக விழுக்காடு முஸ்லிம்களிடம் இல்லவே இல்லை என்பது கண்கூடு இல்லையா?!
வெறும் ஏழு விகிதத்தினையும் தாண்டாத ஒன்றில் இந்த சரோஜாவுக்கு எங்கணம் இந்த கங்கணமும் கண்டனமும்?!.
அப்படியென்றால் ; அது இஸ்லாமிய திருமண விவகாரத்தில்தான் சட்ட விரோதம் எனும் ஐரோப்பிய வாதத்தில் இள வயது விபசாரம் கண்டுகொள்ளப்படாமல் அது அவரவர் உரிமை எனும் காரணம் மட்டும் சரோஜாவுக்கு சட்டப்படியோ?!.
பாதுகாவலரற்ற பெண் பிள்ளைகள், தவறான வாழ்வியல் நெருங்கி விடக்கூடாது எனும் நிர்ப்பந்த சூழ்நிலைகள் கொண்டவர்கள் இந்த சலுகையினை செய்து முடிப்பதில் தவறு இல்லையல்லவா?!.
ஆகவே அல்லாஹ் வரையறை செய்யாத ஒன்றை, அதே நேரம் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஒன்றை, எம் முன்னோர் தெட்ட தெளிவாக தெரிந்தரிந்து பெற்று தந்த இயல் வாழ்வியலின் அடிப்படையான படைத்தவன் யாப்பை சீர் செய்வது மனித மரபை சீர்தூக்கி வைத்து விடுமோ!
ஹாஸிர் நஜீப் (16.02.2025)
மிகவும் சிறப்பான எடுத்துக்காட்டு. இது நிச்சயமாக அமைச்சர் (குரங்கின் கைப் பூமாலை) போல் ராஜ் பார்வையில் பட வேண்டும். கூடவே எமது (என்று நாம் சொல்லிக் கொள்ளும்) முஸ்லிம் அமைச்சர்கள் கண்ணிலும் பட்டு ரோஷம் கொண்டு (இருந்தால் மட்டும்) நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Azad Mohamed
පළමුව ජමාතෙ ඉස්ලාමි සංවිධානයෙන් විමසාබලා අදහස් දැක්වුවොත් සුදුසුයි කියල හිතෙනවා .ඔවුන්ගෙ මතය අහල බලමුද?
Mirzan Thahir
இவளை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் அதுதான் எதிர்காலத்துக்கு நல்லது...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக