It
රාවය லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
රාවය லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 மே, 2018

முஸ்லிம் சமூகம், தீவிரவாதம் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள்

இந்த நாட்டில் சிங்கள, தமிழ் என இரு சமூகங்களிலும் தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் நிலை உள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாதம் இருக்கிறதா? என்று முஸ்லிம் சமூகத்திடம் கேட்டால் இல்லை என்பதே பொதுவான பதில்.
சிங்கள சமூகத்திலும் தமிழ் சமூகத்திலும் மத மற்றும் இன தீவிரவாதம் மற்றும் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க சமூக அரசியல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. எனினும், முஸ்லிம் சமூகத்தில் அவ்வாறான தீவிரவாத எதிர்ப்பு சமூக அரசியல் கருத்தியலோ செயற்பாடுகளோ இல்லை அல்லது மிகவும் அரிதானது.

சனி, 31 அக்டோபர், 2015

மகிந்த - கப்ரால் அநுசரணையில் 40 தொன் தங்கம் களவாக விற்கப்பட்டுள்ளது! -ராவய


முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் அனுசரனையோடு மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்புடன் சந்தேகத்துக்குரிய தரகர்கள் சிலர் மூலமாக 40 மெட்ரிக் தொன் தங்கம் இலங்கையில் இருக்கும் ஜப்பான் கம்பனியொன்றாகிய ''ஜபூடா ஹோல்டிங்" ஊடாக ஜப்பனிலுள்ள வரையறுக்கப்பட்ட ''சுஷ்செய் செகியுரிடீஸ்"கம்பனிக்கு விற்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த சாட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

மகிந்தர் இன்னும் இருந்திருந்தால் நாடு கிரேக்கமாயிருக்கும்! - சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க

தமிழில் - கலைமகன் பைரூஸ்

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தெளிவான சிறப்பொன்றுள்ளது. நூறு நாள் திட்டத்தை அடிப்படையாக வைத்தே அது நடைபெற்றது. அதற்கேற்ப ஜனநாயக மறுசீரமைப்பே அதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அதிலும் மேலாக நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் என்ற வார்த்தைப் பிரயோகம் முதன்மை இடத்தில் நின்றது. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதன் முறையாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்று நான்காம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் போது அவ்வாறு வாக்குறுதியளித்தார். யதார்த்தபூர்வமான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனும் நோக்கத்துடனேயே அவர் அன்று அந்த வாக்குறுதியை அளித்தார். என்றாலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி முறைமையில் பல இடர்பாடுகள் இந்நாடு சந்தித்திருந்தாலும், அதில் மிகக் கூடுதலான இடர்பாடுகள் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு அதிகரித்தது. பதவிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகார முறைமையை பயன்படுத்தாதவிடத்தும், அந்த நிறைவேற்று அதிகாரமுறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதியளித்தே அவர் பதவிக்கு வந்தார். என்றாலும், மெல்ல மெல்ல வாக்குறுதிகள் அவரால் நிராகரிக்கப்பட்டு அவரது போக்கிற்கேற்ப ஜனாதிபதி முறைமையை ஆக்கிக் கொண்டார். ஈற்றில் 18 ஆவது திருத்தச் சட்டம் எனப்படுகின்ற ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரக் கூடிய அளவுக்கு அவர் செயற்பட்டார். அதன் மூலம் கடுமையான ஏகாதிபத்திய நிழல் நாடெங்கிலும் புரையோட வழியமைத்தார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடெங்கிலும் செய்யப்பட்ட கொலைகள் பற்றி மறந்தாலும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தெற்கில் சிங்கள சமூகத்தினிடையே பிரச்சினைகள் முளை கொண்டன. மனித உரிமை மீறப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். காணாமற் போனார்கள். நாட்டை விட்டு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள். பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விதத்திலும் கொதித்து எழும்பினார்கள். ரத்துபஸ்வல, ஹலவாத்த, கட்டுநாயக்க போன்ற இடங்களில் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிய மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அரசாங்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இனவாதக் கும்பல் பேருவளை போன்ற இடங்களில் உயிர்களையும், உடைமைகளையும் அழித்தொழித்தது. அதிகமானோரின் உடைமைகள் இல்லாதொழிக்கப்பட்டதுடன், அவர்களுக்குள் மரண அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பிரிவு இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை. அக்காலப் பிரிவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின்பாலான தாகம் நாட்டின் சிறுபான்மையினருக்கு மட்டுமன்றி பெரும்பான்மையினருக்கும் மிகவும் தேவைப்பாடாக மேலெழுந்தது. சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அதுவே வெடித்துச் சிதறியது. நாட்டினுள் இருந்த அந்த ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்தும் மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியானவுடன் முடிவுக்கு வந்தன.

(தொடரும்)

சனி, 24 ஜனவரி, 2015

மகிந்தவின் இராணுவச் சூழ்ச்சி உண்மையே! -ராவய

னவாரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறு வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும்போது மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு குறைந்து வருவது தெளிவானால், உடனடியாக நாட்டில் அவசர சட்டத்தை அறிவித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் வாக்குப் பெறுபேறுகள் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு அச்சுறுத்தி, இராணுவத்தினர் நாட்டின் முக்கிய இடங்களை நிருவாகித்து மகிந்த ராஜபக்ஷ இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியாக தொடர்ந்து இருப்பதற்கு சூழ்ச்சிசெய்ப்பட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.

ராவயவிற்குத் தெரியவந்துள்ளதற்கு ஏற்ப, இந்த இராணுவ சூழ்ச்சியை கோத்தபாய ராஜபக்ஷவே முன்னெடுத்துள்ளார். அவருடைய தயாரிப்பிற்கேற்ப தேவையான போது, நாட்டின் நிருவாகத்தைக் காவுகொள்வதற்கு ஜனவாரி 8 ஆம் திகதி இரவு நேரம் ஆகும்போது கோத்தபாய ராஜபக்ஷ முன்னர் பணிபுரிந்த கஜபா ரெஜிமேன்துவுக்குச் சொந்தமான இராணுவப் படையில் பத்துப் பிரிவினரை கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் தயார் நிலையில் வைத்திருந்த்துடன், மோதர ரோக்ஹவுஸ் பாசறையில் இருந்த இராணுவனத்தினருக்குச் சொந்தமான இராணுவ வாகனங்களை வீதியில் ரோந்து செய்வதற்கு தயார்நிலைப் படுத்துமாறும் கட்டளையிட்டுள்ளார்.  அவ்வாறு தயார்நிலையில் வைக்கப்பட்ட இராணுவனத்தினர் மூலம் 8 ஆம் திகதி இரவு தொடக்கம் 72 மணித்தியாலங்கள் பொதுமக்கள்  வெளியே வராத வண்ணம் இராணுவத்தினரும் அதிகாரத்துடன் செயற்பட முடியுமாயின், இச்செயற்பாட்டுக்கு எதிரான மக்கள் சக்தியை இல்லாதொழிக்க முடியும் என சூழ்ச்சியாளர்களின் திட்டமாக இருந்துள்ளது. அத்துடன் பிரதம நீதியசரை அனுப்பி ஜனாதிபதிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்றவாறு நீதிமன்றத் தீர்மானத்தை எடுப்பதற்கும் ஆயத்த நிலையில் இருந்திருக்கின்றனர்.

இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள் ஜனவாரி மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதி கொழும்பு பிரபல இராணுவ அலுவலகங்களில் நடைபெற்றிருக்கின்றன. அத்துடன், இச்செயற்பாட்டுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் அக்கூட்டத்தில் பங்குகொண்டுள்ளனர்.

மேலதிக செய்திகள் உடன் பதிவேற்றப்படும்.. தொடர்பில் இருங்கள்...

(தமிழில் - கலைமகன் பைரூஸ்)

வெள்ளி, 28 நவம்பர், 2014

ஊடக சுதந்திர ஆர்.கே.டப்ளியூ அறிக்கையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு...

இலங்கையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகவிருந்த ஆர்.கே.டப்ளியூ. குணசேக்கர சென்ற புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டார்.

சுதந்திர ஊடகங்கள் வாயிலாக அன்னார் நன்கு பிரபல்யப்படுத்தப்பட்டார். உண்மையில் அவர் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை முழுமைப்படுத்துவான் வேண்டி, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்.

ஆர்.கே.டப்ளியூ. குணசேகர கமிட்டியின் அறிக்கை எனும் பெயரில் இலங்கையின் அரசியல் அகராதியிர் உள்ள சட்ட மறுசீரமைப்புத் தொடர்பிலான அறிக்கை 1996 இலிருந்து  இன்றுவரை காணப்படுகின்ற முக்கிய அறிக்கையாகும்.

1994 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் மிக முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாக ஊடக சுதந்திரத்தை முழுமைப்படுத்துவதற்காக நான்கு முக்கிய கமிட்டிகள் நியமிக்கப்பட்டது.

இந்த நான்கு கமிட்டிகளினாலும் முன்வைக்கப்பட்ட அறிக்கை, சந்திரிக்கா குமாரதுங்க அரசினாலோ, ரணில் விக்கிரமசிங்க அரசினாலே, மகிந்த ராஜபக்ஷவின் அரசினாலோ (1996 ஆம் ஆண்டு முதல் பதவிக்கு வந்த எந்தவொரு அரசினாலும்) ஏறிட்டும் பார்க்கப்படவில்லை. உத்தியோகபூர்வமாக அது அறிவிக்கப்படவுமில்லை. நான்கு கமிட்டிகளினதும் முக்கிய பிரிவாகிய ஊடக சுதந்திரத்திற்கு ஏற்புடையதான சட்ட மீளமைப்பிற்கான கமிட்டியின் முக்கிய பொறுப்பை ஆர்.கே.டப்ளியூ. குணசேக்கரவே ஏற்றார். இலங்கையின் பிரபல்யம்மிக்க மனித உரிமைகள் தொடர்பான எழுத்தாளரும் வழக்கறிஞருமான கிஷாலி பின்தோ ஜயவர்த்தன இதுபற்றிக் குறிப்பிடும்போது, இவ்வறிக்கையானது “இலங்கை ஊடக மறுசீரமைப்புத் தலைமைத்துவத்தின் ஆரம்பம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடும் போது “ ஊடகத்துறையுடன் தொடர்புடைய அனைத்துடனும் தொடர்புற்றது”  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்...)

சனி, 2 ஆகஸ்ட், 2014

எந்த புத்தர்? யாருடைய பௌத்த மதம்?

அது தொடர்ந்து மக்களையும் அவர்களது உடைமைகளையும் அழுக்காக்குகின்ற விஷத்தன்மை வாய்ந்த உசாத்துணை போன்றாகும். (எமில் ஸோலா, “சத்தியம்”.) 

துட்டகைமுனு மன்னன் முதலில் தனது குடும்பத்தினருடனேயே போர் தொடுத்தான். மகாவம்சம் குறிப்பிடுவது போல, தனது இளைய சகோதரன் திஸ்ஸவுக்கு எதிராக போர் தொடுத்தான். தனது முடியைத் தான் தக்க வைத்துக் கொண்டதன் பின்னரே ஏனைய சிற்றரசர்களுக்கு எதிராகவும் கடைசியாக எல்லாள மன்னனுக்கு எதிராகவும் போர் தொடுத்தான். மகாவம்சத்தின்படி இந்த சிவில் யுத்தத்தில் ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாயின. இங்கு பலியானவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆயினும் தனது சகோதர மதத்தவர்களை கொடூரமாகக் கொன்றொழித்தது தொடர்பில் மகாவம்சம் எதுவும் பேசாமலேயே இருக்கின்றது.

அங்கு துட்டகைமுனு எல்லாளன் போரில் காவுகொள்ளப்பட்ட உயிர்கள் பற்றியே வருந்திநின்றான் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு பௌத்த தேரர்கள் பின்னடையவோ பயப்படவோ தேவையில்லை என மன்னன் துட்டகைமுனு குறிப்பிட்டுள்ளான்.  “(யுத்தத்தில் ஆட்களை கொன்றதனால்) நீங்கள் இறைசந்நிதானம் செல்லும் வழியில் எவ்வித தடையும் ஏற்படப் போவதில்லை. நீங்கள் ஒன்றரை பேரை மட்டுமே கொன்றிருக்கிறீர்கள். ஒருவர் இறை சந்நிதானத்திற்குச் சென்றவர். அடுத்தவர் பஞ்சமா பாதகங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டவர். மற்றையோர் மார்க்கத்தைப் பின்பற்றாத போலி நம்பிக்கையுடையவர்கள். அவர்கள் மனித மிருகங்களாகவே கருதப்படுகின்றனர்” என்றிருக்கின்றனர். என்றாலும், அவர் பதவி மோகத்தினால் கொன்றொழித்த மக்கள் தொகையை எடுத்துப் பார்க்கும்போது இச்சான்றிதழ் செயலற்றுச் செல்லும். மகாவம்சம், “ஒரு யுத்தத்தில் ஏற்பட்ட மனித உள்வேதனையை ஒரு போலிவேஷமாகவே காண்கின்றது. கொன்றொழிக்கப்பட்டவர்களை மனித மிருகங்களாகவே வர்ணிக்கின்றது. அவர்கள் இறந்ததனால் எவ்விதப் பாவமும் ஏற்படுவதில்லை. அவர்கள் நேரடியாக இறை சந்நிதிக்குச் சென்றுவிடலாம்” என்ற போலி நம்பிக்கையை விதைக்கின்றது. 

இந்த நம்பிக்கையை வலுப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் மகாநாம தேரருக்குப் பின்னணியில் சிலர் இருந்தனர். அவ்வாறு செய்வதற்குக் காரணம் இதுதொடர்பில் புத்தபெருமான் குறிப்பிடும் கருத்துக்கள் நன்கு தெளிவாகின்றமையேயாகும். ஓர் உயிரைக் கொல்வது (அதாவது மனிதனாயினும் விலங்காயினும்) மாபெரும் பாவமாகும். அப்பாவத்திலிருந்து எந்தவொரு முறையிலும் வெளியேற முடியாது.

சங்யுக்த நிகாயவில் காமினி சங்யுக்தவில் வருகின்ற யோதஜீவ சூத்திரத்தில், கிராமத் தலைவனான யோதஜீவ புத்தரிடம் “யுதத்த்தில் மரணிப்போர் தேவலோகம் (சுவனம்) அடைவார்களா?” எனக் கேட்கிறான். புத்தர் யோதஜீவ்வின் வினாவுக்கு மூன்று முறை பதிலளிக்காமல் மௌனம் காக்கிறார். மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் காரணமாக கீழ்வருமாறு பதிலளிக்கிறார் புத்தர். 

“யுத்தத்தில் எதிரியைத் தாக்குவதற்கு முற்படுகின்றவனுக்கு எதிரியைக் கொன்றொழிக்க வேண்டும், வெட்ட வேண்டும், அழித்தொழிக்க வேண்டும் என்ற சிந்தனையே இருக்கும். அவ்வேளை எதிரியைத் தாக்கிக் கொன்றொழித்தால் அவர் மீண்டும் நரகத்தில்தான் பிறப்பார்…” யுத்தத்தில் இறப்போருக்கு நடப்பது இதுதான். இதில் எவ்வித மாற்றமோ சிறப்போ கிடையாது. புத்த சமயத்தைக் காப்பதற்காக இறந்துபோவோர் சுவனத்தை அடைவர் என புத்தர் ஒருபோதும் சொல்லவில்லை. 


மாற்றமுடியாத இந்த இயற்கை நியதி மகாநாம தேரருக்கும் அக்காலத்தில் இருந்த தாதுசேன மன்னனின் இராஜதந்திரங்களுக்குப் பொருந்துவதாக இல்லை. தாதுசேன மன்னன் மகாநாம தேரரின் பக்தனும் மருமகனுமாவான். மாமன் மருமகனை தன் கெட்ட காலத்திலேயே தன்னுடன் இணைத்துக் கொண்டான். இலங்கை 30 வருடங்கள் பாண்டியர் வசம் மண்டியிட்டிருந்தது. கடைசி பாண்டிய அரசனைத் தோற்கடித்தே தாதுசேனன் ஆட்சிக்கு வந்தான். யுத்தத்தில் ஆட் பலி நடக்கும். சிலவேளை தாதுசேன மன்னனின் கரங்களால் ஆரம்ப தம்ம பதம் முழுமையாக சிதைக்கப்படலாம். அவனது படைவீரர்கள் மரணத்தின் பின்னரான வாழ்க்கை பற்றி சிந்தித்திருக்கலாம். இந்நேரம் மகாநாம தேரர் எதிரேவந்து, “பாவமில்லா யுத்தம்” என்ற பொய்யை உருவாக்கி மன்னனையும் அவனது படையினரையும் உற்சாகப்படுத்தியிருக்கலாம்” என்று கருதுவதில் பிழையில்லை. அது அவர்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே…

இந்தக் கருத்தானது வெளிக்கொணரும்போது, மகாநாம தேரர் நிச்சயம் சந்தோசித்திருப்பார். அவர் புத்தரின் போதனைகைளை முற்றுமுழுதாக தலை கீழாக மாற்றி, முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான புத்த சமயத்தை நிர்மாணித்ததோடு, அது 15 நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் வழிநடாத்துவதற்கும் காலாக அமைந்துள்ளது.

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிருந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.   
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்த்து…!”  

யாழ்ப்பாண நூலகம் தீப்பற்ற வைக்கப்பட்டது பற்றி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் எழுதிய சிறந்த கவிதை அவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. புத்தரை அவ்வாறு ஏன் கொன்றனர்? என அமைச்சர்கள் கேட்கும்போது பொலிஸார்,

“இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுட முடியாது போயிற்று” என்கின்றனர்.

உண்மைதான். ஆயினும் உண்மையில் 6 ஆம் நூற்றாண்டில்தான் புத்தர் கொலை செய்யப்பட்டார். மகாநாம தேரர் புத்த சமயத்தை புதிதாக எழுதியது மட்டுமன்றி, அது யுத்தம் சார்ந்த புத்த சமயத்திற்கு பொருந்தக்கூடிய புதிய யுத்தம்சார் புத்தனையும் உருவாக்கியது. மகாவம்ச புத்தர் கௌதம (சித்தார்த்த) புத்தரில் முற்றிலும் மாறுபட்டவர். 

திரிபிடகத்தில் வருகின்ற புத்தர் போலன்றி, மகாவம்சத்து புத்தர் தந்திரத்துடனும், பெரும் மனித பலத்துடனும் எதிரிகளை சுற்றிவளைப்பவராக இருக்கின்றார். அவர் புத்த  பெருமானைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் அன்பும் கருணையும் காட்டுபவரல்லர். மகாவம்ச புத்தர் பிணைப்புக்களுடையவர். அவருக்குத் தேவையாக இருந்தது என்னவெனில், தனது சமயம் பாதுகாக்கப்படுகின்ற இலங்கையைக் கட்டிக் காப்பதாகும். இவ் அரசியல் திட்டத்தில் கடவுளர்கள் அவரது நண்பர்களாவர். அக்கிரமக்காரனான விஜயன் அவருக்கு அடிமைப்பட்டவர். இலங்கையின் ஆரம்பகால அரக்கர்கள் அவரது எதிரிகளாவர். மகாவம்சத்தில் வருகின்ற புத்தர் உண்மையான புத்தர் ஒருபோதும் செய்யாதவற்றைச் செய்பவர். இலங்கைக்கு வந்து இயக்கர்களுக்கு தர்மோபதேசம் செய்வது ஒருபுறமிருக்க அவர்களை விரட்டியடித்தவர்.  திரிபிடகத்திலுள்ள புத்தர் அரக்கர்களை - இயக்கர்களை விரட்டியடிக்கவில்லை, அவர்களை எதிரிகளாக நினைக்கவில்லை. “யக்ஷ சங்யுக்த”வில் புத்தர் ஆலவக எனும் அரக்கனை (பிசாசு) தன் பொறுமையினாலும், நீதியினாலும், நற்போதனைகளினாலுமே தன்வயப்படுத்துகின்றார்.

மற்றொரு அரக்கனான சீவக(ன்), அனாத்தபிண்டிக்க எனும் பிரபுவிடம் சென்று புத்தரைச் சந்திக்குமாறு மும்முறை வேண்டியிருக்கின்றான். இதுஇவ்வாறிருக்க, மகாவம்சத்தின்படி தமிழர்கள் பிற்காலத்தில் வர்ணிக்கப்பட்டது போன்று அரக்கர்களும் பிறப்பிலேயே கெட்டவர்கள். மகாவம்சத்தில் வருகின்ற புத்தர் மழை, புயல், இருள் என்பவற்றைத் தோற்றுவித்து அவர்களைப் பயமுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்து அவர்களை புனிதி பூமியினின்று விரட்டியடித்துள்ளார்.

தற்கால இலங்கையில் சிவில் சமூகத்தினரிடையே சமாதானத்தை உருவாக்க முடியாமலிருப்பதற்குக் காரணம் உரிமையாளர்கள் - வெளியார் என்ற எண்ணக்கருவேயாகும். பௌத்தர்கள் இலங்கை தீவின் தனியுரித்துடையவர்கள் எனவும், மற்றோர் வெளிநாடுகளிலிருந்து) இலங்கைக்கு வந்தவர்கள் எனவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டினுள் எவ்வித அதிகாரமுமில்லை.. உரிமையுமில்லை. இந்த கருத்துக்கூட மகாவம்ச பொய்யினால் வடிவமைக்கப்பட்டதாகும். மகாவம்சத்திற்கேற்ப, புத்தபெருமான் தனது மரணப்படுக்கையில் தனது மார்க்கமானது அழிவுறாமல் இருப்பது இலங்கையிலேயே என்பதால் அதனை மிகவும் கவனத்துடன் பாதுகாக்குமாறு கடவுளர்களிடம் வேண்டியுள்ளார். புத்தரின் இறுதிக் காலகட்டத்தில் சில நாட்கள் பற்றி “மகாபரினிப்பான சூத்திரத்தில் தெளிவாக்க் கூறப்பட்டுள்ளது. ஆயினும், அங்கு எந்தவொரு இடத்திலும் இவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்படவில்லை என்பதைக் காணலாம்.

தனது சமயம் பரிசுத்தமாக பாதுகாக்கப்படுவது இலங்கை எனும் இந்த சிறிய தீவில்தான் என புத்தர் ஒருபோதும் சொல்லவில்லை. அதனைப் பாதுகாக்குமாறு ஒருபோதும் எந்தவொரு கடவுளையும் வேண்டவுமில்லை. கடவுளர்களிடம் பொறுப்பேற்குமாறு கூறியது மகாவம்சம் இட்டுக் கட்டிய மற்றொரு பொய்யாகும்.

யோதஜீவ சூத்திரத்தில் புத்தரின் பதிலைக் கேட்டு யோதஜீவ அழத் தொடங்கினார். அவர் பொய்யாகத்தான் அழுகிறார். அதற்குக் காரணம், பொய்யான வழிகாட்டல்கள் மூலம் யுத்தத்தில் இறப்பவர்கள் சுவனம் செல்வர் என்ற தவறான வழிகாட்டலில் அவரும் நீண்டகாலமாக வழிகாட்டப்பட்டதை நினைத்தே அவர் அழுகிறார் என புத்தர் சொன்னார்.

மகாநாம எனும் அரசியல் தேரர் மகாவம்சத்தை எழுதி 15 நூற்றாண்டு உருண்டோடிய போதும், மஹானாம எனும் தேரர் மஹாவம்சத்தை எழுதி 15 நூற்றாண்டுகள் கழிந்துள்ள போதிலும் அவரது இல்லற துறவற சீடர்களால் நாங்கள் இன்று ஏமாற்றப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் உள்ளோம்.

மகாவம்ச புத்த சமயம், இலங்கை பௌத்தர்களின் புனித பூமி எனவும், பௌத்தரல்லாத ஏனையோ யுத்தம் செய்து கொன்றொழிப்பதில் குற்றமில்லை எனவும் குறிப்பிடுகின்றது. இந்தப் பொய்யினால் இங்கு பெரும்பான்மை, சிறபான்மை ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துள்ளனர். எங்களது வரலாறு, அரசியல், புத்த சமய மகாநாம தேரர் மற்றும் அவரது சீடர்கள் சோடித்த இந்தப் பொய்யினால் மீட்டெடுக்கும் வரை இலங்கையில் சமாதானத்தை மலரச் செய்யவே முடியாது.


தமிழில் - கலைமகன் பைரூஸ்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

பொதுபல சேனாவுக்கு நன்றி சொல்கிறார் கண்டி மர்யம் ஷஹீதா


 சாதாரண முஸ்லிம் பெண்ணொருத்தி என்ற வகையில் பிரச்சினைகள் அதிகரித்துவரும் இவ்வாறான ஒரு கட்டுரையை வரைவதற்குரிய மனநிலை ஏற்பட்டது ஒரு விதிசார்ந்த விடயமாகும். 

இவர்கள் புத்த பகவானின் எதிரிகள்! - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா

(நாளைய ராவய வாரப் பத்திரிகையின் (2013/08/11) ‘மே அய புதுன்கே ஹத்துரோ’ (මේ අය බුදුන්ගේ හතුරෝ - එස්. පී. පුංචිහේවා , සටහන - ටිරන් කුමාර බංගමආරච්චි) எனும் கட்டுரையின் தமிழாக்கம் இது. காலத்தின் தேவை கருதி இது இங்கு பதிவேற்றப்படுகிறது.

தமிழாக்கம்: கலைமகன் பைரூஸ்)