It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

செத்தும் உயிர்வாழ்கிறேன்...!


என் சட்டைப் பையில் துளாவி
கடைசியாக என் கைகளுக்குள் அகபட்டுக்கொண்ட
இருபது ரூபா
நஞ்சு போத்தலுக்குப் போதாதிருந்தது.

செத்துச் செத்துப் பிழைப்பதிலும்
நன்றாக இல்லையா
உண்மையிலேயே சாவது?

அப்போது எங்கிருந்தோ
ஓர் அசரீரி கேட்டது

ஆணோணக்க கொட்டைகள்
கைககளுக்குள் விழும்போது
அதற்கிடையிருந்து
என் தாயின் துயரம் கலந்த முகம்
எனக்குள் காட்சியளித்தது...
இக்கணமுந்தான்...

நான் செத்துச் செத்து
உயிர்வாழ்கிறேன் நாளைய நாளும்
வாழ்வதற்காக விரும்புகின்ற
யாரேனும் ஒரு ஜீவனுக்காக
அவனின் சந்தோஷத்திற்காக...!

சிங்களத்தில் Janaranga Wijaindu Dewasurendra
தமிழில் - கலைமகன் பைரூஸ்
18.02.2018



0 கருத்துகள்:

கருத்துரையிடுக