லங்காதீப லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லங்காதீப லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 13 மார்ச், 2025
ஞாயிறு, 14 ஜனவரி, 2018
பல்கலைக்கழகங்களை அவமானத்திற்குட்படுத்தும் பகிடிவதை!
தரிந்து ஜெயவர்த்தன மற்றும் பிங்குன் மேனக்க கமகே(tharindudld@gmail.com / bingungamage88@gmail.com)
-தமிழில்: கலைமகன் பைரூஸ்
------------------------------------எங்களுக்கு சாரங்களைக் கழற்றுமாறு சொன்னார்.. நாங்கள் பீறிட்டு அழுதோம்....
-----------------------------------------------------------------------------
“விடுதிக்குச் சென்ற முதல்நாளே எங்களுக்கு சாரம் அணிந்துகொண்டு விடுதியின் அறைக்கு வருமாறு சொன்னார்கள். அதன்பிறகு இரண்டாம்
செவ்வாய், 20 ஜனவரி, 2015
தேர்தலன்று? இராணுவச் சூழ்ச்சி பற்றிய கதை என்ன?
2015 ஜனவரி மாதம் 20 12:51:06 | பரிவர்த்தனம்
ஜனவரி எட்டாம் திகதி இரவு இந்நாட்டின் பல்லாயிரக் கணக்கான மக்கள் தொலைக்காட்சியின் முன்னே நின்றுகொண்டு கண்களையும் காதுகளையும் கூராக்கிக் கொண்டு புதிதாக வரவுள்ள ஜனாதிபதி யாரோ என்பதைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தனர். சிலர் மகிந்தரைக் கேட்டனர். மற்றும் சிலர் மைத்திரியே வெல்வார் எனக் கூறினர். எட்டாந் திகதி இரவு இந்த தேர்தல் மிகவும் சூடுபிடித்திருந்தது.
ஒன்பதாந் திகதிக்கான சூரியன் மெல்ல மெல்ல உலகினை நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளை, வெளியாகிக் கொண்டிருந்த முடிவுகளுக்கு ஏற்ப பலருக்கும் வெற்றி வாய்ப்பு மைத்திரிக்குத்தான் என்பது தெளிவாகியது. மைத்திரி வென்று விட்டார் என்று தெளிவாகியது. அப்போதும் அலரி மாளிகையில் மிகவும் சிறப்பானதொரு நிகழ்வு நடந்தேறிக் கொண்டிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையே அது. வெளிவந்த செய்திகளுக்கேற்ப ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது தோல்வி நிச்சயிக்கப்பட்டு விட்டது என்பதைத் தெரிந்து கொண்ட அக்கணமே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பினை ஏற்படுத்தினார். தான் ரணிலைச் சந்திக்க வேண்டும் என்று கூறும் போது அதிகலை மணி நான்கு இருக்கும்.
ஒரு மணித்தியாலம் செல்வதற்கு முன்னரே ரணிலுக்கும் மகிந்தவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தேறியது மகிந்தவின் அழைப்பின் பேரில் ரணில் அலரி மாளிகைக்கு சென்றதனாலேயே. தான் பொதுமக்களின் விருப்பிற்குத் தலை சாய்த்து அலரி மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு தயாராக இருப்பதாகவும், புதிய ஜனாதிபதி மைத்திரிபால அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் மகிந்த சொன்னார். அத்துடன் தான் மைத்திரியுடன் உரையாடத் தேவையாக இருப்பதாகவும் சொன்னார். அக்கணமே ரணிலின் கைத்தொலைபேசி மகிந்தவின் கைக்கு மாறியவுடனேயே மைத்திரிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். மைத்திரி தனது பழைய தலைவருக்கு“சார்” என்று விளித்தே கதைத்தார்.
அந்த வரலாற்றில் அழியாத சில மணித்தியாலங்களின் பின்னர் வெளியே வந்தவை பற்றி நாம் அப்படியான கதையொன்றைத்தான் சொன்னோம்.
ஆயினும் தற்போது கேட்கக் கிடைப்பது அதற்கு மாற்றமானதொரு செய்தியே.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்து மூன்று நாட்களின் பின்னர் அதாவது 11 ஆம் திகதி மார்கஸ் மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று தயாராக இருந்தது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர் மங்கள சமரவீர. மங்கள நேரகாலத்துடனேயே முக்கிய விடயமொன்றை வெளிக்கொணர்வதற்காக காத்திருந்தார். மங்கள உரையாற்ற ஆரம்பித்தார்.
“பொதுமக்களின் விருப்பினை ஏற்று ஜனநாயக முறையில் தனது வீட்டை நோக்கிச் செல்வதற்காக அல்ல முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் தீர்மானித்திருந்தார். எட்டாம் திகதி இரவு தனக்கு தோல்வி நிச்சயமே என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் அவர் அதிகாலை ஒரு மணிக்கெல்லாம் இராணுவச் சூழ்ச்சி மூலம் அதனை மாற்றியமைக்கமே முயன்றார். தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதற்காக அவர் முயற்சி செய்தார் என்பதை நான் பொறுப்புணர்வுடன் சொல்கிறேன். இராணுவத்தினரை அழைத்து வாக்குகள் எண்ணுவதை நிறுத்தவும் முயன்றார். இராணுவத் தளபதி, சட்டமா அதிபர், பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை அழைத்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துவது எங்ஙனம் என ஆலோசித்தார்.” இதுபற்றி சொல்லிய வாயுடனேயே மங்கள இது தொடர்பில் மைத்திரி அரசாங்கத்தின் கீழ் விசாரணை நடாத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நள்ளிரவு ? நடைபெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சி பற்றி மங்கள அவ்வாறுதான் சொன்னார்.
ஒன்பதாம் திகதி அதிகாலை அலரி மாளிகையில் படுபயங்கரமான சூழ்ச்சியொன்று நடந்தேறப் போனதாகக் கூறி கதையொன்று காட்டுத்தீ போல நாடெங்கிலும் பரவியது. ஜனாதிபதி மைத்திரி தரப்பிலிருந்து மங்கள, ராஜித்த தொடர்ந்து இதுபற்றியே பேசிக் கொண்டிருக்கும்போது, மகிந்த தரப்பிலிருந்து ஜீ.எல், கம்மன்பில போன்றோர் மிகவும் சாந்தமான முறையில் எவ்வித குழப்ப நிலைகளுமின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அதிகாரங்களை மைத்திரிபாலவிடம் கையளித்தாரே தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை எனக் கூறினர்.
மகிந்தவின் சூழ்ச்சி மேசையைச் சுற்றிலும் இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதிச் செயலாளர், பிரதம நீதியரசர் அமர்ந்திருந்ததாகவும், மகிந்தவின் சூழ்ச்சிமிகு கதைக்கு சட்ட மா அதிபரிடமிருந்தோ, பொலிஸ் மா அதிபரிடமிருந்தோ, இராணுவத் தளபதியிடமிருந்தோ ஒரு சிறு வசனம் கூட வெளிவரவில்லை ஆதலால்,
விடயம் “அபேஸ்” ஆகியதாக மங்கள கூறும்போது ஜீ.எல், கம்மன் பில போன்றோர் மக்களின் விருப்பிற்குத் தலைசாய்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் நடந்தேறவுள்ள முறைகள் பற்றியே கலந்தாலோசித்தாகக் குறிப்பிட்டனர்.
இதே சந்தர்ப்பத்தில் சென்ற பன்னிரண்டாம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இது பற்றிக் கருத்துரைத்தார்.
“தேர்தலின் பின்னர் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ சூழ்ச்சி செய்ததாக குறிப்பிட்டு எதிர்க்கட்சியின் கட்டவிழ்த்து விட்டுள்ள கதையை அறுவறுப்புடன் நிராகரிக்கின்றேன். உலகத் தலைவர்கள் பலரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் “மகிந்த ராஜபக்ஷ தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரேயே தனது பதவியிலிருந்து விலகியது முன்மாதிரியான நிகழ்வாகும்” எனக் குறிப்பிட்டனர். தேர்தலுக்கு முன்னரேயே தேர்தலில் தோல்வியுற்றால் ஐந்து நிமிடம் கூட தனது பதவியில் இருக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டார். அவர் அதனை தனது செய்கை மூலமும் வெளிக்காட்டினார் .”
அவரது உரை அத்துடன் முடிவுக்கு வரவில்லை.
மங்கள வெளிவந்தார். அது சென்ற 14 ஆம் திகதி. மங்கள குற்றவியல் விசாரணைத் திணைக்கள முன்றலில் இருந்து கதைத்தார்.
“தேர்தல் முடிவுகளை நிறுத்துவதற்கு, இடைஞ்சல் விளைவிப்பதற்கு சூழ்ச்சி செய்வது எங்ஙனம் என கலந்தாலோசித்தனர். அன்றிரவே அவசர காலச்சட்டத்தை ஏற்படுத்தி கணக்கிடும் மத்திய நிலையங்களை இராணுவத்தினரை அனுப்பி முற்றுகையிடக் கதைத்தனர். தேர்தல்கள் ஆணையாளரின் அலுவலகத்திற்கு பனாகொட இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை அனுப்பி பயங்கர நிலவரமொன்றை ஏற்படுத்த கலந்துரையாடியதாக எங்களுக்கு நம்பகத்தன்மை மிகுந்த செய்திகள் கிடைத்தன.”
இந்த சூழ்ச்சி பற்றி மங்கள சமரவீர குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த சூழ்ச்சி தொடர்பில் நாங்கள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, கருத்துரைப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டு, இவை அரசியல் செயற்பாடுகள் எனவும், அதற்கு இராணுவத்தை இழுத்துக் கொள்ளக் கூடாது எனவும் இலங்கையின் முப்படைகளும் எப்போதும் இவ்வரசாங்கத்தின் கௌரவத்தைக் காப்பதற்காகவே செயற்பட்டு வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றபோதும் அவை விழலுக்கிரைத்த நீராகின.
சூழ்ச்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது
தமிழில் - கலைமகன் பைரூஸ்
புதன், 24 டிசம்பர், 2014
வடக்கின் வாக்குகள் யாருக்கு?

“ரீ.என்.ஏ. இம்முறை ஜனாதிபதித்
தேர்தலை பகிஷ்கரிக்குமா?”
“பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஒத்துழைப்பதற்கு மைத்திரி –
ரீ.என்.ஏ இடையே
கைச்சாத்து”
“சம்பந்தன்
இந்தியாவுக்குச் சென்று இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக செய்ய வேண்டியது என்ன? என
இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை”
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கின்ற சொற்ப காலத்திலும்
கூட இப்பேச்சுக்கள் அடிக்கடி அடிபடுகின்றன. தலைப்பு யாதெனில், தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பதாகும். சென்ற வாரம் லங்காதீப பத்திரிகையின்
முதல் பக்கச் செய்தியில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கவுள்ளதாகவும்,
பொது வேட்பாளர்கள் இருவரிலும் யாரேனும் ஒருவருக்கு உதவ முன்வருவதாகவும், பொது
வேட்பாளரான மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு நல்கவுள்ளதாகவும, ரீ.என்.ஏ மூன்றாகப்
பிரிந்து தங்களது பிரிவுக்குள் கட்சியை வழிநடாத்திச் செல்வதற்கு முயல்வதாகவும்
குறிப்பிட்டிருந்தது.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும்போது ரீ.என்.ஏ
பொன்சேக்காவின் வழியிலேயே நின்றிருந்தது. என்றாலும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில்
ரீ.என்.ஏ. எந்தப் பாதையைத்தான் தெரிவு செய்கின்றது என்பது கேள்விக்குறியாகவே
உள்ளது. ஒருபுறம் ஜனாதிபதி மகிந்தவின் வழியில்… மறுபுறம் பொதுவேட்பாளர் மைத்திரியின்
வழியில். அவ்வாறன்றி வேறுபாதைகள் அவர்களுக்குக் காட்சியளிக்க மாட்டாது எனக்
குறிப்பிட முடியும். மற்றொரு புறத்தில் எல்.ரீ.ரீ. யினரின் போர்த் தோல்வியும்,
தேசிய பிரச்சினைக்கு தீர்வு தேடி பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டவை அரசினால் கண்டு
கொள்ளப்படாமையும் ரீ.என்.ஏ வும் அரசாங்கமும் ஒரே பாதையில் பயணிப்பதில் தடையாக
உள்ளது என்பது மட்டுமன்றி அவ்வாறு பயணிக்கும் என்று கற்பனை கூட செய்ய
முடியாதுள்ளமையாகும்.
எது எவ்வாறாயினும் மீண்டும் ஒருமுறை வடக்கு கிழக்கின் வாக்குகளுக்கு அதிக பெறுமதியிருக்கத்தான் செய்கிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது, வடக்கில் ஏழு இலட்சம் வாக்குகள்தான் இருக்கின்றன. என்றாலும், இந்த வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலைத் தீர்மானிப்பதில்லை எனச் சொல்லவியலாது. 2005 ஜனாதிபதித் தேர்தலின்போது இதுபற்றி நன்கு தெளிவானது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் அச்சுறுத்தலினால் வடக்கு – கிழக்கில் உள்ள மக்கள் வாக்களிக்கவில்லை. ஆயினும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது மகிந்தவே. மகிந்தவுக்கு 48,87,152 - (50.29%) வாக்குகள் விழும்போது, ரணிலுக்கு 47,06,366 - (48.43%) வாக்குகள் மட்டுமே விழுந்தது. இரண்டிற்கும் இடையிலான இடைவெளி 1,80,786 ஆக இருந்தது. 2005 இல் வடக்கின் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் 2005 இல் நாட்டை ரணிலே பொறுப்பேற்றிருப்பார். இதன் சிறப்பு என்னவென்றால், ரணிலை விடவும் மகிந்தவுக்கான பௌத்தர்களின் பங்களிப்பு அதிகம் என்பதாகும். தெற்கின் சிங்கள சமூகத்தினிடையே மகிந்தவுக்கு வாக்குகள் கிடைத்தவாறே ரணிலுக்கும் கிடைத்தது என்பதுதான் வெளிப்படையான உண்மை. பெறுபேற்றின்படி மகிந்த இரண்டு இலட்சம் வாக்குகளை விடவும் குறைந்த அளவிலேயே அரியாசனத்தில் ஏறுவதற்கு வரம் பெற்றார்.
கேள்வி : உங்களுக்கும்
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று
கைச்சாத்திடப்பட்டதாக பேசப்படுகின்றதே. அதில் உண்மையுள்ளதா?
பதில் : அது
அவரது சொந்த முடிவாக இருக்கலாம். என்றாலும் நாங்கள் பொதுமக்களுக்குச் சொல்வது
என்னவென்றால் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லுங்கள்
என்பதே. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் பொறுப்புடன் செயற்படுகின்ற கட்சி
என்பதால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை
எங்களுக்குள்ளது.
கேள்வி : உங்களுக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக பேசப்படுகின்றதே. அதில் உண்மையுள்ளதா?
கேள்வி : அதை வைத்துக் கொண்டு தமிழ்
தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?
கேள்வி : என்றாலும் உள்ளே ஒரு பிரிவினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடுகையில், தாங்களோ நீங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களியுங்கள் எனக் குறிப்பிடுகிறீர்கள். பிரச்சினையொன்று இருக்கின்றது தானே?
கேள்வி : குறைந்தளவு அவருடன் அவ்வாறான பேச்சுவார்த்தையில் கூட ஈடுபடவில்லையா?
பதில் : நாங்கள் எல்லோருடனும்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றோம். என்றாலும் எங்கள் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நாங்கள் யாருடனும் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை.
கேள்வி : அரசாங்கத்துடன் இதுதொடர்பில் கலந்துரையாடினீர்களா?
கேள்வி : சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றதற்கான காரணம் ஜனாதிபதித் தேர்தலின்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கலந்தாலோசிப்பதற்காகவே ஆகும் எனவும் ஒரு பேச்சு அடிபடுகின்றதே. அது உண்மையா?
எது எவ்வாறாயினும் மீண்டும் ஒருமுறை வடக்கு கிழக்கின் வாக்குகளுக்கு அதிக பெறுமதியிருக்கத்தான் செய்கிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது, வடக்கில் ஏழு இலட்சம் வாக்குகள்தான் இருக்கின்றன. என்றாலும், இந்த வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலைத் தீர்மானிப்பதில்லை எனச் சொல்லவியலாது. 2005 ஜனாதிபதித் தேர்தலின்போது இதுபற்றி நன்கு தெளிவானது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் அச்சுறுத்தலினால் வடக்கு – கிழக்கில் உள்ள மக்கள் வாக்களிக்கவில்லை. ஆயினும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது மகிந்தவே. மகிந்தவுக்கு 48,87,152 - (50.29%) வாக்குகள் விழும்போது, ரணிலுக்கு 47,06,366 - (48.43%) வாக்குகள் மட்டுமே விழுந்தது. இரண்டிற்கும் இடையிலான இடைவெளி 1,80,786 ஆக இருந்தது. 2005 இல் வடக்கின் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் 2005 இல் நாட்டை ரணிலே பொறுப்பேற்றிருப்பார். இதன் சிறப்பு என்னவென்றால், ரணிலை விடவும் மகிந்தவுக்கான பௌத்தர்களின் பங்களிப்பு அதிகம் என்பதாகும். தெற்கின் சிங்கள சமூகத்தினிடையே மகிந்தவுக்கு வாக்குகள் கிடைத்தவாறே ரணிலுக்கும் கிடைத்தது என்பதுதான் வெளிப்படையான உண்மை. பெறுபேற்றின்படி மகிந்த இரண்டு இலட்சம் வாக்குகளை விடவும் குறைந்த அளவிலேயே அரியாசனத்தில் ஏறுவதற்கு வரம் பெற்றார்.
நாங்கள் இதுவரை
முடிவெடுக்கவில்லை
தமிழ்
தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்
கேள்வி : ரீ.என்.ஏ
வில் ஒரு பகுதியினர் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை
பகிஷ்கரிக்கவுள்ளதாகவும், இன்னொரு பகுதியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு
வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தாங்கள் ஏது செய்ய வேண்டும் என்று
தீர்மானித்து விட்டீர்களா?
பதில் : நாங்கள்
இதுவரை தீர்மானிக்கவில்லை. எங்கள் கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன்
இந்தியாவுக்குச் சென்றிருக்கின்றார். அவர் இலங்கைக்கு வந்ததும் நாங்கள்
முடிவெடுப்போம்.
கேள்வி : என்றாலும்
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடக்கிலுள்ள மக்கள் தங்களுக்கு விரும்பிய
எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தாரே?
கேள்வி : உங்களுக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக பேசப்படுகின்றதே. அதில் உண்மையுள்ளதா?
பதில் : உண்மையில்
மகிந்த ராஜபக்ஷவாக இருக்கட்டும், மைத்திரிபால சிரிசேனவாக இருக்கட்டும். இருவரில்
எந்தவொரு நபரும் இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை எந்தவொரு
கருத்தும் முன்வைக்கவில்லை. நாங்கள் இவை அனைத்து தொடர்பிலும் எங்கள் தலைவர்
இலங்கைக்கு வந்தபின்னர் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்.
நாங்கள் மைத்திரியுடன் எந்தவொரு
உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ. சுமந்திரன்
கேள்வி : எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது?
பதில் : நாங்கள்
அதுதொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை.
பதில் : இல்லை. அவ்வாறான
எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எங்கள் தமிழ் மக்கள்
இருக்கின்ற இடங்களுக்குச் சென்று அது தொடர்பில் உரையாடி வருகின்றோம். என்றாலும், எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டதாக இல்லை.
கேள்வி : என்றாலும் உள்ளே ஒரு பிரிவினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடுகையில், தாங்களோ நீங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களியுங்கள் எனக் குறிப்பிடுகிறீர்கள். பிரச்சினையொன்று இருக்கின்றது தானே?
பதில் : இல்லை. பல்வேறு கருத்துக்கள்
வெளிவருவது சாதாரணமானது. இந்நேரம் நாங்கள் பொதுமக்களின் கருத்துக்களை
கணிக்கின்றபோது எல்லோரும் ஒரே கருத்தைச் சொல்ல மாட்டார்கள்தானே. அவ்வாறான அவர்கள்
அனைவரினதும் கருத்துக்களைக் கணித்து நாங்கள் இறுதியில் ஒரு தீர்மானம் எடுப்போம்.
கேள்வி : ரீ.என்.ஏ. மைத்திரிபால சிரிசேனவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்ற பேச்சில் உண்மையுள்ளதா?
பதில் : அது பெரும் பொய். அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை.
கேள்வி : ரீ.என்.ஏ. மைத்திரிபால சிரிசேனவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்ற பேச்சில் உண்மையுள்ளதா?
பதில் : அது பெரும் பொய். அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை.
கேள்வி : குறைந்தளவு அவருடன் அவ்வாறான பேச்சுவார்த்தையில் கூட ஈடுபடவில்லையா?
பதில் : நாங்கள் எல்லோருடனும்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றோம். என்றாலும் எங்கள் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நாங்கள் யாருடனும் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை.
கேள்வி : அரசாங்கத்துடன் இதுதொடர்பில் கலந்துரையாடினீர்களா?
பதில் : தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்
பேச்சுவார்த்தை நடாத்துவதில்லை என அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது. அதனை அநுர
பிரியதர்சன யாப்பா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவிப்
பிரமாணம் செய்துகொண்டபோதும் அறிவித்தார். அதற்கேற்ப, அரசாங்கம் எங்களுடன்
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என நாங்கள் நினைக்கவில்லை.
கேள்வி : சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றதற்கான காரணம் ஜனாதிபதித் தேர்தலின்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கலந்தாலோசிப்பதற்காகவே ஆகும் எனவும் ஒரு பேச்சு அடிபடுகின்றதே. அது உண்மையா?
பதில் : இல்லை. இல்லவே இல்லை.
சம்பந்தன் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவரின் வைத்திய பரிசோதனைக்காகச்
செல்கின்றார். தற்போதும் அவர் வைத்தியசாலையில்தான் இருக்கின்றார்.








.jpg)