It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வியாழன், 13 மார்ச், 2025

வரலாற்றில்... பாராளுமன்றிலிருந்து இராஜினாமாச் செய்தோர் விபரம் தெரியுமா?

 பாராளுமன்றிலிருந்து அமைச்சர்களும், மந்திரிமாரும் இராஜினாமாச் செய்வதென்பது உலக அரசியலில் புதியதொரு விடயமன்று. என்றும் காதுகளில் அடிபடும் - கண்களில் தென்படும் விடயமாகும். ஏதேனும் சிறு குறையேனும் நிகழுமிடத்து, தான் குறித்த பதவியிலிருந்து குறுகிய காலத்திலேயே பதவியை

இராஜினாமாச் செய்வதென்பதுதான் குறைந்தளவில் நிகழும் நிகழ்வு. ஆயினும் இலங்கையில் இவ்வாறான பாத்திரங்களைக் காண்பதரிது. ஆயினும் வாய்கிழியக் கத்தி தான் விலகப் போவதாகக் குறிப்பிடுவோர் மலையளவு உள்ளனர். தங்கள் எண்ணிய காரியங்கள் சரிவர நிகழாதவிடத்து ஏதேனும் காரண காரியம் கூறி அதற்கான உண்மையான காரணங்களை மறைத்துவிடுவர். எதுஎவ்வாறாயினும் இந்நாட்டு அரசியல் வரலாற்றில் இராஜினாமாச் செய்த பலர் உள்ளனர். இவற்றில் சில அரசியல் முரண்பாடு காரணமாகவும் மற்றும் சில தங்கள்  கொள்கைகளில் மாற்றம் நிகழும் போது இராஜினாமாச் செய்தோர் ஆவார். அந்த இராஜினா நிகழ்வுகளைப் புதிதுபடுத்தி, இந்நாட்களில் எல்லோரும் இன்று கதைத்து வருவது தற்போதைய சபாநாயகர் அசோக ரங்வலவின் இராஜினாமாவாகும். சென்று சில வாரங்களாக பத்திரிகைகளில் வௌியாகி சுவையான செய்தியாக அது மாறியுள்ளது. 

        

1953 ஆம் ஆண்டு பிரதமர் டட்லி சேனாநாயக்கா அவர்கள் தனது பதவியை இராஜினாமாச் செய்தார். 1953 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரிசியின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி இன்னும் பல உதவிகளை இல்லாமற் செய்ததன் காரணமாக ஒரு வருடத்திற்குள் அபகீர்த்திக்கு ஆளானமையே அதற்குக் காரணமாகும். 


        1962 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் ஆட்சியிலும் பல இராஜினாமாக்கள் நிகழ்ந்துள்ளன. பொதுமக்களுக்கு வழங்கப்படும் இரண்டு கொத்து அரிசியிலிருந்து அரை வாசியை குறைக்கும் பிரேரணையாகும். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அக்கால நிதியமைச்சர் முல்கிரிகல மந்திரி ஜோர்ஜ் ராஜபக்‌ஷ தனது பதவியைத் இராஜினாமாச் செய்தார். ஜோர்ஜ் ராஜபக்‌ஷ என்பவர் டீ.ஏ. ராஜபக்‌ஷ அவர்களின் உறவினராவார். இந்தப் பிரச்சினை மேலெழும்போது, இறுதியில் அந்தப் பிரேரணையைக் கொண்டு வந்த அன்றைய நிதியமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் தனது பதவியை இராஜினாமாச் செய்து கொண்டார். 

   

ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்களின் ஆட்சிக் காலத்தில் 1987 இல் இந்து - இலங்கை ஒப்பந்தத்திற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து அக்கால விவாசய அமைச்சரான காமினி ஜயசூரிய அவர்கள் தனது பதவியை இராஜினாமாச் செய்து கொண்டார். அத்தோடு சிரில் மெதிவ் அவர்களும் தனது இராஜினாமாச் செய்து கொண்டார். ஜயவர்த்தன அரசாங்கம் இது தொடர்பில் பிரபலமாயிருந்தது. அதற்கான காரணம் என்னவென்றால், அமைச்சரிகளிடமிருந்து குறித்த நாட்கள் இல்லாத பதவி விலகல்கள் தொடர்பில்  ஏலவே ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் செயற்பட்டதாக ஊடகங்கள் அறிவித்தமையாகும். 

       
1988 இல் பாராளுமன்றத்தில் கூறப்பட்ட கருத்தொன்று தொடர்பில், அதற்குச் சார்பாக அக்கால அமைச்சரவை உறுப்பினர்களில் ஒருவரான ரொனி டி மெல் அவர்கள் தனது பதவியை இராஜினாமாச் செய்தார். இந்த நடவடிக்கையானது அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு தொடர்பில் 
 இந்நாட்டு அரசியலுக்குக் களங்கம் விளைப்பதாகும். எதுஎவ்வாறாயினும் 1977 இல் ஆறில் ஐந்து வெற்றி வாகை சூடி பெரும்பாலானோரின் ஆதரவு கொண்டு ஆட்சி பீடம் ஏறிய ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்களின் ஆட்சியில் நிதியமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டவரும் ரொனி டி மெல் அவர்களேயாவார். அவர் 17 ஆண்டுகள் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பதினொரு பாதீடுகளை முன்வைத்ததன் பின்னரே இந்தப் பதவி விலகல் இடம்பெற்றதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

       

இலங்கையின் தற்கால அரசியலில் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் இராஜினாச் செய்தமை பற்றி இங்கு குறிப்பிடுவது சுவாரஷ்யம் நிறைந்ததாகும். அமைச்சர் மாரப்பன அவர்கள் 2015 ஆம் ஆண்டு இராஜினாமாச் செய்கிறார். அவ்வாண்டு அவன்கார்ட் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கருத்தாடல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டே அவர் தனது பதவியை இராஜினாமாச் செய்தார். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பாரிய எதிர்ப்பலைகள் கிளம்பி வெடித்தன. பொதுமக்கள் அமைப்புகளும் பொதுமக்களும் மாரப்பன அவர்கள் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று உரத்த குரல் விடுத்தனர். இறுதியில் அவர் பதவி விலகிக் கொண்டார். 

        
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அதாவது 2017 இல் அக்கால நிதியமைச்சராகவிருந்த ரவீ கருணாநாயக்க அவர்கள் தனது பதவியை இராஜினாமாச் செய்து கொண்டார். திறைசேரி உண்டியல் வழங்கியமை தொடர்பிலேயே அவர் பதவி விலகிக் கொண்டார். கருணாநாயக்க அவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது மாதங்கள் மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்களைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ்  அவர்களது நிறுவனத்திலிருந்து பணம் செலுத்திப் பெற்றுக் கொண்ட வீடொன்றில் வசித்து வந்தமை தொடர்பிலேயே கருணாநாயக்க அவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அரசாங்கத்தின் அந்தரங்கமான எதிர்ப்பு, வௌியிலிருந்து வந்த எதிர்ப்பு ஆகியவற்றை முகாமைத்துவப்படுத்தும் நோக்கிலேயே ரவீ கருணாநாயக்க அவர்களின் பதவி விலகல் அமைந்தது. 


        
       
இதற்கு மேலதிகமாக 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் அதிகாரப் பிறழ்வின் இறுதியில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் பதவி விலகலும் இதற்குள் உள்வாங்கப்படலாம். எது எவ்வாறாயினும் சட்ட ரீதியான பிரச்சினைகள் பலவும் இதில் மேலெழுந்தன. முக்கியமாக ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை கிடைக்காமை இந்த பதவி விலகலுக்குக் காரணமானது. எவ்வாறாயினும் பதவி விலகிய பிரதமர்கள் வரிசையில் மகிந்த ராஜபக்‌ஷவும் இணைந்து கொண்டார். 



       
சென்ற வருடம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அதாவது, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03 ஆம் திகதி இந்நாட்டு அரசியல் வரலாற்றில் பாரியளவு பதவி விலகல்கள் நிகழ்ந்தன. அதற்கேற்ப, அமைச்சுப் பதவிகளிலிருந்து ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், அப்துல் ஹலீம், கபீர் ஹாஷிம், காஸிம் மொஹமட் பைஸல், மொஹமட் ஹரீஸ், அமீர் அலி மற்றும் அலி ஸஹீர் மௌலானா ஆகிய முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினர். அதற்கு மேலதிகமாக அப்துல்லாஹ் மஹ்ரூப் என்ற பிரதியமைச்சரும் தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற, அமைச்சர்களின் பதவி விலகலுக்குக் காரணமாக இருந்தது எதுவென்றால், இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அவசரமாக தீர்வினைப் பெற்றுக்கொண்டமையாகும். நாட்டினுள் இனங்களிடையே காணப்படும் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காகவே தாம் இந்த முடிவினை எடுத்ததாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார். ஆயினும் இவர்கள் மீண்டும் குறுகிய காலப்பகுதியில் தங்களது பதவிகளைப் பெற்றுக் கொண்டனர். 



       
        பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களும் தனது பதவி விலகலுக்கான கடிததத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ அவர்களிடம் கையளித்துப் பதவி விலகியவராவார். போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்கவும் தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அதற்கு மேலதிகமாக மங்கள சமரவீர, கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்கிரம, ருவன் விஜயவர்த்தன, ஹரீன் பிரனாந்து, அஜித் பீ. பெரேரா ஆகியோரும் தத்தமது பதவிகளிலிருந்து விலகிக் கொண்டார்கள். 



        
2024 ஆம் ஆண்டிலும் இவ்வாறான பதவி விலகல்கள் இடம்பெற்றன. தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி ஜனவரி மாதம் 9 ஆம் திகதி, பாராளுமன்றப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். பாராளுமன்றப் பதவியிலிருந்து தான் விலகப் போவதாக அறிக்கை விட்டதன் பின்னர், பதவி விலகல் கடிதத்தை பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர அவர்களிடம் கையளித்து பதவி விலகிக் கொண்டார். பாராளுமன்றம் பற்றிய பொதுமக்களின் நம்பிக்கை உடைந்து சுக்குநூறாகியுள்ளதனாலேயே தான் பதவியிலிருந்து விலகியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 


    ​

கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் கூட பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி, தனது சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகிக் கொண்டார். இந்தியக் கடன் பிரேரணையின் கீழ்  போலியான ஆவணங்களைத் தயார் செய்து தரமற்ற 'அன்ரிபயடிக்' தடுப்பூசிகளை அரச மருத்துவமனைகளுக்கு விநியோகித்ததன் காரணமாக கோடிக்கணக்கான ரூபா பண மோசடி செய்தமை மற்றும் நோயாளிகளின் உடல்கள் பாதுகாப்பற்ற முறைக்கு உள்ளாக்கினமை தொடர்பில், பொலிஸாரினால் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். பொதுமக்களும் அரசியல் கட்சிகள் பலரும் ஏலவே ரம்புக்வெல்லவை மேற்படி விடயம் தொடர்பில் கைது செய்யுமாறு கோரியிருந்தது. அதற்கேற்ப 
கெ​ஹெலிய ரம்புக்வெல்லவை குறித்த பதவியிலிருந்து பதவி விலக்கி, குறித்த அமைச்சுப் பதவியை ரமேஷ் பதிரண அவர்களிடம் ஒப்படைத்த அரசாங்கம், 
கெ​ஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு சுற்றாடல் அமைச்சுப் பதவியை வழங்கியது. ஆயினும் அரசாங்கம் வழங்கிய குறித்த அமைச்சுப் பதவியிலிருந்து கெ​ஹெலிய ரம்புக்வெல்ல, தான் பதவி விலகிக் கொண்டார். 
   
அதே மாதம் 26 ஆம் திகதி பிரபல சிங்கள நடிகர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன அவர்களும் தனது பதவியை இராஜினாமாச் செய்து கொண்டார். விமல் வீரவன்ச அவர்கள் தலைமைத்துவம் தாங்கும் தேசிய சுதந்திர முன்னணி சார்பாக, பொதுத் தேர்தலில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து மொட்டுக் கட்சியிலிருந்து போட்டியிட்டு வென்ற போதும், இந்நாட்டு அரசியலில் அதிருப்தியடைந்ததன் காரணமாக பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இதுதொடர்பில் அவரே மேற்சொன்ன கருத்தை நியாயப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 


    

    


        
        (தொடரும்...)


சிங்களத்தில் - சஷிகா அபேரத்ன

தமிழில் - கலைமகன் பைரூஸ்


        

    

    

    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக