It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 29 மே, 2018

இனம்: இலங்கையர் - சமயம்: இஸ்லாம்

ற்போதைய இலங்கை ஏலவே, பன்மொழியும் பல மதங்களையும் கொண்ட நாடாகியுள்ளது. இவ்வாறான நாடுகள் உலகில் பல உள்ளன. அந்த நாடுகளிலும் இடைக்கிடையே பிளவுகள் ஏற்படுகின்றன. நீண்ட காலமாக யுத்தம் நடைபெற்றுவரும் நாடுகளும் உள்ளன. அதேவேளை ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் பன்மொழி பேசுகின்ற, பல மதங்களையும் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்ற நாடுகளும் உள்ளன. யுத்தம் என்றுமே உயிர்களையும், சொத்துக்களையும் காவுகொள்வதோடு சந்தேகம், சோகம் என்பவற்றையும் ஏற்படுத்துகின்றன.

செவ்வாய், 15 மே, 2018

முஸ்லிம் சமூகம், தீவிரவாதம் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள்

இந்த நாட்டில் சிங்கள, தமிழ் என இரு சமூகங்களிலும் தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் நிலை உள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாதம் இருக்கிறதா? என்று முஸ்லிம் சமூகத்திடம் கேட்டால் இல்லை என்பதே பொதுவான பதில்.
சிங்கள சமூகத்திலும் தமிழ் சமூகத்திலும் மத மற்றும் இன தீவிரவாதம் மற்றும் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க சமூக அரசியல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. எனினும், முஸ்லிம் சமூகத்தில் அவ்வாறான தீவிரவாத எதிர்ப்பு சமூக அரசியல் கருத்தியலோ செயற்பாடுகளோ இல்லை அல்லது மிகவும் அரிதானது.