It

Monday, April 16, 2018

இலங்கையில் முஸ்லிம்களுக்கு உள்ள உரிமை அறபு நாடுகளில்கூட இல்லை! அப்துல் ஸத்தார்

முஸ்லிம் வியாபாரிகளுக்கு, சிங்கள வாடிக்கையாளர்கள் இல்லாதுவிட்டால் உயிரை விட நேரிடும்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - முஸ்லிம் அமைப்பின் தேசிய அமைப்பாளர் அப்துல் ஸத்தாரின் கருத்து
(தமிழில் - கலைமகன் பைரூஸ்)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்களில், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் எழாதிருக்க ஆவன செய்ய வேண்டியிருப்பதோடு, இந்தப் பிரச்சினையை நிறுத்துவதற்காக பொறுப்புமிக்க அதிகாரிகள் செயற்பட்ட முறையில் முறையும் கருத்திற் கொள்ள வேண்டியதாகும். 

முஸ்லிம் ஒருவராக நின்று நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இன்று நாங்கள் இந்தப் புண்ணிய பூமியில் முஸ்லிம்கள் என்ற மூடத்தனத்தில் அன்று... இலங்கையர் என்ற எண்ணப்பாடுடனேயோகும். பொதுவாக இன்று நாம் அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் இம்சைக்குட்படுத்தப்பட்டுள்ளோம். 1983 ஜூலைக் கலவரத்தில் தமிழ் மக்களைப் படுபாதாளத்தில் தள்ளிய அன்றைய அரசாங்கம் போன்று, இந்த அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு அதே கைங்கரியத்தையே செய்துள்ளது என்பதை கவலையுடன் கூற வேண்டும்.

உலகின் சகல நாடுகளுக்கும் வெளிநாட்டாரின் கரங்கள் மேலெழுந்துள்ளன. வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் கட்சி ஒரு அமைப்பு அல்ல. என்றாலும், அரசாங்கம் ஒன்று அவ்வாறு செயற்படக் கூடாது. அனைத்து இனங்களுக்கும் சரிசமமாக பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம், தனக்கு வாக்கு அளித்தாலும் அளிக்காவிட்டாலும் மிகவும் கீழ்த்தரமான வர்க்கவாத முடிவுகளை முன்னெடுக்கக் கூடாது. நாட்டில் உள்ள அனைவரையும் பாதுகாப்பதே இராணுவத்தினரின்  கடமை. அனைத்துக் குடிமக்களையும் இராணுவத்தினர் சரிசமமாகவே கருத வேண்டும்.

இந்த நாட்டில் அரசியலாளர்கள் சந்தர்ப்பாத அரசியல் செய்கிறார்கள். தங்கள் பதவியை நிலைநிறுத்துவதற்காக இனவாதத்தைக் கட்டியெழுப்புவதைக் காணக்கூடியதாக உள்ளது. முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என, சந்தர்ப்பவாத முஸ்லிம் அரசியலாளர்கள்தான் காட்டிக்கொடுத்திருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எந்தக் கேடு வந்தாலும் சரி... தங்கள் அமைச்சுப் பதவிகளை, தங்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதங்களைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இனத்துக்குத் துரோகம் விளைவிக்கும் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் அதுவாகத்தான் இருக்கின்றது. 

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் மிகவும் தூரநோக்குடன், யுத்தத்தை இல்லாதொழிப்பதற்காக முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு பற்றி இன்று பெரும்பாலானோர் மறந்துள்ளனர். 83 ஜூலையில் இடம்பெற்ற கலவரத்தைச் சரிவர முடக்காததனால்தான் அது யுத்தமொன்றாக வளர்ச்சியடைந்தது. சந்தர்ப்பவாத அரசியலினால்தான் முஸ்லிம்களின் வீடுகளும்  , சொத்துக்களும் தீக்கிரையாகின. முஸ்லிம்கள் பேசாமடந்தைகளாகப் பார்த்திருந்தனர்.

முஸ்லிம்களாகிய நாங்கள் இந்தப் புண்ணிய இலங்கையில்தான் பிறந்தோம்.  தமிழர்களுக்குத் தேவையாயின் இந்தியாவுக்குச் செல்லலாம். ரோஹிங்கியருக்குத் தேவையாயின் பங்களாதேஷத்திற்குச் செல்லலாம். ஆயினும், இலங்கையில் பிறந்த எங்களைப் பொறுப்பேற்க பாகிஸ்தானும், அறபுநாடும் விரும்புவதில்லை. நாங்கள் மரணிக்க வேண்டியதும் நாங்கள் பிறந்த இந்த இலங்கை மண்ணிலேதான். 

முஸ்லிம்களாகிய எங்களுக்கு தமிழீழம் போல முஸ்லிம் நாடு தேவையில்லை. முஸ்லிம் நாடொன்றை விடவும் இலங்கையில் முஸ்லிம்கள் தங்களது அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்கின்றார்கள் என்று மார்தட்டிச் சொல்லவிரும்புகிறேன். முஸ்லிம்கள் கருத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் ஒன்று உள்ளது. அதுதான், அறபு நாடுகளை விடவும் இந்நாட்டு முஸ்லிம்கள் மத சுதந்திரத்தில் முன்னணியில் நிற்கின்றார்கள். இந்நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளினதும் முடிவாக இருப்பது நாட்டின் அரசியலும் பொருளாதாரமும் கீழ்நோக்கிச் செல்வதாகும். 

முஸ்லிம்கள் தங்களது உண்மையான வாழ்க்கையை மரணத்தின் பின்னரே தொடங்குகின்றனர். ஆயினும், இன்று அதிகாரத்தில் நின்கின்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் பாரா’ளுமன்றத்தில் தங்களுக்குரிய சொகுசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக, தம் இனத்தைக் காட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு ஏதேனும் அநீதியிழைக்கப்பட்டால் மாத்திரம் பாராளுமறத்தில் பத்து நிமிடங்கள் கதைப்பது அவர்களது கடமையாக உள்ளது. அதன்பின்னர் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகள் பற்றி அவர்கள் எந்தக் கவனமும் செலுத்துவதில்லை. இந்த அதிகாரத்தைத் தக்கவைக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றவர்களால்தான் முஸ்லிம்கள் பெரும்பாலும் நிர்க்கதிக்குள்ளாகின்றார்கள். 

தங்களுடைய பதவி மோகத்தில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக இருக்கின்ற இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றை மட்டும் நன்கு கருத்திற் கொள்ள வேண்டும். இறைவனை ஒருபோதும் ஏறமாற்ற முடியாது. 

83 ஜூலைக் கலவரத்தின்போது தமிழர்கள், இலங்கையை விட்டுச் சென்றபோதும் முஸ்லிம் அவ்வாறான தீர்வை நாடுவதற்கான சூழ்நிலை அற்பமாகவே உள்ளது. நாங்கள் இந்நாட்டில் வாழ்வதன் மூலமே எங்களுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் உள்ளத்தை மாசுபடுத்தி, தற்கொலை எண்ணத்தையே ஊட்டியுள்ளனர்.

எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஓர் உண்மையுள்ளது. இந்நாட்டு முஸ்லிம்களின் பொருளாதாரம் சிங்கள நுகர்வோரிலேயே தங்கியுள்ளது. இதன் மூலம்தெளிவாவது என்னவென்றால், முஸ்லிம்கள் சிங்களவர்களினால்தான் உயிர் வாழ்கிறார்கள் என்பதுதானே? சிங்களவர்கள் ஒன்றிணைந்து முஸ்லிம்களின் வியாபாரம் தொடர்பில்  ஆர்ப்பாட்டம் நடாத்தினால் முஸ்லிம்களாகிய நாங்கள் பட்டிணியில் சாக வேண்டியதுதான் என்பது மாபெரும் உண்மையல்லவா?

அறபு நாட்டைச் சேர்ந்த உல்லாசப்பயணிகள் இலங்கைக்கு வருவதனால், இலங்கை பாரிய அந்நியச் செலாவணியை ஈட்டுகின்றது. மத்திய கிழக்கில் பணிபுரிகின்ற பெண்களால் இலங்கை பெறுகின்ற அந்நியச் செலாவணி பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அதன் மூலம்தான் இலங்கை அதிகமான ஆதாயத்தைப் பெறுகின்றது. கண்டியில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை காரணமாக அறபு நாட்டு மிகப் பெரும் புள்ளிகள் பலர் இலங்கையில் ஒதுக்கியிருந்த ஹோட்டல்களை இரத்துச் செய்துள்ளார்கள். இலங்கைக்கு இது பாதிப்பினையே ஏற்படுத்துகின்றது. அறபு நாட்டிலிருந்து எண்ணெய்க் கப்பலொன்று கால தாமதாகி இலங்கைக்கு வந்தால், இலங்கையிலுள்ள அனைவருமே தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுவதைக் காணலாம். அதே அறபு நாடுகள் இலங்கைக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்திவிட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டாமா?

மிக நீண்ட காலமாகவே முஸ்லிம்கள் பௌத்தர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றார்கள். முஸ்லிம்கள்,  பௌத்த மதகுருமார்களுக்கும் அளப்பரிய மரியாதை செலுத்தி வருகின்றார்கள். முஸ்லிம்களில் 99 சதவீதமானவர்களின் உள்ளத்தில், சிங்கள பௌத்தர்கள் உயரிய பௌத்த நெறிகளுடன் வாழ்கின்ற சமுதாயத்தினர் என்ற எண்ணப்பாடு உள்ளது.

அறபு வசந்தத்தை பெரும் நிந்தனையோடு பார்த்திருந்தபோதும் இறுதியில் நடைபெற்றது என்னவென்றால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கீழே தள்ளிவிட்டதேயாகும்.

இந்த நாட்டு அரசியலில் பெரியதொரு தப்பு நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், தேர்தல்கள் சனிக்கிழமைகளிலேயே நடைபெறுகின்றன. சென்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்தினம் வெள்ளிக்கிழமையாகும். வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களின் உள்ளங்கள் மாசுபடுத்தப்படுகின்றன. எவ்வாறென்றால், மஹிந்த ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் தொப்பிகளைக்  கழற்றுவார்கள். பள்ளிகளை உடைப்பார்கள். முஸ்லிம்களுக்கு செல்வதற்கு இடமே இல்லாது போகும் போன்ற விடயங்களைக்கூறி முஸ்லிம்களின் உள்ளங்கள் மாசுபடுத்தப்படுகின்றன. 

முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற கருத்து, இந்நாட்டு மக்கள் மத்தியில்  உள்ளது. முஸ்லிம்கள் பணமீட்டக்கூடிய வியாபாரிகள் என்றே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். என்றாலும், உண்மை என்னவென்றால், முஸ்லிம்களில் 90 வீதமானவர்கள் கல்வியறிவில்லாத ஏழைகள் என்பது என்ன கருத்தல்லவா?


இந்த சிங்கள - முஸ்லிம் பிளவுக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருப்பவர்கள் யாரென்றால், ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே. எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து அவர்களுக்குப் பழக்கமில்லை. வடக்கு கிழக்கில் மீண்டும் குடியமர்ந்த முஸ்லிம்களுக்கு ஒரு மலசலகூடத்தைக்கூட இவர்கள் கட்டிக்கொடுக்கவில்லை.


குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களினால் தற்காலிகமாக சிங்களவர்களும் முஸ்லிம்களும் பிரிந்திருக்கிறார்கள். சர்வதேச அமைப்புக்களான அல்கைதா, ஜிஹாத் அமைப்புக்களின் இலங்கைப் பிரதிநிதிகளாக முஸ்லிம்களை இனங்காட்ட முனைந்தாலும், இந்த அப்பாவி முஸ்லிம்களிடம் தற்பாதுகாப்புக்காக ஒரு விறகுக்கட்டை கூட இல்லை என்பதை தெளிவாகச் சொல்லியாக வேண்டும். 


முஸ்லிம்கள் எப்பொழுதும் சிங்களவர்களுடன் இணக்கப்பாட்டுடன் இருந்துள்ளனர். புலம்பெயர்ந்த எல்.ரீ.ரீ.ஈ  இயக்கத்தினர் என்றும் முஸ்லிம்களுடன் கடும் விரோதமாகவே இருக்கின்றனர் என்பதைச் சொல்லியாக வேண்டும். யுத்தத்தின்போது முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் கைகோர்த்தே நின்றனர் என்பதே இதற்குக் காரணம். வடக்கிலிருந்து முழுமையாக முஸ்லிம்களை துரத்தியவர்கள் எல்.ரீ.ரீ.யினரே.  அதனை ஒருபோதும் மறக்கமுடியாது. அதனால்தான் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பிரச்சினைக்குள் உட்படுத்துகின்றார்கள்.  


ஜெனீவாப் பிரச்சினையை ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொண்டபோது, இலங்கை முஸ்லிம்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையே. இந்தப் பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்கிரமிப்பை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டு முகவர்களின் நிகழ்ச்சிநிரலே உள்ளது என்பதைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. 


தற்போது முஸ்லிம்களின் உள்ளங்களை மாசுபடுத்தும் நச்சுக்கிருமிகள் உட்புகுத்தப்பட்டுள்ளன. என்றாலும் ஒருபோதும் முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிராகச் செயற்படுவதில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். 


புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரிடமிருந்தும், ரோ அமைப்பிடமிருந்தும் இலஞ்சம் வாங்கிய சந்தர்ப்பவாத முஸ்லிம்கள் அரசியல்வாதிகளில் சிலர், இந்த இனவாதத் தீப்பிழம்பை ஏற்றுவதன் மிகமுக்கிய நோக்கம் என்னவென்றால், இந்நாட்டைப் பிளவுபடுத்துவதற்கே என்பதைச் சொல்லியாக வேண்டும். 


சிங்களவர்களையும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் சமமாகப் பார்க்கின்ற அரசியல் தலைமையே, இந்த நாட்டுக்குத் தேவை. அவ்வாறான ஒருமைப்பாட்டிலேயே முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். தொடர்ந்து அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவாகவே இருந்தால் 2020 களில் நாங்கள் எத்தனைபேர் உயிருடன் இருப்போம் என்பது சந்தேகத்திற்கிடமானதே.


கடைசியாக என்னால் சுட்டிக்காட்ட முடியுமான விடயம் என்னவென்றால், 1983 இல் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட விதியே இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதே. பதவிமோகம் கொண்ட சந்தர்ப்பவாத முஸ்லிம் அரசியல்வாதிகளே இந்நிலைமைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள்.


-தொகுப்பு - வஜிர லியனகே.

தமிழில் - கலைமகன் பைரூஸ்

0 comments:

Post a Comment