It

Saturday, January 24, 2015

மகிந்தவின் இராணுவச் சூழ்ச்சி உண்மையே! -ராவய

னவாரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறு வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும்போது மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு குறைந்து வருவது தெளிவானால், உடனடியாக நாட்டில் அவசர சட்டத்தை அறிவித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் வாக்குப் பெறுபேறுகள் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு அச்சுறுத்தி, இராணுவத்தினர் நாட்டின் முக்கிய இடங்களை நிருவாகித்து மகிந்த ராஜபக்ஷ இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியாக தொடர்ந்து இருப்பதற்கு சூழ்ச்சிசெய்ப்பட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.

ராவயவிற்குத் தெரியவந்துள்ளதற்கு ஏற்ப, இந்த இராணுவ சூழ்ச்சியை கோத்தபாய ராஜபக்ஷவே முன்னெடுத்துள்ளார். அவருடைய தயாரிப்பிற்கேற்ப தேவையான போது, நாட்டின் நிருவாகத்தைக் காவுகொள்வதற்கு ஜனவாரி 8 ஆம் திகதி இரவு நேரம் ஆகும்போது கோத்தபாய ராஜபக்ஷ முன்னர் பணிபுரிந்த கஜபா ரெஜிமேன்துவுக்குச் சொந்தமான இராணுவப் படையில் பத்துப் பிரிவினரை கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் தயார் நிலையில் வைத்திருந்த்துடன், மோதர ரோக்ஹவுஸ் பாசறையில் இருந்த இராணுவனத்தினருக்குச் சொந்தமான இராணுவ வாகனங்களை வீதியில் ரோந்து செய்வதற்கு தயார்நிலைப் படுத்துமாறும் கட்டளையிட்டுள்ளார்.  அவ்வாறு தயார்நிலையில் வைக்கப்பட்ட இராணுவனத்தினர் மூலம் 8 ஆம் திகதி இரவு தொடக்கம் 72 மணித்தியாலங்கள் பொதுமக்கள்  வெளியே வராத வண்ணம் இராணுவத்தினரும் அதிகாரத்துடன் செயற்பட முடியுமாயின், இச்செயற்பாட்டுக்கு எதிரான மக்கள் சக்தியை இல்லாதொழிக்க முடியும் என சூழ்ச்சியாளர்களின் திட்டமாக இருந்துள்ளது. அத்துடன் பிரதம நீதியசரை அனுப்பி ஜனாதிபதிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்றவாறு நீதிமன்றத் தீர்மானத்தை எடுப்பதற்கும் ஆயத்த நிலையில் இருந்திருக்கின்றனர்.

இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள் ஜனவாரி மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதி கொழும்பு பிரபல இராணுவ அலுவலகங்களில் நடைபெற்றிருக்கின்றன. அத்துடன், இச்செயற்பாட்டுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் அக்கூட்டத்தில் பங்குகொண்டுள்ளனர்.

மேலதிக செய்திகள் உடன் பதிவேற்றப்படும்.. தொடர்பில் இருங்கள்...

(தமிழில் - கலைமகன் பைரூஸ்)

Tuesday, January 20, 2015

தேர்தலன்று? இராணுவச் சூழ்ச்சி பற்றிய கதை என்ன?

2015 ஜனவரி மாதம் 20 12:51:06 | பரிவர்த்தனம்

ஜனவரி எட்டாம் திகதி இரவு இந்நாட்டின்  பல்லாயிரக் கணக்கான மக்கள் தொலைக்காட்சியின் முன்னே நின்றுகொண்டு கண்களையும் காதுகளையும் கூராக்கிக் கொண்டு புதிதாக வரவுள்ள ஜனாதிபதி யாரோ என்பதைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தனர். சிலர் மகிந்தரைக் கேட்டனர். மற்றும் சிலர் மைத்திரியே வெல்வார் எனக் கூறினர். எட்டாந் திகதி இரவு இந்த தேர்தல் மிகவும் சூடுபிடித்திருந்தது.

17_PAGE_10_M
ஒன்பதாந் திகதிக்கான சூரியன் மெல்ல மெல்ல உலகினை நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளை, வெளியாகிக் கொண்டிருந்த முடிவுகளுக்கு ஏற்ப பலருக்கும் வெற்றி வாய்ப்பு மைத்திரிக்குத்தான் என்பது தெளிவாகியது. மைத்திரி வென்று விட்டார் என்று தெளிவாகியது. அப்போதும் அலரி மாளிகையில் மிகவும் சிறப்பானதொரு நிகழ்வு நடந்தேறிக் கொண்டிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையே அது. வெளிவந்த செய்திகளுக்கேற்ப ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது தோல்வி நிச்சயிக்கப்பட்டு விட்டது என்பதைத் தெரிந்து கொண்ட அக்கணமே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பினை ஏற்படுத்தினார். தான் ரணிலைச் சந்திக்க வேண்டும் என்று கூறும் போது அதிகலை மணி நான்கு இருக்கும்.

ஒரு மணித்தியாலம் செல்வதற்கு முன்னரே ரணிலுக்கும் மகிந்தவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தேறியது மகிந்தவின் அழைப்பின் பேரில் ரணில் அலரி மாளிகைக்கு சென்றதனாலேயே. தான் பொதுமக்களின் விருப்பிற்குத் தலை சாய்த்து அலரி மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு தயாராக இருப்பதாகவும், புதிய ஜனாதிபதி மைத்திரிபால அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் மகிந்த சொன்னார். அத்துடன் தான் மைத்திரியுடன் உரையாடத் தேவையாக இருப்பதாகவும் சொன்னார். அக்கணமே ரணிலின் கைத்தொலைபேசி மகிந்தவின் கைக்கு மாறியவுடனேயே மைத்திரிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். மைத்திரி தனது பழைய தலைவருக்கு“சார்” என்று விளித்தே கதைத்தார்.

அந்த வரலாற்றில் அழியாத சில மணித்தியாலங்களின் பின்னர் வெளியே வந்தவை பற்றி நாம் அப்படியான கதையொன்றைத்தான் சொன்னோம்.

ஆயினும் தற்போது கேட்கக் கிடைப்பது அதற்கு மாற்றமானதொரு செய்தியே.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்து மூன்று நாட்களின் பின்னர் அதாவது 11 ஆம் திகதி மார்கஸ் மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று தயாராக இருந்தது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர் மங்கள சமரவீர. மங்கள நேரகாலத்துடனேயே முக்கிய விடயமொன்றை வெளிக்கொணர்வதற்காக காத்திருந்தார். மங்கள உரையாற்ற ஆரம்பித்தார்.

“பொதுமக்களின் விருப்பினை ஏற்று ஜனநாயக முறையில் தனது வீட்டை நோக்கிச் செல்வதற்காக அல்ல முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் தீர்மானித்திருந்தார். எட்டாம் திகதி இரவு தனக்கு தோல்வி நிச்சயமே என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் அவர் அதிகாலை ஒரு மணிக்கெல்லாம் இராணுவச் சூழ்ச்சி மூலம் அதனை மாற்றியமைக்கமே முயன்றார். தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதற்காக அவர் முயற்சி செய்தார் என்பதை நான் பொறுப்புணர்வுடன் சொல்கிறேன். இராணுவத்தினரை அழைத்து வாக்குகள் எண்ணுவதை நிறுத்தவும் முயன்றார். இராணுவத் தளபதி, சட்டமா அதிபர், பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை அழைத்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துவது எங்ஙனம் என ஆலோசித்தார்.” இதுபற்றி சொல்லிய வாயுடனேயே மங்கள இது தொடர்பில் மைத்திரி அரசாங்கத்தின் கீழ் விசாரணை நடாத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நள்ளிரவு ? நடைபெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சி பற்றி மங்கள அவ்வாறுதான் சொன்னார்.

ஒன்பதாம் திகதி அதிகாலை அலரி மாளிகையில் படுபயங்கரமான சூழ்ச்சியொன்று நடந்தேறப் போனதாகக் கூறி கதையொன்று காட்டுத்தீ போல நாடெங்கிலும் பரவியது. ஜனாதிபதி மைத்திரி தரப்பிலிருந்து மங்கள, ராஜித்த தொடர்ந்து இதுபற்றியே பேசிக் கொண்டிருக்கும்போது, மகிந்த தரப்பிலிருந்து ஜீ.எல், கம்மன்பில போன்றோர் மிகவும் சாந்தமான முறையில் எவ்வித குழப்ப நிலைகளுமின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அதிகாரங்களை மைத்திரிபாலவிடம் கையளித்தாரே தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை எனக் கூறினர்.

மகிந்தவின் சூழ்ச்சி மேசையைச் சுற்றிலும் இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதிச் செயலாளர், பிரதம நீதியரசர் அமர்ந்திருந்ததாகவும், மகிந்தவின் சூழ்ச்சிமிகு கதைக்கு சட்ட மா அதிபரிடமிருந்தோ, பொலிஸ் மா அதிபரிடமிருந்தோ, இராணுவத் தளபதியிடமிருந்தோ ஒரு சிறு வசனம் கூட வெளிவரவில்லை ஆதலால்,
5
விடயம் “அபேஸ்” ஆகியதாக மங்கள கூறும்போது ஜீ.எல், கம்மன் பில போன்றோர்  மக்களின் விருப்பிற்குத் தலைசாய்த்து  அடுத்த கட்ட நடவடிக்கைகள் நடந்தேறவுள்ள முறைகள் பற்றியே கலந்தாலோசித்தாகக் குறிப்பிட்டனர்.


இதே சந்தர்ப்பத்தில் சென்ற பன்னிரண்டாம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இது பற்றிக் கருத்துரைத்தார்.

“தேர்தலின் பின்னர் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ சூழ்ச்சி செய்ததாக குறிப்பிட்டு எதிர்க்கட்சியின் கட்டவிழ்த்து விட்டுள்ள கதையை அறுவறுப்புடன் நிராகரிக்கின்றேன். உலகத் தலைவர்கள் பலரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் “மகிந்த ராஜபக்ஷ தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரேயே தனது பதவியிலிருந்து விலகியது முன்மாதிரியான நிகழ்வாகும்” எனக் குறிப்பிட்டனர். தேர்தலுக்கு முன்னரேயே தேர்தலில் தோல்வியுற்றால் ஐந்து நிமிடம் கூட தனது பதவியில் இருக்க மாட்டேன்  எனக் குறிப்பிட்டார். அவர் அதனை தனது செய்கை மூலமும் வெளிக்காட்டினார் .”

அவரது உரை அத்துடன் முடிவுக்கு வரவில்லை.

மங்கள வெளிவந்தார். அது சென்ற 14 ஆம் திகதி. மங்கள குற்றவியல் விசாரணைத் திணைக்கள முன்றலில் இருந்து கதைத்தார்.

  “தேர்தல் முடிவுகளை நிறுத்துவதற்கு, இடைஞ்சல் விளைவிப்பதற்கு சூழ்ச்சி செய்வது எங்ஙனம் என கலந்தாலோசித்தனர். அன்றிரவே அவசர காலச்சட்டத்தை ஏற்படுத்தி கணக்கிடும் மத்திய நிலையங்களை இராணுவத்தினரை அனுப்பி முற்றுகையிடக் கதைத்தனர். தேர்தல்கள் ஆணையாளரின் அலுவலகத்திற்கு பனாகொட இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை அனுப்பி பயங்கர நிலவரமொன்றை ஏற்படுத்த கலந்துரையாடியதாக எங்களுக்கு நம்பகத்தன்மை மிகுந்த செய்திகள் கிடைத்தன.”

இந்த சூழ்ச்சி பற்றி மங்கள சமரவீர குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்த சூழ்ச்சி தொடர்பில் நாங்கள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது,  கருத்துரைப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டு,  இவை அரசியல் செயற்பாடுகள் எனவும், அதற்கு இராணுவத்தை இழுத்துக் கொள்ளக் கூடாது எனவும் இலங்கையின் முப்படைகளும் எப்போதும் இவ்வரசாங்கத்தின் கௌரவத்தைக் காப்பதற்காகவே செயற்பட்டு வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றபோதும் அவை விழலுக்கிரைத்த நீராகின.

சூழ்ச்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது


இலங்கையின் இராணுவத்தையும், இராணுவ புலனாய்வுப் பிரிவினரையும் நாட்டுக்குள் அச்சமுற்றதோர் சமுதாயத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தினர். எங்கள் நாட்டு வரலாற்றில் நாட்டு மக்களை அச்சமுறச் செய்வதற்காக இராணுவத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.  இராணுவப் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.  வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இவ்வாறான நிகழ்வு நடைபெறவில்லை. அந்நேரம் ஒருபுறம் பயந்த மனோபாவம் கொண்டவர்களை உருவாக்க முயன்றார்கள். மறுபுறம் புலிகள் அமைப்பின் சஷீதரன், சிவபாலன், குமரன் பத்மநாதன் போன்றவர்களைப்  பயன்படுத்திக் கொண்டார்கள். வடக்கு - கிழக்கு இரு மாகாணங்களினதும் பொதுமக்களை பீதிகொள்ளச் செய்து தேர்தலில் வாக்களிக்காதிருக்கச் செய்ய முயன்றனர்.

SLD_20150118_A0102அதேபேலா தேர்தல் தினத்தன்று பகல் வேளை, தேவையற்ற இடங்களுக்கும் இராணுவத்தினரை நிறுத்தும் உள்நோக்குடன் இராணுவத்தினரை தேர்தல் முகாமைத்துவத்திற்காக பயன்படுத்தும் முயற்சியும் இருந்தது. சூழ்ச்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது ஞாபகத்திற்கேற்ப தேர்தல்கள் ஆணையாளருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் நன்றி கூற வேண்டும். இராணுவத்தினரின் தலையீட்டுக்கு இடம் கொடுக்காமை தொடர்பில். மகிந்த ராஜபக்ஷவுடன் அதிகாரத்திலிருந்து வெளியேற விரும்பாத பிரிவினர் ஏதேனும் ஒருவகையில் அச்ச மனோபாவம் அற்றவர்களாக இருந்திருப்பின் அவர் 20 இலட்சம் வாக்குகளால் தோற்றிருப்பார். எது எவ்வாறாயினும் இது தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டும். புலிகள் அமைப்பு இங்கிருக்கும் தொடர்புதான் என்ன? அதேபோன்று, ஏன் இராணுவத்தினரை பயன்படுத்த முனைந்தனர்? அது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். அதேபோன்று, அது தொடர்பில் சம்பந்தப்பட்வர்களுக்கு   சட்டத்தை வலுவாக பயன்படுத்த வேண்டும். மேலெழுந்தவாரியாக நாங்கள் பதவியிலிருந்து விலகினோ எனக் கூறினாலும் அதன் உள்ளகத் தன்மை முற்றிலும் மாறுபட்ட தன்மைகொண்டது. பாதுகாப்புப் பிரிவை வியாபார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதும், அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதும் மிகவும் ஆபத்தான காரியமாகும்.

தமிழில் - கலைமகன் பைரூஸ்

Saturday, January 17, 2015

கவிஞன்!

அவன் யார்?
நான் கேட்கிறேன்.
அவன் ஒரு பைத்தியம்.
அவர்கள் சொன்னார்கள்.
அவன் ஒரு பைத்தியம்?
நான் கேட்கிறேன்.
ஆம், அவன் பாதிப்பில்லாத
ஓர் ஏழைப் பைத்தியம்.
அவர்கள் சொன்னார்கள்.
அவன் ஒரு விநோதமானவன்,
உங்களுக்குத் தெரியுமா?
அவன் சதாவும்
தன்னுடன் தானே
பிதற்றிக் கொள்வான்.
அவர்கள் சொன்னார்கள்.
அவன் காற்றையும்
மேகங்களையும் பற்றிப்
பேசுவான்.
அவன் மலைகளையும்
பூக்களையும் பேசுவான்.
அவன் மிகவும்
விநோதமானவன்.
அவனைச் சுற்றி
என்னதான் நடக்கின்றது
என்று அவன் அறியான்!
ஆனால் அவன்
நட்சத்திரங்களையும்
சந்திரனை சூரியனைப்
பேசுவான்.
அவன் உன்னைப் பற்றி
பேசினானா என
நான் கேட்டேன்.
ஆம்...
அவன் எங்களைப் பற்றி
பேசவில்லை.
உன்னைப் பற்றியும்
ஏனையவர்கள் பற்றியும்
ஒருபோதும்...
அவன் பேசாத
ஏதும் உள்ளதா?
நான் கடைசியாகக் கேட்டேன்.
அவர்கள் சொன்னார்கள்.
ஆம்,
சில விடயங்களை
பற்றிப் பேசுவான்.
அந்த ஏழைப் பையன்.
மீண்டும் அவன்
அவனைப் பற்றியே
ஏதோ பிதற்றுகிறான்.

-பிரகாஷ் சுபேதி (நேபாளக் கவிஞர், எழுத்தாளர்)
ஆங்கில வழி தமிழில் - கலைமகன் பைரூஸ்
16.01.2015
<<<<Prakash Subedi’s first collection of poems, Stars and Fireflies, was published recently. Subedi, who is affiliated with the Aarohan Gurukul Theatre and the Society of Nepali Writers in English (NWEN), currently teaches at the Dillibazaar Kanya Campus. V.E.N.T! Magazine met up with this budding poet to hear his perspective on literature, life and poetry.>>>>

Tuesday, January 6, 2015

தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் சூழ்ச்சி நடக்கிறது..!


தமிழ் முஸ்லிம்களைப் போட்டுக் கொடுக்கும் பௌஸி


அடிப்படைவாத தமிழ் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளதால், சிங்களவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பாதுகாக்க வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் நவுஸர் பௌஸி குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாத இனவாத தமிழ் குழுக்களும் கிழக்கின் அடிப்படைவாத இனவாத முஸ்லிம் குழுக்களும் ஜனாதிபதியைத் தோற்கடிப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளார்கள். அதனால் நான் இந்நேரம் நாட்டிலுள்ள சிங்கள மக்களிடம் விசேட வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன். நாட்டைப் பாதுகாக்க, ஜனாதிபதியைப் பாதுகாக் நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து முன்னே வாருங்கள். சிங்களவர்களே உங்கள் ஜனாதிபதியைப் பாதுகாக்க வாருங்கள்...” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - லங்கா சீ நிவ்ஸ்

(கேஎப்)


Monday, January 5, 2015

மகிந்த இந்நாட்டுக்குச் செய்த பிழைதான் என்ன? - ஞானசார

சிங்களத்தில்  -  அநுராதா ஹேரத்
தமிழில் - கலைமகன் பைரூஸ்

ந்த தேர்தல் யுத்தம் இருப்பது மகிந்த - மைத்திரியிடையே அல்ல. நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கின்ற, பிறநாடுகளுடன் கைகுலுக்குகின்ற ஈனியா திருட்டுக் கும்பலுடன்தான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகின்றார்.

மேற்கத்தேய சக்திகளுக்குத் தேவையாக இருப்பது இலங்கையை வலுவிழக்கச் செய்து, முதுகெலும்பு இல்லாத தலையாட்டு பொம்மையான தலைவர் ஒருவரை நாட்டில் தோன்றச் செய்து, இருக்கின்ற கொஞ்சத்தையும் முழுமையாக சுருட்டிக் கொள்வதற்கேயாகும். அந்த மேற்கத்தேயத்தின் விருப்பு வெறுப்புகளைத்தான் இன்று இந்த அசுத்தமான கூட்டத்தினர் செய்துகொண்டிருப்பதாக நேற்று முன்தினம் பொராலையில் இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

ஞானசார மேலும் குறிப்பிடுகையில் -

'இந்த ஜனாதிபதித் தேர்தலானது மிக முக்கியமானதொரு தேர்தலாகும். சுதந்திரத்தின் பின்னர் சென்ற 30 வருட இருண்ட யுத்தத்தில் நாங்கள் எல்லோரும் சந்தித்த துன்பங்கள் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆயினும், கொழும்பிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்த ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தை பயங்கரவாதம் என்றுகூட சரியாகச் சொல்லத் தெரியாத கையாலாகாதவர்களாகவே இருந்தனர். யுத்த வெற்றியின் பின்னர் அன்று யுத்தத்தில் தலைமை வகித்த சேனாதிபதிக்கு எதிராக 2010 ஆம் ஆண்டின் பின்னர் பல்வேறு சூழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. தற்போது அதன் எண்ணிக்கை பன்மடங்காகியுள்ளது.

நாங்கள் மரியாதை செலுத்திய சிரிசேன இவ்வாறான அசுத்தமான கூட்டத்தாருடன் இணைந்து கொள்வார் என்று நாங்கள் நினைக்கவில்லை. தற்போது சிறிசேன நான் வெளியிலிருந்து கொண்டு சூழ்ச்சி செய்வதாகவும் உள்ளே இருந்து கொண்டு சூழ்ச்சி செய்வதாகவும் சொல்கிறார். சரியாயின் அவரைக் கைது செய்ய வேண்டும். ஏன் தெரியுமா? தற்போது நாடு அபாயத்தில் இருந்துகொண்டிருக்கின்றது.

பிரபாகரனை நந்திக் கடலில் உள்ள களப்பில் கொன்றொழித்தது போன்று, சந்திரிக்கா - ரணில் போன்ற இந்தக் கொள்கையுடைய அரசியல்வாதிகளையும் நீக்க வேண்டும். இன்று உயிர்நீத்த 27,000 படையினரையும் அவமானப்படுத்துகின்றார்.

நாட்டுக்கு கொடுவினை செய்கின்ற இறைச்சி ராத்தலே கேட்கின்ற இனவாத முன்னணியை இல்லாதொழிக்க வேண்டும். இது மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையிலான யுத்தம் அல்ல. இது பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய காலகட்டமாகும்.  ஏனென்றால் இந்த பெடரல் நடைக்குழுவினர் நாட்டுக்குள் சக்தி பெற்றால் அதனைத் தோற்கடிப்பது இலகுவான காரியம் அல்ல. இந்நாட்டுக்கு கொடுவினை செய்கின்றவர்கள் நாட்டினுள்ளே சக்தி பெற்றுவிட்டால் தலைவர் இல்லாத ஆட்சி மட்டுமே மீதமாகும்.

மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சொல்லும் அளவுக்கு என்னதான் பிழை  - குற்றம் செய்திருக்கின்றார் என நாங்கள் கேட்கின்றோம். இது சிங்களவர்கள் பிரிந்துவிடும் நேரமல்ல. இந்நேரம் மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்த நடைக் குழுவினர் நாட்டுக்கு என்னதான் பெரிதாக செய்துவிடப் போகிறார்கள்? என்பதை புத்துசாதுரியத்துடன் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருபுறம் நடப்பது என்னவென்றால் இந்த சூழ்ச்சிகள் காரணமாக சிங்கள மக்களின் கருத்துக்களை இரண்டாகப் பிரிப்பது. சம்பிக்க 10 வருடங்கள் மகிந்த அரசாங்கத்தில் இருந்து எத்தனையோ விடயங்களை சாதிக்க முடியாது போனதாகக் கூறுகின்றார். ஒருவரால் செய்ய முடியாததை பலர் ஒன்றிணைந்துள்ள விஷக் குழுவினரால் எவ்வாறு சாதித்துவிடுவார்?

கள்ளங்கபடமற்ற நாடு, பயம் சந்தேகமின்றிய நாளை எனக் குறிப்பிடும் சிரிசேனவின் குண்டர்கள் கதுறுவலையில் துண்டுப் பிரசுரங்களைப் பகிர்ந்தளித்த பௌத்த மதகுருமார்களிடம் நடந்து கொண்ட முறை பற்றி நாங்கள் கண்டோம். அந்த “சூகலா” கடவுளின் மமிக்கு என்ன நடந்தது என்று பதில் கூறுமாறு நான் சவால் விடுகின்றேன். இந்தக் கள்வர் கும்பலை ஒன்றிணைந்து நாங்கள் தோற்கடிக்க வேண்டும்." என்றார்.

ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிடும் போது,

“2005 இல் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக முயற்சி செய்த சந்திரிக்காதான் இன்று “மிஸ்டர் பிரபாகரன்“ எனச் சொல்லிச் சொல்லி மோகினி போல வெளியே வந்துள்ளார். ரணிலோ பிரதமராவதற்கு எவ்வளவோ கனவு காண்கிறார். சிரிசேன ஒரு தலையாட் டு பொம்மை. எந்தவொரு சக்தியும் அவரிடம் இல்லை. சந்திரிக்காவுக்குத் தேவையானது என்னவென்றால், அடுத்தவர்களுடன் ஒன்றிணைந்து கொண்டு நாட்டை காட்டிக் கொடுப்பற்கு. 11 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தார். நாட்டுக்காகச் செய்தது ஏதுமில்லை. புலிகளுடன் காதல் நாடகம் மாத்திரம்தான் ஆடினார்.

நாங்கள் மிகவும் உத்தமமாக வந்தனை செய்துவந்த சோபித்த தேரரும் இந்தக் கும்பலுக்குள் சிக்கிக் கொண்டார். என்றாலும், அவர் இப்போது கூடுதலாக வைத்தியசாலையிலேயே இருக்கின்றார். ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று நினைக்கிறார் போலும். ர(த்)தன ஹாமுதுறு பற்றிப் பேசிப் புண்ணியமில்லை. இன்று ஹெல உறுமய மிகவும் சுயநலவாத தன்மையுடனேயே செயற்படுகின்றது. எந்தவொரு சூழ்சியிலும் அவரும் பங்கு கொள்கிறார். நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்கள் நிச்சயம் இவர்களுக்கு எதிராகச் செயற்படுவார்கள்.

சந்திரிக்கா அம்மையார் மீண்டும் 09 ஆம் திகதி மீண்டுமு் போக வேண்டிவரும். இன்று தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு ஊட்ட எவ்வளவு சிரமப்படுகிறார்கள் தெரியுமா?  பல்லிகளைக் காட்டுகிறார்கள், வண்ணாத்திகளைக் காட்டுகிறார்கள். எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் படத்தை கண்ணாடி உறையிட்டு சுவரில் தொங்கவிட்டால் பிள்ளைகளுக்கு உணவூட்டத் தேவையில்லை. அதைப் பார்த்துக் கொண்டு கடும் கோபத்தினால் சாப்பிட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே போகும்.” எனக் குறிப்பிட்டார்.

Thursday, January 1, 2015

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைக் கொன்றது யார்? – தெளிவுறுத்துகிறார் முஸம்மில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் முஸ்லிம்களிடையே சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு நகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகவியாலாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப், அன்று எந்த வகையிலும் வடக்கு – கிழக்கை ஒன்றிணைக்க இணக்கம் தெரிவிக்கவில்லை. அவர் புலிப் பயங்கரவாதிகளுடனோ, அவர்களின் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ ஒன்றிணைவதற்கு ஒருபோதும் இணங்கவில்லை. அவ்வாறு புலிகளுக்கு முழுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலேயே அஷ்ரபின் மரணம் நிகழ்ந்தது. கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் அஷ்ரப் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகமே பெரும்பாலும் உள்ளது. 


அதன்பின்னர்தான், மேற்கத்தேய தலையாட்டு பொம்மையாக ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரானார். வரலாற்றில் அவரது நிலைதான் என்ன? 2001 இல் யானை – புலி முன்னணி அரசாங்கத்தை உருவாக்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்கினார். ரணில் – பிரபாரகன் ஒப்பந்தத்திற்கு ஆதரவு நல்கினார். அதன் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் முனைந்தார். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினார். பின்னர் அமைச்சர் பதவி மற்றும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்டார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வம் கொலை செய்யப்பட்டதன் பின்னர் தனது உள்ளார்ந்த கவலையை பாராளுமன்றில் தெரிவித்தவரும் ரவூப் ஹக்கீமே. ஆயினும் புலிப் பயங்கரவாதிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடித்த வேளை, அதேபோன்று காத்தான்குடி உள்ளிட்ட வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் கூட்டாகக் கொலை செய்யப்பட்டபோது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைச்சர் பதவியைப் பெற்று வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வந்த அவர், 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேக்காவின் வெற்றிக்காக எதிர்க்கட்சி மேடைகளில் ஏறினார். வட மாகாண சபைத் தேர்தலின் போதும் அவரது ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இருந்தது. வட மாகாணத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மிகவும் நெருக்கமாகச் செயல்படுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறிப்பிடும்போது, “கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து வடக்கு – கிழக்கை ஒன்றிணைப்பதற்காக செயற்படுவது புரிவதில்லையா? பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தங்களது கொள்கைகளை மூடி மறைத்துக் கொள்வதற்கு இந்த அசுத்தமான கூட்டத்தினர் முயற்சி செய்தாலும் இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பது பற்றி மக்களுக்குத் தெளிவேற்பட்டுள்ளமையும் தெரிந்ததே.


(கேஎப்)