It

Tuesday, December 19, 2017

வைபர் தொழிநுட்பத்தின் மூலம் கணிதப் பாடப் பரீட்சை எழுதிய மாணவனுக்கு விசாரணை!

அநுராதபுர பாடசாலையொன்றில் க.பொ.த (சா.த) மாணவர் ஒருவர் இன்று (18) நடைபெற்ற கணித பாடப் பரீட்சையில், கையடக்கத் தொலைபேசியின் வைபர் மற்றும் இமோ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விடை எழுதியதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை நடாத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.


அதன்படி, குறித்த மாணவன் மற்றும் அப்பரீட்சை நிலைய மேலதிகாரி மற்றும் பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர், அநுராதபுரத்திலுள்ள வேறொரு பாடசாலைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாணவன் கையடக்கத் தொலைபேசி மூலம் கணித பாட வினாப்பத்திரத்தைப் படம் பிடித்து, தனது நண்பனுக்கு அனுப்பி விடைகளைப் பெற்று விடை எழுதியதாகவே பரீட்சை நிலைய மேலதிகாரி குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.



0 comments:

Post a Comment