It

Tuesday, September 13, 2016

“விசா” பட்டியலில் தமிழ் ஈழமும் உள்ளடங்கியுள்ளது...! --உதய கம்மன்பில

சிங்களத்தில் - திலிணி கௌஷல்யா விஜேசிங்க
தமிழில் - கலைமகன் பைரூஸ்

தமிழ் ஈழத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இன்று உலகெங்கிலும் ஓலமிடப்படுகின்றது எனவும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் பேசா மடந்தையாக, மௌனம் காத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தால், பிரபாகரன், பாலசிங்கம் இருவருக்கும் முடியாமற் போனவற்றை சம்பந்தன், விக்னேஷ்வரம் இருவரும் சாதித்துவிடுவதற்கான அறிகுறிகள் காணக்கிடைக்கின்றது என ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நேற்று (12) ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

கம்மன்பில தொடர்ந்து உரையாற்றுகையில்,

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஐ.தே.க. 60 மாதங்களில் புதியதொரு நாடு உருவாகும் என்று குறிப்பிட்டது. பொதுமக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து யானைக்குப் புள்ளடியிட்டார்கள். ஆறு மாதங்கள் எப்படிச் சென்றாலும், பதின்மூன்று மாதங்கள் செல்லும்போது தமிழ் ஈழம் தனி நாடாக டென்மார்க்கில் தலை தூக்கியுள்ளது. டென்மார்க்கின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் “விசா” வழங்கும்

வழங்கும்போது தன்னுடைய பிறந்த நாட்டைத் தெரிவு செய்வதற்கான பட்டியலொன்றை வழங்குகின்றது. அந்தப் பட்டியலில் தமிழ் ஈழமும் இடம்பெற்றுள்ளது.
“இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய புள்ளி விபரவியல் திணைக்களம் நடாத்திய இலத்திரனியல் கணக்கெடுப்பின் போது, தான் பிறந்த நாட்டைத் தெரிவு செய்வதற்கான பட்டியலில் தமிழ் ஈழத்தையும் உள்ளடக்கியிருந்தது. தூதுவராலயம் எதுவும் செய்யவில்லை. அங்கு வாழ்கின்ற இலங்கையரின் பலத்த எதிர்ப்புக் காரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அதனை மாற்றுவதற்கு உடன்பட்டது. ” சுயதீனமான நாடொன்று உருவாகும்போது அதற்கு நிலப்பகுதி இருப்பதை விடவும் மிக முக்கியமானது எதுவென்றால் பிற நாடுகள் அந்நாட்டை ஏற்றுக் கொள்கின்ற தன்மையே. பலஸ்தீனத்திற்கு அண்மைக் காலம் வரை அதற்கான பூமி இருக்கவே இல்லை. ஆயினும் உலகின் பல்வேறு நாடுகளும் பலஸ்தீனத்தை ஏற்றுக் கொண்டதனாலேயே ஐக்கிய நாடுகள் அமையத்தில் கூட அங்கத்துவம் கிடைத்திருக்கின்றது. தாய்லாந்திற்கான பூமி - நிலப்பகுதி இருந்த போதிலும் இன்றுவரை உலகம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் பின்னணியில் 2010 இல் தமிழ்ப் பிரிவினைவாதிகள், வீ. ருத்ரகுமாரனை பிரதமராக்கி நிலமற்ற அரசாங்கத்தை உருவாக்கினார்கள். அதனை அவர்கள் சர்வதேச ரீதியில் வியாபித்திருக்கின்ற தமிழ் ஈழ நாடாகவே குறிப்பிடுகின்றனர். அவர்கள் தங்களை ஏற்றுக் கொள்ளுமாறு உலகளாவிய ரீதியில் இராசதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேபோன்று, ஆகஸ்ற் 12 ஆந் திகதி மாத்தறையில் இடம்பெற்ற கூட்டணி அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவுக் கூட்டத்தின் போது, யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, - ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்யும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். பாராளுமன்றத்தின் காலக்கெடு ஐந்து ஆண்டுகள்தானே. தற்போதைக்கு ஒன்று முடிவடைந்துள்ளது. எவ்வாறு அவர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள்...?

நான் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் வினா தொடுத்தேன். அதற்கு அவர், ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டது என்னவென்றால், 2020 ஆம் ஆண்டும் கூட்டணி அரசாங்கம் அமைத்து இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வதையே என்றார். அந்த விடயத்தைக் கேட்டதும் எனக்குத் துக்கத்தைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. காரணம், எனது நண்பர்கள் டிலான் பெரேரா, மகிந்த அமரவீர இருவரையும் நினைத்தமையே. கூட்டணி அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்கு கைச்சாத்திட்டதன் பின்னர், இவ்விருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் இரண்டு வருடங்களில் நாங்கள் கட்டியெழுப்புவோம் என்று சொன்னார்கள். இவர்கள் இது தொடர்பில் மந்திரங்களை ஜபித்துக் கொண்டிருக்கையில், இவர்களுக்குத் தெரியாமல் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தை ஐந்தாக மாற்றிவிட்டார். இவர்கள் பத்திரிகை வாயிலாகவே இதுபற்றித் தெரிந்து கொண்டனர். அதன் பின்னர் இந்த வெட்கத்தை மறைத்துக் கொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவோம் என்று கூக்குரலிடுகின்றனர்.

மீண்டும் இவர்களுக்குத் தெரியாமல் ஜனாதிபதி, பிரதமர் இருவரும் சேர்ந்து 2020 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துள்ளனர். டிலான் பெரேரா, மகிந்த அமரசிங்க இருவரும் தங்கள் கனவை மெய்ப்பட வைக்க 2025 வரை காத்திருக்க வேண்டிவரும். அவர்கள் கனவு மெய்ப்படும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியினை ஏற்படுத்த நாடொன்று மீதமிருக்குமா என்பது எங்களுக்குள்ள கேள்வியாக உள்ளது. அரசாங்கம் தெளிவாகவே ஊடகத்துறையை இல்லாதொழித்து வருகின்றது. அதனை மிகவும் சூட்சுமாகச் செய்கிறது. ஆட்கடத்தல் இல்லை. “சீல்” வைத்து இழுத்து மூடுவதில்லை.

 அதற்குப் பதிலாக பொலிஸ், சட்டமா அதிபர், சுங்கம் முதலியவற்றைப் பயன்படுத்தியே எதிர்ப்பாளர்களை அடக்கியொடுக்குகின்றது.


......

Tuesday, July 12, 2016

இலங்கையின் உத்தியோகபூர்வமொழி சிங்களம் மட்டுந்தானா?

சர்வதேச சுற்றுலா அமைப்பினால் (UNWTO) இம்முறை பாசிக்குடாவில் கருத்தரங்கொன்று நடாத்தப்படுகின்றது. இம்முறை நடாத்தப்படுகின்ற கருத்தரங்கில் வெளிநாட்டைச் சேர்ந்த பெரும்பான்மையினர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று (12) மற்றும் நாளை (13) இருநாட்களும் இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. ஆயினும், கருத்தரங்கம் நடைபெறும் நடைபெறும் நாடாகிய இலங்கைக்கான அழைப்பினைப் பார்க்கும்போது, “சிங்களவர்களுக்கு மட்டும்” எனும் மனோநிலை மீண்டும் எழுந்துள்ளதைக் காணக்கூடியதாய் உள்ளது, அதாவது, இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி சிங்களம் எனவும், ஆங்கிலமும் பயன்பாட்டில் உள்ளது எனவும் குறிப்பிட்ட அதிகாரிகளினால் குறிப்பிடப்பட்டுள்ளது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய ருக்கி பெர்னாண்டோ தெளிவுறுத்துகிறார்.

ஒருமைப்பாட்டை அடிப்படையாக வைத்து நடாத்தப்படுகின்ற கருத்தரங்கம் என்ற தோரணையில் நடாத்தப்படுகின்ற இந்நிகழ்வு  சிந்திக்க வேண்டிய விசயமே.
 மேலும், சர்வதேச ரீதியாக நடைபெறும் சுற்றுலாக் கருத்தரங்கம் இலங்கையில் நடைபெறும்போது, கற்பிட்டி, குச்சவெலி, பானம், பாசிக்குடா, இருதெனியாய, காங்கேசந்துறை போன்ற பகுதிகளில் காணிகள் இல்லாமல் போன மக்கள் நேற்று (11) கொழும்பில் ஒன்றுகூடி, முதலில் எங்கள் இடங்களை எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள். 'எங்கள் உரிமைகளை எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள், பிறகு சுற்றுலாத்துறையைப் பாருங்கள்” எனக் குறிப்பிட்டனர். அங்கு பானமப் பகுதிகளில் காணிகள் அற்றுப் போனோருக்காக கருத்துத் தெரிவித்த சோமசிரி புஞ்சிரால என்பவர், “குறைந்தளவு எங்கள் காணிகள் (இடங்கள்) தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானித்திற்கு ஒப்ப செயற்படாமல், இவ்வாறான சுற்றுலாத்துறைக் கருத்தரங்கு நடாத்துவது தொடர்பில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். மேலும், எங்கள் காணிகளை எங்களுக்குப் பெற்றுத் தந்துவிட்டு சுற்றுலாத்துறையைக் கவனிக்க வேண்டும்” எனவும் கருத்துரைத்தார்.
“தற்போது நடைபெறுகின்ற பாசிக்குடாவிற்கோ அன்றி, ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கோ சரியான பிரதிநிதித்துவம் அங்கு இல்லை” எனவும் ருக்கி பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கிறார்.

நன்றி - விகல்ப இணையத்தளம் on July 11, 2016
ලංකාවේ නිළ භාෂාව සිංහල පමණයිද? 
தமிழில் - கலைமகன் பைரூஸ்

Friday, March 4, 2016

Sunday, January 24, 2016

“சிங்க லே” அமைப்பு நாம் பேசக்கூடிய அளவு முக்கியம் வாய்ந்தல்ல! - ஜனாதிபதி

சிங்க லே அமைப்பு, நாம் பேசக்கூடிய அளவுக்கு பெறுமதிமிக்க அமைப்பொன்றல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

பீபீஸி - அஸாம் அமீனுடனான விசேட
நேர்காணல் ஒன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது பேசப்படுகின்ற “சிங்க லே” அமைப்பு பற்றிக் கருத்துரைக்கும்போது ஜனாதிபதி, “நாங்கள் பெறுமதி வாய்ந்தவை பற்றி மட்டுமே பேச வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.