It

Friday, August 14, 2015

வஸீம் தாஜுத்தீன் மரணம்! வெளிவராத உண்மைகள்!!

“ரக்பி” விளையாட்டின் அசத்தல் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுத்தீன் மரணம் தொடர்பில் இன்று ஊடகங்கள் எங்கும் செய்திகள்... பல சிங்கள இணையத்தளங்களில் பலவாறு செய்திகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன... அவற்றில் பல அச்சூடகங்களில் வெளிவர வாய்ப்பில்லை... பதிவேற்றப்படும் செய்திகள் தமிழ் பேசும் பலரிடத்தும் போய்ச் சேர்வதுமில்லை...

மின்னியல் ஊடகங்களில் பதிவேற்றப்படும் செய்திகளுக்கு அவ்வவ் இணையத்தளங்களின் வாசகர்கள் எழுதும் பின்னூட்டங்கள் தெரியவருவதுமில்லை...

எனவே, தாஜுத்தீன் தொடர்பான சகல தகவல்களையும் “பரிவர்த்தனம்” வலைத்தளத்தில் அவ்வப்போது பதிவேற்றவிழைகின்றேன்...

“பரிவர்த்தனம்” வாசகர்களும் தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமிடலாம்....

“பரிவர்த்தனம்” வலைப்பூவுடன் இணைந்து கொள்ளுங்கள்.. அனைவருக்கும் தளம் பற்றி அறியக் கொடுங்கள்..

இனவாத - மதவாத - மிதவாத கருத்துக்களை அறிந்து புரிந்துணர்வோடு நடக்க “பரிவர்த்தனம்” பங்களிப்புச் செய்யும்.

(கலைமகன் பைரூஸ்)

-------------------------------------------------------------------------------------------------------------------------
ரகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுத்தீனின் சடலத்தை வெளியே எடுத்து, ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளது தொடர்பில் ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பில கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

எங்களுக்கு நினைவிருக்கிறது. சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்கட்சியின், அப்போதைய எதிர்க்கட்சியின் முக்கிய தலைப்பாக இருந்தது யாதென்றால், திருடன் மகிந்த காலை முதல் இரவு வரை வானொலியில், தொலைக்காட்சியில், செய்திப் பத்திரிகைகளில், குறுஞ்செய்தி. மின்னஞ்சல், முகநூல் வாயிலான மகிந்த திருடன், மகிந்த திருடன் எனும் மந்திரத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும்போது பொதுமக்களும் அவ்வாறு இருக்கலாம் என நினைத்து, திருடர்களைப் பிடிப்பதற்காக வாக்களித்தனர்.


திருடர்களைக் கைது செய்வதற்கு எங்களிடம் எட்டு மாதங்களும் நூறு நாட்களும் கேட்டனர். நூறு நாட்களுக்குப் பதிலாக எட்டு மாதங்கள் போய்விட்ட நிலையிலும் சொன்ன “மெகா டீல்” சரியாகவில்லை. எதனையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. எது எவ்வாறாயினும் திருடர்களைப் பிடிப்பதற்காகச் சென்றவர்கள் மகா திருடர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் எல்லோரும் இன்றும் திருடன் திருடன் என்கிறார்கள். ஆட்சி பீடமேறியுள்ள ஒரு சிலர் திருடன் திருடன் என்று கூறி போதும் போதும் என்ற நிலைக்குள்ளாகியுள்ளனர். 


தாஜுதீனின் மரணம்

இதோ புதியதோர் சுலேகாம் ஏந்தியிருக்கிறார்கள்… “ராஜபகஷ குடும்பத்தினர் கொலைகாரர்கள்”. எனவே, அதனை உறுதிப்படுத்துவதற்காக நேற்று (11) காலம்சென்ற வஸீம் தாஜுத்தீன் எனும் ரகர் விளையாட்டு வீரரின் பிரேதம் வெளியே எடுக்கப்பட்டது. தாஜுத்தீனின் சகோதரன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “எனது தம்பியின் கொலை தொடர்பில் குடும்பத்திலுள்ள எங்களுக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது. எனது தம்பியை அரசியலுக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். எங்களுக்கு எங்கள் பாட்டில் நிம்மதியாக இருக்கவிடுங்கள்”


இந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இல்லாத வருத்தம் வஸீம் தாஜுத்தீன் விடயத்தில் இவர்களுக்கு ஏன்? 

(Pls Wait......................)

0 comments:

Post a Comment