It

Wednesday, August 19, 2015

சிங்களவர்களுக்கிடையில் பிளவு! அந்நிய மதத்தினர் தங்களுக்கான இருப்பில் உறுதி! – ஞானசார

அபாயம் அருகாமையில் இருக்கும்வேளையில், சிங்களவர்கள் பிளவுபட்டுக் கொண்டிருக்க அந்நிய மதத்தினர் தங்களுக்கான இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதை இந்த பொதுத் தேர்தல் தெளிவுபடுத்துகின்றது என பொதுஜன பெரமுனவின் தலைவரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருமான கலகொடஅத்தே

Monday, August 17, 2015

மகிந்தர் இன்னும் இருந்திருந்தால் நாடு கிரேக்கமாயிருக்கும்! - சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க

தமிழில் - கலைமகன் பைரூஸ்

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தெளிவான சிறப்பொன்றுள்ளது. நூறு நாள் திட்டத்தை அடிப்படையாக வைத்தே அது நடைபெற்றது. அதற்கேற்ப ஜனநாயக மறுசீரமைப்பே அதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அதிலும் மேலாக நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் என்ற வார்த்தைப் பிரயோகம் முதன்மை இடத்தில் நின்றது. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதன் முறையாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்று நான்காம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் போது அவ்வாறு வாக்குறுதியளித்தார். யதார்த்தபூர்வமான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனும் நோக்கத்துடனேயே அவர் அன்று அந்த வாக்குறுதியை அளித்தார். என்றாலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி முறைமையில் பல இடர்பாடுகள் இந்நாடு சந்தித்திருந்தாலும், அதில் மிகக் கூடுதலான இடர்பாடுகள் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு அதிகரித்தது. பதவிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகார முறைமையை பயன்படுத்தாதவிடத்தும், அந்த நிறைவேற்று அதிகாரமுறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதியளித்தே அவர் பதவிக்கு வந்தார். என்றாலும், மெல்ல மெல்ல வாக்குறுதிகள் அவரால் நிராகரிக்கப்பட்டு அவரது போக்கிற்கேற்ப ஜனாதிபதி முறைமையை ஆக்கிக் கொண்டார். ஈற்றில் 18 ஆவது திருத்தச் சட்டம் எனப்படுகின்ற ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரக் கூடிய அளவுக்கு அவர் செயற்பட்டார். அதன் மூலம் கடுமையான ஏகாதிபத்திய நிழல் நாடெங்கிலும் புரையோட வழியமைத்தார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடெங்கிலும் செய்யப்பட்ட கொலைகள் பற்றி மறந்தாலும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தெற்கில் சிங்கள சமூகத்தினிடையே பிரச்சினைகள் முளை கொண்டன. மனித உரிமை மீறப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். காணாமற் போனார்கள். நாட்டை விட்டு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள். பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விதத்திலும் கொதித்து எழும்பினார்கள். ரத்துபஸ்வல, ஹலவாத்த, கட்டுநாயக்க போன்ற இடங்களில் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிய மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அரசாங்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இனவாதக் கும்பல் பேருவளை போன்ற இடங்களில் உயிர்களையும், உடைமைகளையும் அழித்தொழித்தது. அதிகமானோரின் உடைமைகள் இல்லாதொழிக்கப்பட்டதுடன், அவர்களுக்குள் மரண அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பிரிவு இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை. அக்காலப் பிரிவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின்பாலான தாகம் நாட்டின் சிறுபான்மையினருக்கு மட்டுமன்றி பெரும்பான்மையினருக்கும் மிகவும் தேவைப்பாடாக மேலெழுந்தது. சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அதுவே வெடித்துச் சிதறியது. நாட்டினுள் இருந்த அந்த ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்தும் மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியானவுடன் முடிவுக்கு வந்தன.

(தொடரும்)

சிங்களவர்களே விழித்தெழுங்கள்….! தமிழ் கூட்டமைப்பு ஈழம் கேட்கிறது! – கோத்தபாய

“தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வரவுள்ள அரசாங்கத்தில் அவர்களின் எதிர்பார்ப்பு 13 திருத்தச் சட்டத்தின்படி அதிகாரப் பிரிவினையே ஆகும். வடக்கு கிழக்கினை ஒன்றிணைப்பதாகும். எல்.ரீ.ரீயினரின் கொள்கையையே தமிழ் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்கின்றது” என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டி எம்பவ பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

சிறையில் கைவிலங்குகளுடன் நிற்கின்ற பயங்கரவாத சந்தேகநபர்கள் அனைவரையும் விடுதலை செய்வது தொடர்பிலும் தமிழ் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் யுத்தத்தை முன்னெடுத்த தலைவர்கள், இராணுவ உயரதிகாரிகள், படைத்தளபதிகள் அனைவரையும் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் யுத்த நீதிமன்றின் முன் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் உதவியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. இது மிகவும் பயங்கரமான விடயமாகும். 30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எங்களது அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதனை சிறப்பாக பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியது. நாங்கள் சீனாவிலிருந்தே அதிக கடன் பெற்றோம்.

நல்லாட்சிக்கான அரசாங்கம் சீனாவிலிருந்து கடன் பெற்றுக் கொள்வதை நிறுத்தியுள்ளது. அதனால் இன்று நாட்டின் பொருளாதாரம் கீழிறங்கிச் செல்கின்றது. நெல்லுக்கு சரியான விலை கொடுக்க முடியாதுள்ளது. தென்னை, இறப்பர், பால் உற்பத்திகளுக்கும் இன்று விலை நிர்ணயம் இல்லாதிருக்கின்றது இதனால்தான். 80 களுக்கு மீண்டும் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. சென்ற புலிப் பிரச்சினைக் காலத்தில் வடக்கில் பொலிஸாரின் வாகனங்கள் தீப்பற்ற வைக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். நீதிமன்றங்கள் தகர்க்கப்பட்டன. வீதிகளை மறித்து ரயர்கள் பற்றவைக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் கொடிகள் உயர்த்தப்பட்டன. எதிர்ப்புச் சுவரொட்டிகள் எங்கும் ஒட்டப்பட்டன. 80 களில் வடக்கில் இருந்தவற்றின் இலட்சணங்கள் மீண்டும் காணக் கிடைக்கவுள்ளது மிகவும் பயங்கரமான நிலைமையேயாகும்.

-ரிவிர

தமிழில் – கலைமகன் பைரூஸ்


Friday, August 14, 2015

வஸீம் தாஜுத்தீன் மரணம்! வெளிவராத உண்மைகள்!!

“ரக்பி” விளையாட்டின் அசத்தல் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுத்தீன் மரணம் தொடர்பில் இன்று ஊடகங்கள் எங்கும் செய்திகள்... பல சிங்கள இணையத்தளங்களில் பலவாறு செய்திகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன... அவற்றில் பல அச்சூடகங்களில் வெளிவர வாய்ப்பில்லை... பதிவேற்றப்படும் செய்திகள் தமிழ் பேசும் பலரிடத்தும் போய்ச் சேர்வதுமில்லை...

மின்னியல் ஊடகங்களில் பதிவேற்றப்படும் செய்திகளுக்கு அவ்வவ் இணையத்தளங்களின் வாசகர்கள் எழுதும் பின்னூட்டங்கள் தெரியவருவதுமில்லை...

எனவே, தாஜுத்தீன் தொடர்பான சகல தகவல்களையும் “பரிவர்த்தனம்” வலைத்தளத்தில் அவ்வப்போது பதிவேற்றவிழைகின்றேன்...

“பரிவர்த்தனம்” வாசகர்களும் தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமிடலாம்....

“பரிவர்த்தனம்” வலைப்பூவுடன் இணைந்து கொள்ளுங்கள்.. அனைவருக்கும் தளம் பற்றி அறியக் கொடுங்கள்..

இனவாத - மதவாத - மிதவாத கருத்துக்களை அறிந்து புரிந்துணர்வோடு நடக்க “பரிவர்த்தனம்” பங்களிப்புச் செய்யும்.

(கலைமகன் பைரூஸ்)

-------------------------------------------------------------------------------------------------------------------------
ரகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுத்தீனின் சடலத்தை வெளியே எடுத்து, ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளது தொடர்பில் ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பில கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

எங்களுக்கு நினைவிருக்கிறது. சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்கட்சியின், அப்போதைய எதிர்க்கட்சியின் முக்கிய தலைப்பாக இருந்தது யாதென்றால், திருடன் மகிந்த காலை முதல் இரவு வரை வானொலியில், தொலைக்காட்சியில், செய்திப் பத்திரிகைகளில், குறுஞ்செய்தி. மின்னஞ்சல், முகநூல் வாயிலான மகிந்த திருடன், மகிந்த திருடன் எனும் மந்திரத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும்போது பொதுமக்களும் அவ்வாறு இருக்கலாம் என நினைத்து, திருடர்களைப் பிடிப்பதற்காக வாக்களித்தனர்.


திருடர்களைக் கைது செய்வதற்கு எங்களிடம் எட்டு மாதங்களும் நூறு நாட்களும் கேட்டனர். நூறு நாட்களுக்குப் பதிலாக எட்டு மாதங்கள் போய்விட்ட நிலையிலும் சொன்ன “மெகா டீல்” சரியாகவில்லை. எதனையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. எது எவ்வாறாயினும் திருடர்களைப் பிடிப்பதற்காகச் சென்றவர்கள் மகா திருடர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் எல்லோரும் இன்றும் திருடன் திருடன் என்கிறார்கள். ஆட்சி பீடமேறியுள்ள ஒரு சிலர் திருடன் திருடன் என்று கூறி போதும் போதும் என்ற நிலைக்குள்ளாகியுள்ளனர். 


தாஜுதீனின் மரணம்

இதோ புதியதோர் சுலேகாம் ஏந்தியிருக்கிறார்கள்… “ராஜபகஷ குடும்பத்தினர் கொலைகாரர்கள்”. எனவே, அதனை உறுதிப்படுத்துவதற்காக நேற்று (11) காலம்சென்ற வஸீம் தாஜுத்தீன் எனும் ரகர் விளையாட்டு வீரரின் பிரேதம் வெளியே எடுக்கப்பட்டது. தாஜுத்தீனின் சகோதரன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “எனது தம்பியின் கொலை தொடர்பில் குடும்பத்திலுள்ள எங்களுக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது. எனது தம்பியை அரசியலுக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். எங்களுக்கு எங்கள் பாட்டில் நிம்மதியாக இருக்கவிடுங்கள்”


இந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இல்லாத வருத்தம் வஸீம் தாஜுத்தீன் விடயத்தில் இவர்களுக்கு ஏன்? 

(Pls Wait......................)

Wednesday, August 5, 2015

புனித குர்ஆன் மீது அபாண்டமான குற்றம் சாட்டு!

தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களை நசுக்கின்றனர் என சிங்களவர்களை மூளைச்சலவை செய்வதில் தீவிரம் காட்டும் சுசந்த ரணதுங்க!

சிங்கள மக்கள் தமிழ் - முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதற்காக அநுராதபுரத்திலிருந்து பொதுபல சேனாவின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுணவிலிருந்து போட்டியிடுகின்ற சுசந்த ரணதுங்க சிங்களவர்களை மூளைச் சலவை செய்துவருகின்றார். அவரது பேட்டி சிங்களவர்களுக்கு மத்தியில் வெகுவேகமாக சமூக வலைத்தளங்களின் மூலம் சென்றுகொண்டிருக்கின்றது.

“பரிவர்த்தனம்” வாசகர்கள் அவரது நச்சுக்கருத்துக்கள் அடங்கிய சிங்கள பேச்சின் தமிழ்பெயர்ப்பை இங்கே முழுமையாகப் படிக்கலாம். தமிழ் - முஸ்லிம்கள் அதிகமதிகம் இந்தச் செய்தியின் மூலம் விளிப்படையச் செய்ய தங்களால் ஆன பங்களிப்பைச் செய்யவும்... பகிரவும்.. அவதானமாக இருக்கவும்.

அவரது நச்சுக்கருத்துக்களின் பெயர்ப்பு -

அன்புக்குரிய சிங்களவர்களே!

இது நாம் விளித்துக் கொள்ள வேண்டிய காலம்! எந்நேரமும் சிந்திக்க வேண்டிய காலம்!

சிங்களவர்களின் சிங்கள தேசம் 1500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இந்த சிங்கள நாட்டில் இன்று சிங்களவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது? வில்பத்தில் 600 ஏக்கர்களை ரிஷாத் பதியுத்தீன் கைப்பற்றியிருக்கின்றார். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குத் தனியானதொரு மாகாணம் கேட்கும்போது வடக்கில் விஜயகலா மகேஷ்வரன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அங்கிருக்கின்ற பொலிஸாரை முழுமையாக அனுப்பிவிடுவதாக உரத்துச் சத்தமிடுகின்றார். பிரபாகரனின் மைத்துனன் சிவாஜிலிங்கம் குருணாகலையில் போட்டியிடவுள்ளார். அநுராதபுர சிங்களவர்கள் மரக்கலயர்களுக்கும் (முஸ்லிம்களுக்கும்) தமிழர்களுக்கும் அகப்பட்ட சிறைக்கைதிகளாக இருக்க வேண்டிய நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது. 2500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சிங்கள இனத்திற்கு இன்று இந்நிலையே ஏற்பட்டிருக்கின்றது.

அன்புக்குரிய சிங்கள மக்களே!

சிந்திக்க வேண்டியதொரு காலம் உள்ளது. மிகக் குறுகிய காலம். முஸ்லிம்களின் குர்ஆனில் இருக்கும் விடயம் உங்களுக்குத் தெரியுமா? அந்த குர்ஆனில், ஏதேனும் ஒரு நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை நூற்றுக்கு ஐம்பதைத் தாண்டினால் ஏனைய அனைத்து மக்களும் முஸ்லிம்களாக மாற வேண்டும். முஸ்லிம்களாக மாறாதவர்களை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அல்லாஹ்வின் ஆணை.

இலங்கையில் கடைசியாக கணிக்கப்பட்ட சனத்தொகைக் கணிப்பீட்டின்படி பௌத்தர்கள் 69.5 வீதம் காணப்பட்டனர். தற்போது மிக மிகக் குறுகிய பதினொரு ஆண்டுகளுள் இந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 62 வீதத்திற்கும் குறைவாக உள்ளது. மீதியுள்ள நூற்று 7 அல்லது 8 வீதம் முஸ்லிம்களாக மாறுவதற்கு இன்னும் 10 அல்லது 15 எனும் குறுகிய காலம் மட்டுமே.

என் அன்புக்குப் பாத்திரமான பெற்றோர்களே…

ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.. உங்கள் அன்புக்குரிய மகள் அல்லது சகோதரி “புர்கா” எனும் கறுப்பு ஆடைக்குள் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் புகுந்து கொண்டு முழு உடம்பையும் மறைத்துக் கொண்டு ஒரு மரக்கலயனின் பின் செல்லும் நான்கு பெண்களுள் ஒரு பெண்ணாக இருப்பதற்கு. நீங்கள் இதனை விரும்புகின்றீர்களா? அவ்வாறு விரும்புவதாயின் சிங்களவர்களைக் காட்டிக் கொடுங்கள். 

சிங்களவர்களல்லாத எவனுக்கேனும் உங்கள் வாக்குகளை அளியுங்கள்.
இம்முறை அநுராதபுரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சி, நிறக் கண்ணாடி எதுவாயினும் எக்கொள்கைகளுடன் இருந்தாலும் சிங்களவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டிய காலமே மலர்ந்துள்ளது. எனவே ஒன்றாக – ஒரே சிந்தையுடன் நினைத்துப் பாருங்கள்… 

சிங்களவர்களைத்தான் வெற்றிபெறச் செய்ய வேண்டும். யார் எந்தக் கட்சியிலிருந்து போட்டியிட்டாலும் பரவாயில்லை. சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கவும். நீங்கள் அவ்வாறு வாக்களிக்க வேண்டிய ஒரே ஒரு சிங்களக் கட்சி எதுவென்றால் அதுதான் பொதுபலசேனாவின் “பொதுஜன பெரமுண” அதுதான் சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கவுள்ள ஒரே கட்சி. எனவே பொதுஜன பெரமுணவுக்கு உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள். உங்களுக்காக செத்து மடியவும் நான் தயார். எனவே, அநுராதபுரத்திலிருந்து பொதுஜன பெரமுணவிலிருந்து போட்டியிடும் சுசந்த ரணதுங்க 4 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழில் - கலைமகன் பைரூஸ்



Monday, August 3, 2015

கிண்ணஸ் சாதனை… உலகில் வெகுவேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பம் மகிந்தவின் குடும்பமே….?

August 3, 2015 at 12:01 am | Pariwarthanam

உலகில் மிகவும் வேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பமாக இருப்பது மகிந்த ராஜபக்ஷவின் குடும்பமே என பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்.

அது தொடர்பில் கிண்ணஸ் சாதனைப் புத்தகம் குறிப்பிடுவதாக கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் விஷேடமாகத் தெளிவுறுத்தினார்.

எதுஎவ்வாறாயினும் கிண்ணஸ் சாதனைகள் அடங்கிய இணையத்தளத்தில் முழுமையாகத் இவ்வாறான ஒரு குடும்பத்தை தான் உள்ளிட்ட பத்துப் பேர் பலவாறாகத் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை என அவர் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

“பரிவர்த்தனம்” வாசகர்களாகிய உங்களினாலேனும் கண்டுபிடிக்க முடியுமா? எனத் தேடுங்கள்….

இணையத்தள முகவரி
http://www.guinnessworldrecords.com/

(கேஎப்)



Sunday, August 2, 2015

“இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்க நான் பண்டித வேலை செய்துகொண்டேனே!” - மகிந்தர்



-சுனந்த தேசப்பிரிய
தமிழில் - கலைமகன் பைரூஸ்

“நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதமிருக்கையில் பண்டிதவேலை செய்துகொண்டேனே” என கவலை தோய்ந்த சிரிப்புடன் சொன்னவர் சில ஆண்டுகள் பேரரசராக செல்ஃபி (தன்னைத் தானே எடுத்துக்கொண்ட படம்) அணிந்து இருந்த முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ.
தற்போது ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக பண்டித வேலை செய்திருக்கிறார்.அதாவது கைநழுவிய ஜனாதிபதிப் பதவிக்குப் பதிலாக பிரதமராகவேனும் ஆக வேண்டும் எனும் அபிலாசையுடன் 2015 பொதுத் தேர்தலில் அபேட்சகராக களம் இறங்கியிருக்கின்றார். அவர் வாழ்வின் இறுதிப் பண்டித வேலையாக இது இருக்கும் என்பதுடன் அதன் மூலம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதே நடந்திருக்கின்றது.
ராஜபக்ஷவை இத்தேர்தலுக்கு அழைத்து வந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வால்மீது ஏறி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கொள்ள எத்தனிக்கும் தோல்வியைச் சந்தித்த எட்டப்பர்களினாலேயே இவர் தேர்தலில் போட்டியிட அழைத்து வரப்பட்டார். அந்த எட்டப்பர்களில் உள்ள வீரவங்ச, தினேஷ், வாசுதேவ, திஸ்ஸ விதாரண, கம்மன்பில ஆகியோரில் எவரினாலும் தனித்துநின்று போட்டியிட்டு பாராளுமன்றத்தில் ஓர் ஆசனத்தைக்கூட வெற்றிகொள்ள முடியாது. ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்குப் பின்னர் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தமக்கு போக வர இடமில்லாமற் போகும் என அச்சமுற்ற இந்தக் கும்பல் அவர்களைப் போலவே நாதியற்றுக் கிடந்த ராஜபக்ஷவை மீண்டும்  ஆட்சியில் அமர்த்துவதற்கான திட்டத்தில் இறங்கினர். ஒரு குலைக் காய்களை ஒன்றாகத் தோற்கடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதில் பிரதமர் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரியும் தோற்றுவிட்டனர். ராஜபக்ஷவின் ஆதரவுடன் ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் ராஜபக்ஷவின் அடிவருடிகளின் உதவியுடன் அரசியலில் வெற்றிகண்டனர். ராஜபக்ஷவின் இரண்டாவது (மற்றும் கடைசி) பண்டிதக் கதவு அவ்வாறுதான் திறந்து கொண்டது. 
அவர்களின் அனைத்து உபாயங்களையும் உள்வாங்கி, ராஜபக்ஷவாத அடிமைகளிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுத்து, அதனை மீண்டும் சமூக ஜனநாயகத்தின்பால் கொண்டுசெல்வதற்கு ஜனாதிபதி சிரிசேனவினால் முடியவில்லை என்பதோடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கினாலும் அதில் சரியானதொரு நடவடிக்கை எடுக்கவியலாமல் போயிற்று. கடைசியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாலில் தொங்கிக் கொண்டிருந்த கும்பல் அதனது சுக்கானைத் திருப்பி ராஜபக்ஷவை பொதுத் தேர்தலின் பக்கம் சேர்த்துவிட்டனர்.

ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவின் வெற்றியை நிர்ணயித்த ஜனவரி மாத வெற்றி பின்தள்ளப்படுவதற்குக் பெரும்பான்மை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தான் காரணம் என்று சொல்லவியலாது. முன்சொன்ன கும்பலும் ராஜபக்ஷமாரின் தந்திரோபாயமுமே காரணமாகின. ஆகா! அவ்வாறு மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது பண்டித வேலையைச் செய்வதற்கு காலடி எடுத்து வைத்தார்.



(தொடரும்...)
ජනාධිපති සිරිසේන සහ අගමැති රනිල් වික්‍රමසිංහ විසින් නායකත්වය දෙන ලද ජනවාරි විප්ලවය ආපස්සට හැරවීම බහුතර ශ්‍රී ලංකා නිදහස් පාක්ෂාකයින්ගේ නොව ඉහත කී කල්ලියේ සහ රාජපක්ෂවරුන්ගේ කූටෝපාය විය. අහෝ! එළෙස මහින්ද රාජපක්ෂ දෙවන පණ්ඩිතකම කරා පා නැඟුවේ ය.
පළමු පණ්ඩිතකම කරා රාජපක්ෂ තල්ලු වී ගියේ  ඔහුගේම බල තන්හාවට බොරු කකුල් ඇටවූ රටම රවටන දෛවඥයින් සහ දූෂණයෙන් ඉව වහා ගිය කැසිනෝ සහ එතනෝල් යනාදී හොරු රංචුව නිසා ය. නොපෙනෙන අද්භුත බලවේගයන් කෙරෙහි විශ්වාසය තැබීම අඥානබාවයේ සහ හීන වූ ආත්ම විශ්වාසයේ ලක්ෂණයකි.  පළමු පණ්ඩිතකම මෝඩකමක් යැයි පෙන්වා දීමට රජතුමා හෙළුවෙන් යැයි කීමට ධෛර්‍ය සම්පන්න පුරෝහිතයකු රාජපක්ෂට සිටියේ නැත. අදත් නැත.
රාජපක්ෂගේ දෙවැනි පණ්ඩිතකම නිසා විශාලම පාඩුව සිදු වූයේ ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයට යි. පෙර කී පරිදිම එය දූෂිත සහ භීෂිත දේශපාලනඥයින්ගෙන් මුදා ගෙන යළි මැදි පිළිවෙතෙහි ගමන් කරන පක්ෂයක් බවට පත් කිරීමට තිබූ අවස්ථාව ඉන් වැළකී ගියේ ය. සමහර විට එක්සත් ජාතික පක්ෂයට සැබෑ තරඟයක් දිය හැකි සමාජ ප්‍රජාතන්ත්‍රවාදී පුළුල් පෙරමුණක් ගොඩ නඟා මහ මැතිවරණයට මුහුණ දීමට එයට තිබූ අවස්ථාව නැති විය. අද එයින් හමන්නේ එතනෝල් සහ කුඩු ගඳය.
රාජපක්ෂ ප්‍රථම පණ්ඩිතකම කළේ බල තන්හාව සහ දෛවඥයින්ගේ වඳුරු උපදෙස් නිසා නම් දෙවන පණ්ඩිතකම කළේ වලිග වහල්ලු සහ අංක ගණිතය මිස වීජ ගණිතය නොදන්නා නිසා ය.
රාජපක්ෂ වහලුන්ගේ තර්කය මෙසේ ය. ජනාධිපතිවරණයේ දී රාජපක්ෂ ලක්ෂ 58ක් ගත්තේ ය‍. සිරිසේනට ලැබුනේ ලක්ෂ 62කි. එම ලක්ෂ 62කට දෙමළ ජන්ද උතුරු නැගෙනහිර දෙමළ ජන්ද ලක්ෂ 06ක් අයත් ය. ජනතා විමුක්ති පෙරමුණේ ජන්ද ලක්ස 03ක් අයත් ය. එම ජන්ද මහා මැතිවරණයේ දී එක්සත් ජාතික පෙරමුනට ලැබෙන්නේ නැත. එබැවින් ගෙඩිය පිටින්ම ජයග්‍රහණය රාජපක්ෂ ප්‍රමුඛ වහලුන්ට ය.
පසුගිය ජනාධිපතිවරණ සහ මහා මැතිවරණ දෙස විමසා බලන ඹ්නෑම අයකුට පෙනේනේ ඡන්ද දායකයාගේ හැසිරීම මෙවැනි අවස්ථාවන් දෙකෙක දී සහමුලින්ම වෙනස්වන බවයි. 2010 මහා මැතිවරණයේ දී රාජපක්ෂ හවුල ලබා ගත්තේ  2010 ජනාධිපතිවරණයේ දී රාජපක්ෂ ලබා ගත් ජන්ද සංඛ්‍යාවට වඩා ඡන්ද දශලක්ෂයක් අඩුවෙනි.  රාජපක්ෂ සහ එහි වහලුන් 2015 ජනාධිපතිවරණයේ දී යොදා ගත් රාජ්‍ය දේපල, රාජ්‍ය මාධ්‍ය සහ රාජ්‍ය බලය අද ඔවුන්ට නැත. අගමැති සහ ජනාධිපති යන දෙදෙනාම රාජපක්ෂ පරාජය කළ යුතු බවට ගිවිස ගෙන සිටිති. මේ සියල්ලටමත් වඩා රාජපක්ෂ පවුල සහ එහි වහලුන් කළ හොරකම් සහ මැරකම් අද ජනාධිපතිවරණ සමයේදීට වඩා සාධක සහිතවම මහා ජනයා හමුවෙහි තිබේ.
රාජපක්ෂගේ දෙවන  සහ අන්තිම පන්ඩිතකම විසින් රාජපක්ෂ විරෝධී කඳවුර ජනාධිපතිවරණයේ දී තිබුණාටත් වඩා සමගි සම්පන්න කර තිබේ. රාජපක්ෂ මහා මැතිවරණයට ඉදිරිපත් නොවූයේ නම් 2015 දී ජනාධිපති සිරිසේන වෙනුවෙන් ගොඩ නැගුණූ පෙරමුණ බිඳී විසිරී යන්නට හොඳටම ඉඩ තිබුණි. අද ජවිපෙ කරා ඇදී යන යම් යම් පිරිස් හැරුණ විට රාජපක්ෂ විරෝධී යහ පාලනය සඳහා වන එක්සත් ජාතික පෙරමුණ වඩා බලවත් එකතුවක් බවට පත්ව තිබේ. ජනාධිපතිවරණයේදී හතලිහක් පමණ වූ සිවිල් සහ වෘත්තිය සංවිධාන එකතුව අද වන විට දෙගුණයකටත් වඩා වැඩි වී ඇත.
එපමණක් නොවේ. රාජපක්ෂ කඳවුර තුළම රාජපක්ෂ විරෝධී ප්‍රබල දේශපාලනඥයින් ගණනාවක් ම සිටිති. රාජපක්ෂ විරෝධී පස්වන බලකාය වනු ඇත්තේ එම පිරිස් ය. ‘සිය කඳවුර බෙදී නැතැයි’ රාජපක්ෂ පුන පුනා කීවද සෑම දිසාවකම ජනාධිපති සිරිසේනගේ දේශපාලන පිළිවෙතට සහාය දක්වන ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ දේශපාලනඥයින්ට හූ කීමත් ඔවුන් පරාජය කිරීමට කටයුතු කිරීමත් රාජපක්ෂ වහලුන්ගේ උපාය වී තිබේ. දැන් රාජපක්ෂවරු කියන්නේ ‘ හෙළවෙන්නේ නැති අයට‍’ ඡන්දය දෙන්නැයි කියා ය. වෙනත් වචනයෙන් ඉන්  කියන්නේ ජනාධිපති සිරිසේනගේ දේශපාලනය පරාජය කරන එකය.
එනයින් රාජපක්ෂගේ දෙවන පන්ඩිතකම විසින් කර ඇත්තේ ඔහුගේ දූෂිත භීෂිත දේශපාලනයට විරුද්ධ බලවේග සමගි කොට  ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය බේද බින්න කිරීමය.  එය ඔහුගේ අවසාන පන්ඩිතකම වනු ඇත්තේ ඒ නිසා ය. පසුගිය මැතිවරණයන්හිදී අසන්නට ලැබුණේ එජාප සහ ජවිපෙ පාක්ෂිකයින් රාජපක්ෂ කරා ඇදී යන බවයි. මෙම මැතිවරණයේ දකින්නට ලැබෙන්නේ ඊට සහමුලින්ම වෙනස් ලෙස ශ්‍රීලනිප පාක්ෂිකයින් රාජපක්ෂ කඳවුර අතහැර යාමයි.
පළමු පන්ඩිතකම අනුව රාජපක්ෂ ජනාධිපතිවරණයේ දී  තමා ජයග්‍රහණය කළ හොත් කරනු ලබන වැඩ සටහනක් ඉදිරිපත් කළේ ය. දැන් ඉන් මාස හයකට පසු රාජපක්ෂගේ පොරොන්දු මල්ල ඊට හාත්පසින්ම වෙනස් ය. තමාගේ දස වසරක පාලන කාලය තුළ මෙරට මහා ජනයා අමතක කර සිය පවුල සංවර්ධනය කරගත් රාජපක්ෂ දැන් තමා අගමැති කරන ලෙස යදිමින් ගයන්නේ අලුත් සිංදුවකි. ඔහුගේ පාලන කාලය අසාර්ථක වූ බව රාජපක්ෂගේ ඡන්ද සටන් පාඨයෙන්ම පිළිගෙන තිබේ. ඉන් කියැවෙන්නේ ‘අලුතින්ම පටන් ගමු’ කියා ය‍.  ඒ වනාහී රාජපක්ෂගේ දෙවන සහ අන්තිම පන්ඩිතකම තුල පැටව් ගසා ඇති පුංවි පුංවි පන්ඩිතකම්වලින් එකක් පමණි.
රාජපක්ෂගේ මේ අන්තිම පන්ඩිතකම දැසින්ම බලා ගැනීමට අවශ්‍යනම් කළ යුත්තේ මේ දිනවල කුරුණෑගල දිසාව පැත්තේ ඇවිද බැලීම යි.  එතනෝල් ජාවාරම්කාර සහ තැබෑරුම්කාර රාජපක්ෂ වහලුන්ගේ කාර්යාලයන්හි මැස්සන් ඇහිරෙන අතර ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ සිට යහ පාලන පෙරමුණට පැමිණි නාවින්නගේ කාර්යාලයෙහි මීමැසි පොදිමෙන් මහාජනයාගෙන් පිරී තිබේ. රාජපක්ෂ මැජික් එකක් කුරුණෑගල නැත. ඔහු අද තවත් එක් ඡන්ද අපේක්ෂකයෙක් පමණි.
තිත්ත නමුත් ඇත්ත පිළිගැනීමට රාජපක්ෂ සහ වහලුන්ට සිදුවූ විට ‘ අහෝ අප අන්තිම පන්ඩිතකමත් කළා නොවැ’යැයි කොඳුරන්නට වන දිනය එතරම් ඈත නොවේ.
-සුනන්ද දේශප්‍රිය
ලංකා ඊ නිවුස්