It

Tuesday, April 28, 2015

துப்பாக்கியுடன் மைத்திரி அருகில் வந்தவர் யார்? உண்மை ஏது என தெளிவுறுத்துகிறது மகிந்த ஆதரவு இணையத்தளம்!

April 28, 2015 at 12:01 am | Pariwarthanam.Blogspot.Com 

நாமல் ராஜபக்ஷவின் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அருகில் வந்தார் என அடிக்கடி வெளியாகின்ற செய்திகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற இணையத்தளம் ஒன்று கீழ்வருமாறு கருத்துரைத்துள்ளது. அதன் மீள்மொழிவு கீழ்வருமாறு -

தமிழில் - கலைமகன் பைரூஸ்

 [1]. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை கொலை செய்வது தொடர்பான செய்தியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவினர் கட்டவிழ்த்துள்ளனர். எங்களுக்குத் தெரிந்த வகையில் அந்த சேறுபூசுதலின் குறிக்கோள்கள் வருமாறு.

(i). மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினைக் குறைப்பதற்கு ஆவன செய்வது.

(ii). மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சேறு பூசுதல்.

(iii).
தர்க்க ரீதியாக பார்க்குமிடத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தல் விளைவிப்பது ஐதேக என்பதால் (அப்போதுதான் ரணில் விக்கிரமசிங்க இயல்புநிலையாக ஜனாதிபதியாவதால்) அவருக்கு ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றால் அதனை மகிந்த பிரிவினரில் தலையில் தூக்கிப் போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவையேற்பட்டிருக்கின்றது.

[2]. அதில் ஒரு திட்டமாக, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாமன் உறவுமுறையான ரஞ்சித் விஜேவர்தன மற்றும் மைத்துனரான  ருவன் விஜேவர்தன ஆகியோருக்குச் சொந்தமான “லங்காதீப”  பத்திரிகை மூலம் வெளியான செய்தியொன்றும்,

அந்தச் செய்தியானது இதனை விடவும் வித்தியாசமான முறையில் ஏனைய ஐதேக சேறுபூசும் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தாலும், அவற்றின் உரிமையாளர்கள் வெளியீட்டாளர்கள் அல்ல என்பதால் எவ்வித பொறுப்புக்களும் இல்லையாதலால் அவர்களுக்கு எதனையும் எழுத முடியும் என்பதை பொதுமக்கள் கவனத்திற் கொள்வர் என நாங்கள் கருதுகின்றோம். அதனால் “லங்காதீப” பத்திரிகை பற்றி மட்டுமே நாங்கள் இங்கு சிந்தனையைச் செலுத்துவோம்.

(i). அங்குனுகொலபெலெஸ்ஸவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர்களுக்கான கூட்டமே இடம்பெற்றது. என்றாலும் அக்கூட்டத்திற்கு பொதுமக்கள் அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அழைப்பின் பேரிலேயே அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவ்விடயம் பற்றி லங்காதீபவில் குறிப்பிடப்படவில்லை.

(ii). எந்தவொரு இராணுவ “கோப்ரல்” அல்லது வேறு எந்தவொரு இராணுவ அதிகாரியும் இதுவரை நாமல் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பாளர்களாக இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, மேற்சொன்ன துப்பாக்கி ஏந்தி வந்த இராணுவ வீர்ர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி என குறிப்பிடுவது பொய்யாகும்.

(iii). அவ்வாறு அங்கு வந்திருந்தவர் இராணுவத்தினரிடம் இருந்து விடுகை பெற்று வந்துள்ள இராணுவ வீர்ரொருவரே. தனது பிரதேசத்தில் நடைபெறும் கூட்டமான்று என்பதனாலும், நாட்டின் ஜனாதிபதி, சபாநாயகர் உள்ளிட்ட நாட்டின் பிரபல்யங்கள் பலர் அக்கூட்டத்திற்கு வருகை தருவதால் அதனைக் கண்ணுறுவதற்காகவே அந்த இராணுவ வீர்ரும் அங்கு சமுகமளித்துள்ளார். சாதாரண பொதுமக்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே அவரும் உட்கார்ந்திருக்கின்றார். 


(iv). இனி, அவர் இராணுவத்தில் சேவை செய்யும் இராணுவ வீரர்களில் ஒருவர் என்பதால், ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் (அவர்களும் இராணுவ வீரர்கள் ஆதலால்) அவரைத் தெரிந்துகொண்டுள்ளனர். ஏன் இங்கு வருகை தந்திருக்கின்றீர்கள் என வினவியிருக்கின்றனர். அவரும் பதில் கூறியிருக்கின்றார். (நாட்டின் ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோர் வருகை தந்திருப்பதனால் அவர்களைப் பார்ப்பதற்காக அவர்களைப் பார்ப்பதற்காக வந்தேன்.)

(v).
அவரிடம் துப்பாக்கி இருக்கவே இல்லை. அவரிடம் அவ்வாறானதொரு துப்பாக்கி இருந்திருக்குமானால் அவர் அங்கு எவ்விதத்திலும் சென்றிருக்க முடியாது. இதனை நேரடியாகக் கண்ணுற்ற ஸ்ரீசுக உறுப்பினர்கள் எங்களிடம் அறிவித்தற்கு ஏற்ப, அவரிடம் ஒரு பணப்பை, நீரருந்தும் ஒரு “போத்தல்”, மற்றும் ஒரு கைக்குட்டை என்பன மாத்திரமே  இருந்திருக்கின்றன.

(vi). கீழ்வருவன “லங்காதீப”வில் பிரசுரமானவை -

பொலிஸ் விசேட பிரிவினர் நாமலின் பாதுகாப்பாளரைச் சோதனையிட்ட போது அவரிடம் துப்பாக்கியொன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை (அந்த இராணுவ வீரரை) அவ்விடத்தினின்றும் திருப்பியனுப்பியுள்ளனர்.

நல்லாட்சியில் வெளியான முக்கிய பொய் அங்குதான் முதலிடம் பெறுகின்றது. ஏதேனும் ஒருவகையில் நாட்டு ஜனாபதியின் பக்கமாக அனுமதியின்றி துப்பாக்கி அல்லது ஏதேனும் ஒரு (கூரிய) ஆயுதத்தை எடுத்துவருபவர் கைது செய்யப்பட வேண்டும். ஆயினும், “குறித்த நபர் அங்கிருந்து திருப்பியனுப்பப் பட்டார்” எனச் சொல்லப்பட்டுள்ளது. துப்பாக்கி ஒன்று கொண்டுவந்தார் எனும் கதை “பச்சைப் பொய்” என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. 

(vii). அவ் இராணுவ வீரர் கைது செய்யப்படவில்லை. அவர் எவ்விதக் குற்றமும் இழைக்கவில்லை ஆதலால், (அதாவது அவர் குறிப்பிடுகின்றது போல அவர் துப்பாக்கியொன்று கொண்டு வரவில்லை ஆதலால்) அவர் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டார். கும்பிடப் போன கோயில் உடைந்து விழுந்தாற் போல, நாட்டின் புதிய ஜனாதிபதியைப் பார்வையிடுவதற்காக வந்தவரிடம் கேள்விக் கணைகள் தொடுத்த போது அவ்விராணுவ வீரர் சென்றுவிட்டார். விடுமுறை பெற்றுவந்துள்ள ஓர் இராணுவ வீரர் நாட்டின் ஜனாதிபதி கலந்து கொள்கின்ற கூட்டமொன்றைப் பார்ப்பதற்கு உட்காருவது தடை என்பதை நாங்கள் இப்போது ஊகித்துக் கொள்கின்றோம்.

(viii). தற்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் முக்கியத்தரான எஸ்.எம். விக்கிரமசிங்க பற்றியும் லங்காதீப கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நல்லாட்சி குறிப்பிடுவது போல ஜனாதிபதியின் அருகில் துப்பாக்கியொன்றுடன் அருகே செல்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தால், அக்கணமே எஸ்.எம். விக்கிரமசிங்க பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமைக்குக் காரணம் அவ்வாறான துப்பாக்கியொன்று அங்கு காணப்படவில்லை என்பதனாலேயே ஆகும்.

[3]. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னுடைய கூட்டங்களுக்குச் சமுகமளிக்கும் எந்தவொரு நிராயுத இராணுவ வீரரரையும் திருப்பியனுப்புவதில்லை. அதுமட்டுமன்றி, அவர் வடக்கு கிழக்கில் யுத்தகளத்தில் இருந்த இராணுவ வீரர்களிடமும் சென்றார். இராணுவ வீரர்கள் படுபயங்கர ஆயுதங்களுடன் யுத்தம் செய்யும்போது அவர்களைக் காணச் சென்றார். யுத்தத்தை வென்ற தலைவனின் தன்னிகரற்ற செயல் அதுதான். வாகரையில்  பாரிய யுத்தத்தில் வெற்றிவாகை சூடிய இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காகச் சென்றவேளை...

[4]. மகிந்த ராஜபக்ஷவுக்கு அச்சுறுத்தலாக புலிப் பயங்கரவாதிகளும் அவர்களின் ஒத்துழைப்பாளர்களும் இருந்தார்களேயன்றி இலங்கை இராணுவ வீரர்கள் அல்லர். அன்று மகிந்த ராஜபக்ஷவுக்கு அனைத்து முப்படைகளும் இருந்தபோதும், இன்று அவருக்கான பாதுகாப்பு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

(i). அதற்கான காரணமாக இருப்பது, மகிந்த ராஜபக்ஷ செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆயிரக் கணக்கில் அவரைச் சூழ்ந்துகொள்வதும், அது நல்லாட்சியிலுள்ள சிலரின் கண்களில் முள் தைக்க வைக்கும் விடயமாக இருப்பதனாலுமாகும்.

(ii). புலம்பெயர்ந்த தமிழர்களின் தடையை நீக்கியதோடு வெளிநாடுகளில் வசித்துவருகின்ற புலி ஆதரவாளர்கள் எவ்வித தடையுமின்றி ஸ்ரீலங்காவுக்கு வர முடியும் என்பதால் அவரின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

(iii). லங்காதீபவில் குறிப்பிடப்பட்ட போலித் துப்பாக்கி போன்ற கதை, நல்லாட்சி அரசினாலும் கட்டவிழ்க்கப்பட்டமைக்கான காரணம் அதனைச் சரிசெய்வதற்கேயாகும்.

– mahinda.info

Saturday, April 11, 2015

ஞானசாரவின் மறுபக்கத்தை போட்டுடைக்கின்றார் முன்னாள் சகா.. மகள், மனைவி!


பரபரப்பூட்டும் அதிர்ச்சித் தகவல்கள்..??

(ஏ எம் எம் முஸம்மில்- பதுளை) 

கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும். இவ்வியக்கத்தின் பிரதான தலைவர்களுள் செயலாளர் ஞான சாரவின் வகிபாகம் மிக முக்கியமானதாகும்.


இவர் முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் நேரடி கட்டளைப் படி இயங்கியவர் என்று பரவலாக பேசப் படுகின்றது.


ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் இவ்வமைப்பு பற்றியும் இவ்வமைப்பின் பின்னணி பற்றியும் அவ்வப்போது பல ரகசியங்கள் வெளிவர தொடங்கியது. இவ்விரகசியங்களின் உச்சகட்டமாக “ பொதுபலசேனா ” அமைப்பின் மிக முக்கிய தொண்டராக செயற்பட்ட ஜா எல பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த அஞ்சு பெரேரா என்பவரால் தற்போது வெளியிடப் பட்டிருக்கும் தகவல்கள் ஞான சார தேரரின் மறுபக்கத்தை தோலுரித்து காட்டியுள்ளது. அவர் கூறிய அதிர்ச்சித் தகவல்கள் கீழ்வருமாறு ……..
.

ஞான சாரவுக்கு தேவைப்பட்ட பி எம் டப்ளியு (BMW- Car) கார்வண்டியும், டிபென்டர்ரக கெப் வண்டியும்.

“ இந் நாட்டில் எம்மைவிட்டுப் பிரிந்த சோம தேரரை போன்ற ஆளுமை மிக்க பௌத்த தேரர் ஒருவர் இந் நாட்டிற்கு மிகவும் தேவை என நான் உணர்ந்திருந்தேன். அந்த இடைவெளியை நிரப்ப பிறப்பெடுத்தவர் தான் ஞானசார என்று எனதுள்ளம் சொல்லியது. அப்படி என் மனம் சொன்ன போதே நான் பொதுபல சேனாவுடன் இணைந்து கொண்டேன்.

பொது பல சேனாவின் பதுளை மாநாட்டின் பின்பே நான் ஞான சாரவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தேன். நெருங்கிபழக ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் இருந்தே பொது பல சேனாவின் எல்லாவகையான வேலைத்திட்டங்களிலும் மிகவும் விருப்பத்துடன் பங்கேற்றேன். ஞான சாரவுடன் நெருங்கிபழக ஆரம்பித்த கட்டத்தில் அவருக்கு தூர பயணங்களுக்காக தனிப்பட்ட வாகனம் ஒன்றிருக்க வில்லை என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அத்துடன் அப்போதைக்கு அவருக்கான அத்தியாவசிய தேவைகள் இரண்டினை மையப்படுத்தி எனக்கு உணர்த்தப் பட்டது. ஒன்று அவருக்கான பிரத்தியேக வாகனம், மற்றையது அவரது பாதுகாப்பு.

என்னிடத்தில் பி எம் டப்ளியு (BMW- Car) கார் ஒன்றும், டிபென்டர் ரக கெப் வண்டியுமாக இரண்டு வாகனங்கள் இருந்தன. ஞான சார தேரருக்காக அவ்வாகனங்களை வழங்குவதில் எனக்கு எந்த சிரமும் இருக்க வில்லை. ஆகவே அவற்றை நான் அவருக்காக வழங்க விருப்பத்துடன் முன்வந்தேன். மற்ற விடயம் நான் ஒரு அரசியல்வாதி என்ற ரீதியில் என்னுடன் எப்பொழுதுமே இளைஞர் கூட்டமொன்று கூடவே இருப்பார்கள். ஆகவே பாதுகாப்பிற்கு அவர்களை பயன்படுத்த நான் முன்வந்தேன். ஆகவே நாங்கள் பயணங்கள் போகும் போது ஞான சார தேரரை எனது கார்வண்டியின் முன் ஆசனத்தில் அமரச் செய்து, கெப் வண்டியில் இளைஞர் கூட்டத்தையும் ஏற்றிக்கொண்டு நாங்கள் பயணங்களை சென்று வந்தோம்.

ஆக, பி எம் டப்ளியு (BMW- Car) கார் ஒன்றும், டிபென்டர் ரக கெப் வண்டியும் ஞானசாரவுக்கு கிடைத்தாயிற்று. அத்துடன் ஞானசார ஹாமுதுருவுடன் மேலும் அண்மித்து பழகக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

முறையான தொரு வேலைத்திட்டமோ, திட்டமிட்ட செயற்பாடோ இல்லாத பொது பல சேனா

நாங்கள் வாகனத்தில் பல பயணங்களை சென்றோம் . பயணம் நெடுகிலும் பல விடயங்களைப் பற்றி பேசினோம். பி பி எஸ் சுக்கு வெளிநாட்டு பணம் வருகின்றது என்பதை ஆரம்பத்தில் நான் நம்ப வில்லை. அனால் இவர்களுக்கு பல வெளிநாட்டு தொடர்புகள் உண்டு, நான் ஞானசார ஹாமுதுருவுடன் ஒன்றாக இருந்தாலும் பி பி எஸ் பற்றி நான் அவதானித்த விடயம் தான் இவர்களுக்கென்று திட்டமிட்ட செயட்படொன்று கிடையாது. மாநாடுகள் செய்கின்றார்கள், கூட்டங்கள் நடத்துவார்கள் ஊடக சந்திப்புகளை நடத்துவார்கள், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை செய்வார்கள், ஆனால் அதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று தேசிய ரீதியிலானதொரு முறையான திட்டம் கிடையாது. நான் இதுபற்றி ஹாமுதுருவுடன் நேரடியாகவே பல முறைகள் கதைத்துள்ளேன். ஆனால் ஒன்றும் பலனளிக்க வில்லை.


பிரான்சில் இருந்து வந்த ஞான சாராவின் மகளும், மகளின் தாயும்.

ஞானசார ஹாமுதுருவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிழைகள் பிரச்சினைகள் இருப்பதை நான் அறிந்து கொண்டேன் . ஆனாலும் இவர் பற்றிய உண்மைத்தகவல்கள் வெளியுலகத்திட்கு தெரிய வருவதால் எமது இயக்கத்திற்கும் அதன் தேசிய வேலைத்திட்டத்திட்கும் பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தால் இவரின் குறைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடிவு செய்திருந்தேன்.

இவர் பற்றிய உண்மைத்தகவல்கள் எனக்கு எவ்வாறு தெரிய வந்ததென்றால், ஒருநாள் ஞானசார ஹாமுதுரு என்னிடத்தில் சொன்னார், “ தம்பி பிரான்சிலிருந்து அக்கா ஒருவர் வருவார், அவர் எமக்கு மிக வேண்டியவர். எமது இயக்கத்திற்கும் நிறைய உதவி செய்பவர். அவர் வந்தால் நாங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும், நீங்கள் உதவி செய்வீர்கள் தானே.” என்று என்னிடம் கேட்டார். நானும், “ நீங்கள் எந்த உதவியைகேட்டாலும் நான் செய்து தர காத்திருக்கின்றேன் வேண்டியதை கேளுங்கள் ” என்று அவருக்கு தெரிவித்தேன்.

பிரான்சிலிருந்து அந்த அக்காவும் வந்தார். பொல்கஹவலயில் உள்ள கிரிபத்கொட ஞானானந்த ஹாமுதுருவின் சமய மத்தியச்தானமொன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வழிபாட்டு நிகழ்வொன்றில் வைத்தே நான் அந்த அக்காவை முதன் முதலில் சந்தித்தேன். அவரின் பெயர் “மனோஜா” என்று எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. அவருடன் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகளும் கூட இருந்தார்கள்.

பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்ற ஞானசார ஹாமுதுருவின் குடும்பம்

பொல்கஹவெல சமய நிகழ்வு முடிந்தவுடன் ஞானசார ஹாமுதுரு என்னிடம் சொனார்,” தம்பி அக்காமார்களை இன்னும் எங்கும் கூட்டி போகவும் இல்லையே. நாங்கள் அப்படியே கொஞ்சம் பொலன்னறுவைக்கு சென்று வருவோம். காடு, மரமட்டைகளை அவர்களுக்கு காட்டிய மாதிரியும் இருக்குமல்லவா ? என்று. நானும், “ஆம் சென்று வரலாம்” என்று கூறியதும் நாங்கள் பொலன்னறுவைக்கு சென்றோம். எனது வாகனத்தின் முன் ஆசனத்தில் ஞான சார ஹாமுதுரு அமர்ந்திருந்தார். பின் ஆசனத்தில் மனோஜா அக்காவும் பெண் பிள்ளைகள் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களின் பெரிய பிள்ளைக்கு சுமார் பதினாறு வயது மதிக்க கூடியதாக இருந்தது. இளைய பிள்ளைக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்.

பயணத்தில் இடையில் வாகனத்தை கொஞ்சம் நிறுத்துமாறு ஞானசார என்னிடம் கூறினார். வாகனத்தை நிறுத்தியதும் ஞானசார ஹாமுதுரு பின் ஆசனத்திட்குச் சென்று பெரிய பெண் பிள்ளையை முன் ஆசனத்திற்கு அனுப்பினார். இரண்டு பிள்ளைகள் இருக்கும் போது இளைய பெண்பிள்ளைக்கு அளவில்லா அன்புகாட்டுவதை அவதானிக்க முடிந்தது. நன்கு புஷ்டியாக வளர்ந்திருந்த அந்த பிள்ளைக்கு ஞான சார ஹமுதுருவின் முக சாயல் அப்படியே இருந்தது, அப்பிள்ளையின் முகத்தை தனது மடியில் சாத்திய ஞானசார அவளின் தலையை கோதிவிட்டு ஆதரவுடன் தழுவிக் கொண்டு வந்தார். அப்போது தான் இந்த பிள்ளை ஞானசாரவுடையதாக இருக்குமோ என்று எனக்குள் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

இளைய பெண்பிள்ளை தனது மகள் என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்த ஞானசார

பொலன்னறுவைக்கு சென்ற நாங்கள் மாலை நேரம் ஓய்வு எடுப்பதற்கு தனியானதொரு ஹோட்டல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நந்த ஹாமுதுருவின் வண்டி ஓட்டுனர் மற்றும் அந்த வாகனத்தில் வந்த இன்னும் சில ஹாமுதுருமாரும் ஒரு பிரத்தியேக அறையில் தங்கினார்கள். நாங்கள் பிறிதொரு பக்கத்தில் வேறொரு அறையில் தங்கினோம். இவ் ஏற்பாடுகளை ஞானசார ஹாமுதுரு தொலைபேசி மூலம் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தார். என்பது குறிப்பிடத் தக்கது. சற்று நேரம் ஓய்வெடுத்த நாம் மீண்டும் எழுந்து மின்னேறிய யானைகள் பார்க்கச் சென்றோம் . யானைகள் பார்த்துவிட்டு நாங்கள் கொழும்பை நோக்கி பயணமானோம். வரும் வழியில் இவர்களின் நடத்தைகளை வைத்து, குறிப்பிட்ட பெண் பிள்ளை ஞானசாரவினுடையது தான் என்பதை நான் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டேன். ஓரிடத்தில் வைத்து ஞானசார ஹாமுதுருவே என்னிடத்தில் சொன்னார், “அந்த பிள்ளையின் தந்தை நான்தான்” என்று. எனது ஊகமும் சரியாகிட்டு.

கொழும்பில் டெனிஸ் விளையாடிய ஞானசாரவின் மகள்

குறிப்பிட்ட பெண் பிள்ளை தன்னுடையது என்று கூறிய ஞானசார ஹாமுதுரு, அவள் ஒரு டெனிஸ் வீராங்கனை என்றும் அவள் பிரான்சிற்கு திரும்பி சென்றதும் டெனிஸ் போட்டித் தொடரொன்றில் ( tennis tournament ) விளையாட இருப்பதாகவும் என்னிடம் சொன்ன அவர் போகும் வரைக்கும் அவளுக்கு டெனிஸ் பயிற்சி பெற நல்லதொரு இடத்தை தெரிவு செய்து தருமாறும் வேண்டினார்.

ரத்ன பிட்டி சிங்காரா டெனிஸ் கழகத்தின் எனக்கு தெரிந்த என் நண்பர் ஒருவர் மூலமாக நான் அந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தேன். பின்பு நானே அவளை தினமும் மாலையில் டெனிஸ் விளையாட வாகனத்தில் கூட்டிச் செல்வதும் விளையாடி முடிந்ததும் மீண்டும் கூட்டிவருவதுமாக பல உதவிகளை செய்தேன். அந்த நாட்களில் ஹாமுதுரு சொல்லும் இடங்களுக்கெல்லாம் அவர்களை நான் கூட்டிச் செல்வேன். அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே பல உதவிகளை செய்து கொடுத்தேன்.

தனது குடும்பத்துடன் தனியாக வாடகை வீடொன்றில் தங்கிய ஞானசார

நாங்கள் மஹியங்கனையில் நடைபெற்ற பௌத்த மாநாடிட்கு சென்று திரும்பி வருகையில் ஞானசார தேரரின் ஆலோசனைப்படி கண்டியூடாக சென்று மடவளை பன்சலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் நுவரெலியா சென்று சில நாட்கள் தங்க திட்டமிட்டிருதோம். நாங்கள் நுவரலியா செல்லும் வழியில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு வாடகை வீட்டில் ஞானசார தேரர் மனோஜா அக்கா மற்றும் பிள்ளைகளுடன் தனியாக தங்குவதாக சொன்னார். என்னுடன் இருந்த எனது நண்பர்களை திருப்பி அனுப்பிவிடும்படி என்னிடம் வேண்டினார். அவர்கள் சென்று விட்டால் என்னால் தனியாக இருக்க முடியாது என்று கூறி நான் அதை மறுத்து விட்டேன். பிறகு நாங்கள் எனது சொந்த செலவில் தனியாக வேறொரு இடத்தில் தங்கினோம்.

ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாவீதம் செலவழித்து நான்கு நாட்கள் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கிய ஞானசார தேரர்.
அடுத்த நாள் காலை என்னை சந்தித்த ஞானசார ஹாமுதுரு, “ தம்பி இந்த வீடு எங்களுக்கு செட்டாக வில்லை . நாங்கள் வேறொரு வீட்டை வாடகைக்கு ட்ரை பண்ணுவோம் என்று கூறினார். பிறகு நாங்கள் பண்டாரவெல வீதியில் இருந்த ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்தோம் அதற்கு ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் ருபாய் வாடகை செலுத்த தீர்மானிக்கப் பட்டது. அதில் அவர்கள் நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். நாங்கள் வேறாக தங்கினோம். அதன் பிறகு அந்த வீட்டிற்கு நான் அடிக்கடி செல்வதை தவிர்த்து வந்தேன். ஏன் என்றால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு தெரிந்திருந்தது. அடிக்கடி சென்று அவரை அசௌகரிய படுத்த நான் விரும்ப வில்லை.

ஒரு சுற்றுலா பயணியைப் போல் பெண்களுடன் சேர்ந்து நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த ஞானசார

பிறகு நாங்கள் நுவரேலியா வழியாக ரம்பொட பாஸ் நீர்வீழ்ச்சியின் அருகினால் திரும்பி வருகையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் எண்ணம் ஏற்படவே ஆண்கள் பெண்கள் எல்லோரும் சேர்ந்து குளிக்க ஆரம்பித்தோம். எங்களுடன் சேர்ந்து ஞானசாரவும் குளிக்க ஆரம்பித்தார். இவரின் செயற்பாடுகள் எனக்கு அருவருப்பாக இருந்தது. நாடறிந்த ஒரு பௌத்த தேரர், பௌத்த அமைப்பொன்றின் பிரதான தலைவர், எவரும் கண்டவுடன் அடையாளம் காணக்கூடிய ஒரு முன்னணி துறவி இவ்வாறு எந்த வித அச்சமும் இன்றி பெண்களுடன் சேர்ந்து பகிரங்கமாக குளிப்பது எந்த வகையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது.

வாகனம் ஓட்ட ஆசைப்பட்ட ஞான சார தேரர்

குளித்து முடிந்து நாங்கள் மீண்டும் பயணப்பட்டோம். மனோஜா அக்கா மற்றும் பிள்ளைகள் முன்னால் வந்த வாகனத்தில் ஏறி இருந்தார்கள் . முன்னாள் ஞானசார ஹாமுதுருவும் நானும் எனது வாகனத்தில் புறப்பட்டோம். பின்னால வந்த வாகனத்தை தாண்டி சற்று தூரம் முன்னால் நாங்கள் சென்று கொண்டிருக்கையில் ஞானசார ஹாமுதுரு என்னிடத்தில் கேட்டார் , “ தம்பி நான் வாகனம் ஒட்டி ரொம்ப நாள் ஆகுது. எனக்கு கொஞ்சம் ஓட்ட தாருங்கள் என்று” நானும் வேறு வழியின்றி வாகனத்தை பக்கத்தில் நிறுத்திவிட்டு அவருக்கு வண்டியை ஓட்ட இடமளித்தேன். அவர் வாகனம் ஓட்ட ஆரம்பித்து சற்று நேரத்தில் எனது கைப்பேசிக்கு மனோஜா அக்கவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர் கேட்டார் தம்பி யார் வாகனம் ஒட்டுவதென்று . நான்தான் என்று நான் அவருக்கு பொய் சொன்னேன். பின் அவர் மீண்டும் என்னிடம் சொன்னார், “தம்பி பொய் சொல்ல வேண்டாம் . உடனே நீங்கள் வாகனத்தை எடுக்க வேண்டும் . நீங்கள் வாகனத்தை எடுக்காவிட்டால் நான் ஒரு அடி கூட முன்னால் நகர மாட்டேன் என்று அவருக்கு சொல்லுங்கள் ” என்று திட்டவட்டமாக மனோஜா அக்கா என்னிடம் தெரிவித்து விட்டார். நான் ஞானசார ஹாமுதுருவிடம் நிலைமையை விளக்கிச் சொன்னேன்.

மனோஜா வுக்கு தூசணத்தால் திட்டிய ஞானசார

பிடிவாதமாக வாகனத்தை எனக்கு எடுக்க சொன்ன மனோஜா வாகனத்தை நான் எடுக்காவிட்டால் ஒரு அடி கூட முன்னால் நகர மாட்டேன் என்று சொன்னதால் வேறு வழியின்றி வாகனத்தை நிப்பாட்டி விட்டு, “ இந்த பெண் பிராணன்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறிவிட்டு தூசன வார்த்தை ஒன்றையும் கூறி மறுபக்கத்தால் வந்து அமர்ந்து கொண்டார். ஒருவாறு இப்படி நடந்ததும் நல்லது என்றே என் மனது சொன்னது. ஏன் என்றால் ஞானசார தேரருக்கு முறையாக வாகனம் ஓட்டத் தெரியாது. எங்காவது சென்று மோதிவிடுவாரோ என்று உள்ளத்தால் பயந்துகொண்டே அப்போது நானிருந்தேன்.

குறிப்பிட்ட அந்த பயணத்தின் போது எனக்கு மாற்றி அணிய ஆடைகளைக் கூட எடுக்காமல் தான் நான் இவர்களுடன் இணைந்திருந்தேன். அதே போல் அந்த பயணத்தின் போது எனது இளைய மகன் சுகவீனமுற்றிந்தான். அதனையும் பொருட்படுத்தாது மிகவும் சிரமத்திற்கும் தியாகத்திற்கும் மத்தியில் தான் இவர்களோடு சேர்ந்து பயணப் பட்டிருந்தேன்.

நான் ஞானசாரவை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வெகுவாக உணர்ந்திருந்தேன் ஏன் என்றால் தேசிய மட்டத்திலான பௌத்த வேலைத்திட்டமொன்று எமது நாட்டிற்கு மிகவும் தேவை என்று உணர்ந்திருந்ததால். பௌத்த மக்கள் பல வேலைத்திட்டங்களிலும் இணைந்திருது ஏமாற்றப் பட்டு ஏமாற்றப் பட்டுத்தான் இப்போது பி பி எஸ் சுடன் இணைந்துள்ளார்கள். இவர்களின் உண்மை முகம் தெரிய வந்தால் மக்கள் மீண்டும் விளகிச் சென்று விடுவார்கள். அதனால் தான் மனசாட்சிக்கு எதிராக இருந்தாலும் இவரை பாதுகாத்துக் கொண்டு நான் இவர்களுடன் சேர்ந்திருந்தேன். ஆனால் இவர்களின் உண்மையான தேவைப்பாடு ஒரு பௌத்த ராஜ்ஜியம் இல்லை. தமது சொந்த நலனிற்காக சௌகாிய வாழ்க்கையை அனுபவிக்க இவர்கள் இந்த பி பி எஸ் சை நடத்துகின்றார்கள். இது நிறுத்தப் படவேண்டும். இவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டவேண்டும்.

நான் மேற்சொன்னவை பொய் என்று நிரூபித்து காட்டுமாறுஞான சார தேரருக்கும் பி பி எஸ் தலைவர்களுக்கும் பகிரங்க சவால் விடுகின்றேன். மனோஜாவை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் பேஸ் புக்கிலும் சில ஊடகங்களிலும் வெளிவந்தன. அவை இந்த மனோஜா பிரான்சிலிருந்து பி பி எஸுக்கு உதவி செய்பவர் என்றுதான் இவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள் . ஆனால் ஞாசாரவுக்கும் மனோஜாவுக்கும் உள்ள தொடர்பை பற்றி பி பி எஸ் தலைவர்களுக்கு தெரியுமா என்பது பற்றி நான் அறியவில்லை..

முடியும் என்றால் நான் குறிப்பிட்ட பெண் பிள்ளை ஞானசாரவின் மகள் இல்லை என்பதை ஒரு “டி என் ஏ ” பரிசோதனை மூலம் நிரூபிக்க முடியுமா என்று நான் இவர்களுக்கு சவால் விடுகின்றேன். இதற்காக இந் நாட்டின் எந்தவொரு நீதி மன்றத்தையும் நான் சந்திக்கத் தயார்” என்றும் “ பொதுபலசேனா ” அமைப்பின் மிக முக்கிய தொண்டராக செயற்பட்ட ஜா எல பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த அஞ்சு பெரேரா சவால் விட்டு ஞானசாரவின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளார்.