It

Sunday, February 22, 2015

முடிந்தால் என்னைத் தேர்தலில் தோற்கடிக்கவும்!

மகிந்தவுக்கு ரணிலின் சவால்!!

முடியுமாயின் எதிர்வரும் தேர்தலில் தன்னை தோற்கடித்து வெற்றியீட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

நேற்று புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இச்சவாலை பிரதமர் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரது வாக்குகளை தன்னால் 50 இலட்சத்தை விடவும் குறைக்கவியலும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)


Thursday, February 12, 2015

இலங்கையின் அரியாசனத்தில் அமர்ந்த ஜனாதிபதிகளின் கல்வித் தகைமைகள்!


1978 ஆண்டிலிருந்து இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அரியாசனத்தில் அமர்ந்தோரின் எண்ணிக்கை மொத்தம் 06. அவர்களின் கல்வித் தகைமை வருமாறு - 

ஜே.ஆர். ஜயவர்த்தன (1978 பெப்ரவரி 04 - 1989 ஜனவரி 02)
JR
ஜே.ஆர். ஜயவர்த்தன தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு பிசப் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். கொழும்பு ராஜகீய வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்த அவர், கொழும்புப் பல்கலைக் கழகத்திலும் சட்டக் கல்லூரியிலும் தனது உயர்கல்வியைப் பெற்றுக் கொண்டார். 

ஆர். பிரேமதாச (1989 ஜனவரி 02 - 1993 மே 01)
RP
கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர்.

டீ.பீ. விஜேதுங்க (1993 மே 02 - 1994 நவம்பர் 12)
DB
கம்பொல புனித அன்ரூ வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுள் ஒருவர் 

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (1994 நவம்பர் 12 - 2005 நொவம்பர் 19)
CBK
கொழும்பு பிரிஜட் கன்னியர்மட பழைய மாணவி. பாரிஸ் பல்கலைக்கழக (சோபோன் பல்கலைக் கழகம்) அரசியல் விஞ்ஞான, சர்வதேச தொடர்பாடல் தொடர்பிலான பட்டதாரி

மகிந்த ராஜபக்ஷ (2005 நொவம்பர் 19 - 2015 ஜனவரி 09)
MR
காலி ரிஷ்மண்ட் கல்லூரி, கொழும்பு நாலந்தா வித்தியாலயம் , தர்ஸ்டன் வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவர். ஸ்ரீலங்கா சட்டக் கல்லூரியில் உயர் கல்வியைப் பெற்றுள்ளார். 

மைத்திரிபால சிரிசேன (2015 ஜனவரி 09 முதல்)
MS
 பொலன்னறுவை மகா வித்தியாலயம், ராஜகீய வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவர்களுள் ஒருவர். குண்டசாலை விவசாயக் கல்லூரியின் விவசாய டிப்ளோமாவைப் பெற்றுள்ள இவர், ரஷ்யாவின் மர்சிம் கோர்க்கி நிறுவனத்தில் அரசியல் விஞ்ஞானம் தொடர்பிலான டிப்ளோமாவைப் பெற்றுள்ளார். 

(-கலைமகன் பைரூஸ்)