It

Saturday, January 24, 2015

மகிந்தவின் இராணுவச் சூழ்ச்சி உண்மையே! -ராவய

னவாரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறு வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும்போது மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு குறைந்து வருவது தெளிவானால், உடனடியாக நாட்டில் அவசர சட்டத்தை அறிவித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் வாக்குப் பெறுபேறுகள் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு அச்சுறுத்தி, இராணுவத்தினர் நாட்டின் முக்கிய இடங்களை நிருவாகித்து மகிந்த ராஜபக்ஷ இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியாக தொடர்ந்து இருப்பதற்கு சூழ்ச்சிசெய்ப்பட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.

ராவயவிற்குத் தெரியவந்துள்ளதற்கு ஏற்ப, இந்த இராணுவ சூழ்ச்சியை கோத்தபாய ராஜபக்ஷவே முன்னெடுத்துள்ளார். அவருடைய தயாரிப்பிற்கேற்ப தேவையான போது, நாட்டின் நிருவாகத்தைக் காவுகொள்வதற்கு ஜனவாரி 8 ஆம் திகதி இரவு நேரம் ஆகும்போது கோத்தபாய ராஜபக்ஷ முன்னர் பணிபுரிந்த கஜபா ரெஜிமேன்துவுக்குச் சொந்தமான இராணுவப் படையில் பத்துப் பிரிவினரை கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் தயார் நிலையில் வைத்திருந்த்துடன், மோதர ரோக்ஹவுஸ் பாசறையில் இருந்த இராணுவனத்தினருக்குச் சொந்தமான இராணுவ வாகனங்களை வீதியில் ரோந்து செய்வதற்கு தயார்நிலைப் படுத்துமாறும் கட்டளையிட்டுள்ளார்.  அவ்வாறு தயார்நிலையில் வைக்கப்பட்ட இராணுவனத்தினர் மூலம் 8 ஆம் திகதி இரவு தொடக்கம் 72 மணித்தியாலங்கள் பொதுமக்கள்  வெளியே வராத வண்ணம் இராணுவத்தினரும் அதிகாரத்துடன் செயற்பட முடியுமாயின், இச்செயற்பாட்டுக்கு எதிரான மக்கள் சக்தியை இல்லாதொழிக்க முடியும் என சூழ்ச்சியாளர்களின் திட்டமாக இருந்துள்ளது. அத்துடன் பிரதம நீதியசரை அனுப்பி ஜனாதிபதிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்றவாறு நீதிமன்றத் தீர்மானத்தை எடுப்பதற்கும் ஆயத்த நிலையில் இருந்திருக்கின்றனர்.

இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள் ஜனவாரி மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதி கொழும்பு பிரபல இராணுவ அலுவலகங்களில் நடைபெற்றிருக்கின்றன. அத்துடன், இச்செயற்பாட்டுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் அக்கூட்டத்தில் பங்குகொண்டுள்ளனர்.

மேலதிக செய்திகள் உடன் பதிவேற்றப்படும்.. தொடர்பில் இருங்கள்...

(தமிழில் - கலைமகன் பைரூஸ்)

0 comments:

Post a Comment