It

Tuesday, December 30, 2014

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் நாடு கேட்கவில்லை...! – சம்பிக்க

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளருக்கு ஆதரவு தர வந்திருப்பது முஸ்லிம் அலகு கேட்டல்ல என ஜாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்.

மைத்திரிபால சிரிசேன, அம்பாறை மாவட்டத்தில் தனியான முஸ்லிம் அலகினைத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரஸுடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. இவ்வாறான பொய்ப் பிரச்சாரம் ஒன்று முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இது வெறும் பொய் என சம்பிக்க கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டார்.

மைத்திரிபால சிரிசேனாவின் பொதுக் கொள்கை வெளியீட்டுடன் உடன்படுபவர்கள் மாத்திரமே கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இதுதான் எல்லோரினதும் கொள்கையாகும். அது பொதுக் கொள்கையே தவிர ரவூப் ஹக்கீமினதோ, சம்பிக்க ரணவக்கவினதோ, ரணில் விக்கிரசிங்கமவினதோ கொள்கையல்ல. பொதுக் கொள்கையின் அடிப்படையில் நாம் செயற்படுவதால் எந்தவொரு முறையிலும் முஸ்லிம் அலகு வழங்குவதற்கு வாக்குறுதி வழங்கப்படவில்லை” எனவும் ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)


Wednesday, December 24, 2014

எனக்குப் பயனேது? (கவிதை)



வைத்தியர் கொடுத்த துண்டு என் கையிலே
மருந்து வாங்க ஐந்து சதம் இல்லை கையிலே
மரண பயம் இப்போது என் மனதிலே 
கொடுத்த துண்டினால் பயனேது என்னிலே!

வடக்கின் வாக்குகள் யாருக்கு?


ரீ.என்.. இம்முறை ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமா?”
பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஒத்துழைப்பதற்கு மைத்திரி ரீ.என்.ஏ இடையே கைச்சாத்து
“சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்று இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக செய்ய வேண்டியது என்ன? என இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை”
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கின்ற சொற்ப காலத்திலும் கூட இப்பேச்சுக்கள் அடிக்கடி அடிபடுகின்றன. தலைப்பு யாதெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பதாகும். சென்ற வாரம் லங்காதீப பத்திரிகையின் முதல் பக்கச் செய்தியில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கவுள்ளதாகவும், பொது வேட்பாளர்கள் இருவரிலும் யாரேனும் ஒருவருக்கு உதவ முன்வருவதாகவும், பொது வேட்பாளரான மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு நல்கவுள்ளதாகவும, ரீ.என்.ஏ மூன்றாகப் பிரிந்து தங்களது பிரிவுக்குள் கட்சியை வழிநடாத்திச் செல்வதற்கு முயல்வதாகவும் குறிப்பிட்டிருந்தது. 

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும்போது ரீ.என்.ஏ பொன்சேக்காவின் வழியிலேயே நின்றிருந்தது. என்றாலும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரீ.என்.ஏ. எந்தப் பாதையைத்தான் தெரிவு செய்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒருபுறம் ஜனாதிபதி மகிந்தவின் வழியில்… மறுபுறம் பொதுவேட்பாளர் மைத்திரியின் வழியில். அவ்வாறன்றி வேறுபாதைகள் அவர்களுக்குக் காட்சியளிக்க மாட்டாது எனக் குறிப்பிட முடியும். மற்றொரு புறத்தில் எல்.ரீ.ரீ. யினரின் போர்த் தோல்வியும், தேசிய பிரச்சினைக்கு தீர்வு தேடி பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டவை அரசினால் கண்டு கொள்ளப்படாமையும் ரீ.என்.ஏ வும் அரசாங்கமும் ஒரே பாதையில் பயணிப்பதில் தடையாக உள்ளது என்பது மட்டுமன்றி அவ்வாறு பயணிக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியாதுள்ளமையாகும்.

எது எவ்வாறாயினும் மீண்டும் ஒருமுறை வடக்கு கிழக்கின் வாக்குகளுக்கு அதிக பெறுமதியிருக்கத்தான் செய்கிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது, வடக்கில் ஏழு இலட்சம் வாக்குகள்தான் இருக்கின்றன. என்றாலும், இந்த வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலைத் தீர்மானிப்பதில்லை எனச் சொல்லவியலாது. 2005 ஜனாதிபதித் தேர்தலின்போது இதுபற்றி நன்கு தெளிவானது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் அச்சுறுத்தலினால் வடக்கு – கிழக்கில் உள்ள மக்கள் வாக்களிக்கவில்லை. ஆயினும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது மகிந்தவே. மகிந்தவுக்கு 48,87,152 - (50.29%) வாக்குகள் விழும்போது, ரணிலுக்கு 47,06,366 - (48.43%) வாக்குகள் மட்டுமே விழுந்தது. இரண்டிற்கும் இடையிலான இடைவெளி 1,80,786 ஆக இருந்தது. 2005 இல் வடக்கின் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் 2005 இல் நாட்டை ரணிலே பொறுப்பேற்றிருப்பார். இதன் சிறப்பு என்னவென்றால், ரணிலை விடவும் மகிந்தவுக்கான பௌத்தர்களின் பங்களிப்பு அதிகம் என்பதாகும். தெற்கின் சிங்கள சமூகத்தினிடையே மகிந்தவுக்கு வாக்குகள் கிடைத்தவாறே ரணிலுக்கும் கிடைத்தது என்பதுதான் வெளிப்படையான உண்மை. பெறுபேற்றின்படி மகிந்த இரண்டு இலட்சம் வாக்குகளை விடவும் குறைந்த அளவிலேயே அரியாசனத்தில் ஏறுவதற்கு வரம் பெற்றார்.


நாங்கள் இதுவரை முடிவெடுக்கவில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

கேள்வி : உங்களுக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக பேசப்படுகின்றதே. அதில் உண்மையுள்ளதா? 

கேள்வி : ரீ.என்.ஏ வில் ஒரு பகுதியினர் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கவுள்ளதாகவும், இன்னொரு பகுதியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தாங்கள் ஏது செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்களா?
பதில் : நாங்கள் இதுவரை தீர்மானிக்கவில்லை. எங்கள் கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றிருக்கின்றார். அவர் இலங்கைக்கு வந்ததும் நாங்கள் முடிவெடுப்போம்.


கேள்வி : என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடக்கிலுள்ள மக்கள் தங்களுக்கு விரும்பிய எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தாரே?
பதில் : அது அவரது சொந்த முடிவாக இருக்கலாம். என்றாலும் நாங்கள் பொதுமக்களுக்குச் சொல்வது என்னவென்றால் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லுங்கள் என்பதே. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் பொறுப்புடன் செயற்படுகின்ற கட்சி என்பதால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எங்களுக்குள்ளது.

கேள்வி : உங்களுக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக பேசப்படுகின்றதே. அதில் உண்மையுள்ளதா? 
பதில் : உண்மையில் மகிந்த ராஜபக்ஷவாக இருக்கட்டும், மைத்திரிபால சிரிசேனவாக இருக்கட்டும். இருவரில் எந்தவொரு நபரும் இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை எந்தவொரு கருத்தும் முன்வைக்கவில்லை. நாங்கள் இவை அனைத்து தொடர்பிலும் எங்கள் தலைவர் இலங்கைக்கு வந்தபின்னர் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்.


நாங்கள் மைத்திரியுடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் 


கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது?
பதில் : நாங்கள் அதுதொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை.

கேள்வி : அதை வைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?
பதில் : இல்லை. அவ்வாறான எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எங்கள் தமிழ் மக்கள் இருக்கின்ற இடங்களுக்குச் சென்று அது தொடர்பில் உரையாடி வருகின்றோம். என்றாலும், எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டதாக இல்லை.

கேள்வி : என்றாலும் உள்ளே ஒரு பிரிவினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடுகையில், தாங்களோ நீங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களியுங்கள் எனக் குறிப்பிடுகிறீர்கள். பிரச்சினையொன்று இருக்கின்றது தானே?
பதில் : இல்லை. பல்வேறு கருத்துக்கள் வெளிவருவது சாதாரணமானது. இந்நேரம் நாங்கள் பொதுமக்களின் கருத்துக்களை கணிக்கின்றபோது எல்லோரும் ஒரே கருத்தைச் சொல்ல மாட்டார்கள்தானே. அவ்வாறான அவர்கள் அனைவரினதும் கருத்துக்களைக் கணித்து நாங்கள் இறுதியில் ஒரு தீர்மானம் எடுப்போம். 

கேள்வி : ரீ.என்.ஏ. மைத்திரிபால சிரிசேனவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்ற பேச்சில் உண்மையுள்ளதா? 
பதில் : அது பெரும் பொய். அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை.

கேள்வி : குறைந்தளவு அவருடன் அவ்வாறான பேச்சுவார்த்தையில் கூட ஈடுபடவில்லையா? 
பதில் : நாங்கள் எல்லோருடனும்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றோம். என்றாலும் எங்கள் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நாங்கள் யாருடனும் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை.

கேள்வி : அரசாங்கத்துடன் இதுதொடர்பில் கலந்துரையாடினீர்களா?
பதில் : தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில்லை என அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது. அதனை அநுர பிரியதர்சன யாப்பா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டபோதும் அறிவித்தார். அதற்கேற்ப, அரசாங்கம் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என நாங்கள் நினைக்கவில்லை.

கேள்வி : சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றதற்கான காரணம் ஜனாதிபதித் தேர்தலின்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கலந்தாலோசிப்பதற்காகவே ஆகும் எனவும் ஒரு பேச்சு அடிபடுகின்றதே. அது உண்மையா?

பதில் : இல்லை. இல்லவே இல்லை. சம்பந்தன் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவரின் வைத்திய பரிசோதனைக்காகச் செல்கின்றார். தற்போதும் அவர் வைத்தியசாலையில்தான் இருக்கின்றார்.

Monday, December 8, 2014

மகிந்தவுக்கு முடியாது என்பது....?

மகிந்தவுக்கு மூன்று முறை முடியுமா? இன்று அரசியல் வட்டாரத்தில் நிலைகொண்டுள்ள தலைப்பு இதுதான். ஜனாதிபதித் தேர்தல் போன்ற நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க வேண்டிய காலப்பகுதியில் ஏற்பட வேண்டிய கொள்கைகள், எதிர்கால நோக்கு முதலியன பற்றி கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. முக்கியமாக சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அரசியலில் புதுமுகமாக இணைந்துகொண்ட சரத் பொன்சேக்கா “பொது வேட்பாளர்” பலகை தொங்கவிடப்பட்டு அரசியலுக்குள் தள்ளிவிடப்பட்டார். அந்த அரசியல் விகாரத்தின் மற்றொரு தொடர்ச்சியாக “மும்முறை முடியாது” என்ற நீளமான பேச்சு சப்பை போடு போட்டுள்ளது ஆச்சரியமானதன்று!


சிலர் மேற்கத்தேயத்தின் தீமைகளைச் சொல்லிக் கொண்டிருக்க, மற்றும் சிலர் மேற்கத்தேயத்தைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்க மேற்கத்தேயத்திலோ இவ்வாறான விடயங்களைக் காணவியலாது. முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தல் ஒன்றின்போது அந்நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பது நாட்டில் வளர்ச்சி பற்றிய தூரநோக்கிற்கே. அவ்வாறான்றி இவ்வாறான சில்லறைப் பிரச்சினைகள் பற்றி துளியும் கருத்திற் கொள்ளாது. ஊடகங்களும் அதனோடு ஒட்டிய ஏனைய துறைகளும் நாட்டின் எதிர்காலம் பற்றி தூரநோக்கையே தங்களது பிரதான செய்திகளாகக் கொள்ளும். பெரும்பாலும் இவ்வாறு இடையில் சொருகிக் கொண்ட தலைப்புக்களுக்குப் பதிலாக பொருளாதார நிலை, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வெளிநாட்டுத் தொடர்புகள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை சுட்டிக் காட்டவியலும்.

என்றாலும் துரதிர்ஷ்டவசமாக எங்களில் எவரோ வடிவமைத்துத் தருகின்ற ஒரு குறித்த நேரத்திற்கு மாத்திரம் பொருந்துகின்ற தலைப்பில் நாங்கள் சிறைப்பட்டிருக்கின்றோம்.


சரத் என் சில்வாவின் வாதம்



(தொடரும்... இணைந்திருங்கள்)
தமிழில் - கலைமகன் பைரூஸ்