It

Friday, November 28, 2014

ஊடக சுதந்திர ஆர்.கே.டப்ளியூ அறிக்கையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு...

இலங்கையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகவிருந்த ஆர்.கே.டப்ளியூ. குணசேக்கர சென்ற புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டார்.

சுதந்திர ஊடகங்கள் வாயிலாக அன்னார் நன்கு பிரபல்யப்படுத்தப்பட்டார். உண்மையில் அவர் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை முழுமைப்படுத்துவான் வேண்டி, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்.

ஆர்.கே.டப்ளியூ. குணசேகர கமிட்டியின் அறிக்கை எனும் பெயரில் இலங்கையின் அரசியல் அகராதியிர் உள்ள சட்ட மறுசீரமைப்புத் தொடர்பிலான அறிக்கை 1996 இலிருந்து  இன்றுவரை காணப்படுகின்ற முக்கிய அறிக்கையாகும்.

1994 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் மிக முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாக ஊடக சுதந்திரத்தை முழுமைப்படுத்துவதற்காக நான்கு முக்கிய கமிட்டிகள் நியமிக்கப்பட்டது.

இந்த நான்கு கமிட்டிகளினாலும் முன்வைக்கப்பட்ட அறிக்கை, சந்திரிக்கா குமாரதுங்க அரசினாலோ, ரணில் விக்கிரமசிங்க அரசினாலே, மகிந்த ராஜபக்ஷவின் அரசினாலோ (1996 ஆம் ஆண்டு முதல் பதவிக்கு வந்த எந்தவொரு அரசினாலும்) ஏறிட்டும் பார்க்கப்படவில்லை. உத்தியோகபூர்வமாக அது அறிவிக்கப்படவுமில்லை. நான்கு கமிட்டிகளினதும் முக்கிய பிரிவாகிய ஊடக சுதந்திரத்திற்கு ஏற்புடையதான சட்ட மீளமைப்பிற்கான கமிட்டியின் முக்கிய பொறுப்பை ஆர்.கே.டப்ளியூ. குணசேக்கரவே ஏற்றார். இலங்கையின் பிரபல்யம்மிக்க மனித உரிமைகள் தொடர்பான எழுத்தாளரும் வழக்கறிஞருமான கிஷாலி பின்தோ ஜயவர்த்தன இதுபற்றிக் குறிப்பிடும்போது, இவ்வறிக்கையானது “இலங்கை ஊடக மறுசீரமைப்புத் தலைமைத்துவத்தின் ஆரம்பம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடும் போது “ ஊடகத்துறையுடன் தொடர்புடைய அனைத்துடனும் தொடர்புற்றது”  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்...)