It

Tuesday, August 26, 2014

முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு பம்மாத்து வாங்கும் சிங்கள முகமூடிகள்…!

முஸ்லிம் பிரச்சினை தொடர்பில் இதற்கு முன்னொரு போதும் இல்லாத அரசியல் பிரச்சினை தற்போது நாட்டில் முளைத்தெழுந்துள்ளது. அளுத்கமவில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான இனவாதப் பிரச்சினையும் அந்தப் பிரச்சினையின் ஒரு கெட்ட செய்தியே. அத்துடன் தற்போது அந்தப் பிரச்சினையானது பல்வேறு விதத்திலும் சமூக அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நாட்டு இலக்கிய, கலாநிலையங்கள் கூட இதுதொடர்பில் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து நிற்கின்றன. அளுத்கம பிரச்சினையானது சர்வதேசத்திற்கு பாரிய தலைப்பாக இல்லாதபோதும் இந்நாட்டில் மாற்றுக் கருத்துடையோராக இருந்தோருக்கு பாரிய இனிப்பாகவும், பல்வேறு தேடல்களின் பால் செல்வதற்கு வழிசமைப்பதாகவும் அமைந்துள்ளது. இந்தக் கட்டுரையை எழுவதன் நோக்கம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி அலசுவதற்காக அல்ல. இப்பிரச்சினையை வைத்துக்கொண்டு, பல ஆண்டுகளாக மாற்றுக்கருத்துடன் மற்றவர்களின் பிரச்சினைகளைக் கண்டு குளிர்காய நினைப்பவர்கள் பற்றி…. அவர்களிடத்து இருக்கின்ற மாற்றுச் சிந்தனைகள் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.


பிரச்சினையின் பின்னணி


மத, தேசிய எல்லையை ஒருபக்கம் நிறுத்திவிட்டு, ஒருபக்கம் சாராமல் மனிதத்துவத்துடன் எடுத்துநோக்கும்போது, பௌத்த கலாசாரம், இஸ்லாமிய கலாசாரத்துடன் ஒத்துப்போகின்ற உலகத்தால் பெரும்பாலும் விரும்பப்படுகின்ற, ஒத்துழைப்பு நல்குகின்ற ஒன்றாகும். அதுவே தெளிவான உண்மையாகும். மாறாக ஏனைய கலாசாரங்களை தப்பெண்ணத்துடன் நோக்கும் தன்மையுடையதன்று. இஸ்லாம் என்பது இயல்பாகவே அடிப்படைவாதத்திற்கு பெரும் பங்களிப்பு நல்குகின்ற, சிந்திப்பதற்கு சிறிதாக இடமளிக்கின்ற, மாற்றங்களுக்கு இலகுவில் இடமளிக்காத ஆக்கிரமிப்புடன் கூடிய கட்டுப்பாடுமிக்கது. என்றாலும் அதனைக் கேட்டவுடனே கலாசார பாரம்பரியம்மிக்க பல நூற்றாண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக யாராலும் செயற்பட இயலாது.  அவர்களின் சுதந்திர இருப்பை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வர். என்றாலும், பல்கூட்டு உலகில் வாழுங்கால் பொதுநலனுக்காக தங்களது கலாசார ஈர்ப்பினை சற்றுத் தளர்த்திக் கொள்வது எந்தவொரு இனத்தினதும் மதத்தினதும் கடமையாகும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.  முஸ்லிம் புத்திஜீவிகள் செய்ய வேண்டிய சரியான வழிமுறை ஏதென்றால், தங்கள் மத விழுமியங்களுக்கும் காலத்திற்கும் ஏற்ப நவீன உலகிற்கு ஏற்ப அர்த்தபுஷ்டியான புதுவிடயங்களை எடுத்துரைக்க வேண்டும். அனைவருக்கும் நன்மை பயக்கின்ற மாற்றுக்கருத்துக்களுக்கு முகங்கொடுக்க முடியுமான முறையிலான அவ்வாறான உள்நுழைவு இஸ்லாமியர்களுக்கு இன்று தேவைப்பாடாகவுள்ளது. 


ஆயினும் இன்று உலகில் நாங்கள் சந்தித்திருப்பது காலத்திற்கு தேவையானதாக அன்றி, படுபயங்கரமான அடிப்படைவாதத்தில் மூழ்கியுள்ள, பயங்கரவாத சக்தியினூடாக மதத்தைப் பரப்புகின்ற, மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புடன் கூடிய இஸ்லாமே. சம்பிரதாய ரீதியிலான முஸ்லிம்கள் கூட அச்சத்திற்குள்ளாகியுள்ள இந்த ஜிஹாத் அடிப்படைவாதமானது இன்று உலகத்தையை தீப்பற்ற வைத்துக் கொண்டிருக்கின்ற படுபயங்கரமான பிரச்சினையாக இருக்கின்றது. மறுபுறத்தில் மேற்கத்தேயம் கூட இந்த பயங்கரவாத அடிப்படைவாத சக்தியை தங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சாதமாக பயன்படுத்திவருகின்றது. தங்களது நாடுகளுடன் கைகோர்த்துக் கொள்ளாது தங்களுக்கு எதிராக இருக்கின்ற நாடுகளை குட்டிச் சுவராக்கும் நோக்கத்திற்காக இந்த ஜிஹாத் அமைப்புக்கு கைகொடுகின்றன. இன்னும் சொல்லப்போனால், பல்வேறு திட்டங்களினூடாக செயற்படுகின்ற இதன் ஒரு அங்கமாகவே இலங்கையில் தற்போது கிளர்ந்தெழுந்துள்ள சிங்கள – முஸ்லிம் பிரிவினைவாதத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறன்றி இந்த சிங்கள – முஸ்லிம் பிரச்சினையை அளுத்கமவின் கலவரத்துடன் அல்லது சிங்கள மதகுருமார் பற்றிய காரமான பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவியலாது.

(தொடரும்... இணைந்திருங்கள்...)

1 comments:

  1. கருத்துரைகள் ஆக்கப் பணிகளுக்குத் தீனி போடும்...! கட்டுரை தொடர்பில் உங்கள் கருத்துரைகளையும் இணைத்துவிடுங்கள்...!

    ReplyDelete